அடையாள விபரீதம்

நீயா எழுதினாய் இதையெல்லாம்
நோட்டுப்புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த
வெகுநாள் கழித்துப் பார்க்கவந்த நண்பன்
விலகாத ஆச்சரியத்தில் கேட்டுவைத்தான்
இரைதேடி சுவரில் ஊரும் பல்லியைப்போலே
கிடைக்காத பெண் தேடித் திரியும் மடையன் என
வேலைகூட வகையாக வாய்க்காது
சேலைக்கடையில் விரித்துப்போடு்பவனென
மொத்தத்தில் ஒரு தெண்டப் பிண்டமென
ஊர் உலகத்தைப்போலே ஒழுங்காகக்
கணித்து வைத்திருந்தவனின் வாய் மீண்டும்
நீயா என ஆரம்பிக்கையில்
மறித்துச் சொன்னேன் அழுத்தமாக
இல்லை உனக்குத் தெரிந்தவனுடையதல்ல
தெரிந்திருக்க சாத்தியமே இல்லாத
வேறொருவனின் கிறுக்கல் இது என்று

*

15 thoughts on “அடையாள விபரீதம்

 1. “உனக்குத் தெரிந்த நான் வேற ஆள். இந்த நான் உனக்குத் தெரிவதற்கு முன்” என்று சொல்லாமல் சொன்னாரோ!

  Liked by 1 person

 2. சில சுய அடையாளங்களை பிறர் புரிந்து கொள்வது முடியாத செயல்! அவரவர்க்கு தோன்றுவதுதான் அர்த்தம்!

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம் : உண்மை. ஒரு விஷயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய்ப் புரிகிறதுதான். அதை அவர்களால் தாண்டிச் செல்லமுடிவதில்லை!

   Like

 3. சென்னையில் என்னை பார்க்க வந்த சில நண்பர்களிடம் என் வலைத்தள்ப்பதிவுகளைக் காண்பித்தேன் அவர்கள் என்னிடம்கேட்டது நினைவுக்கு வருகிறது நீ எழுதியதா இல்லை உன்னுள் ஏதாவது குறளி இறங்கி எழுத வைத்ததா

  Liked by 1 person

  1. @ Balasubramaniam G.M :

   ஒன்றல்ல, இரண்டு மூன்று குறளிகள் எனக்குள் இறங்கியுள்ளன என்று சொல்லியிருக்கவேண்டும்!

   Like

 4. //உனக்குத் தெரிந்தவனுடையதல்ல
  தெரிந்திருக்க சாத்தியமே இல்லாத
  வேறொருவனின் கிறுக்கல் இது என்று//

  எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்க சாத்தியமே இல்லை.
  சில நமக்கு மட்டுமே தெரிந்தவை.
  நம்மைப் பற்றிய கணிப்பு ஏதாவது அழுத்தமாய் வைத்து இருப்பார்கள்.அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

  Liked by 1 person

 5. தெரிந்திருக்க சாத்தியமே இல்லாத
  வேறொருவனின் கிறுக்கல் இது

  இது தான் அடையாளம். சரி

  இந்த அடையாளம் அவருக்கு ஏன் விபரீதமானது?

  சிந்திக்க வேண்டிய விஷயம். சிந்திக்க வைத்த கவிதை!

  Liked by 1 person

 6. //நீயா என ஆரம்பிக்கையில்
  மறித்துச் சொன்னேன்//

  சே..சே… தப்புப்பண்ணிட்டீங்க ஏ அண்ணன்.. அவர் சொல்ல வந்ததே வேறு:) இடையில நிண்டு மறிச்சுப் போட்டீங்களே… ஃபுட்போல் மச் ஐப் போல:)

  Liked by 1 person

 7. துளசிதரன் : நன்றாக இருக்கிறது வரிகல். உண்மைதான் நம்மைக் குறித்து வேறு ஒரு பிம்பம் வைத்திருப்பவர்களுக்கு நாம் செய்வது வியப்பைக் கொடுத்து “அட நீயா இது” என்று கேட்க வைத்துவிடுகிறது.

  கீதா: ஏகாந்தன் அண்ணா ஒருவரை ஒவ்வொருவரும் ஒரு அடையாளம் அல்லது ஜட்ஜ்மென்ட் வைத்திருக்கிறார்கள். அதாவது அது அவர்களின் புரிதலின் படி என்று சொல்லலாம். அதாவது இவன்/ள் இவ்வளவுதான் என்று ஒரு ஜட்ஜ்மென்ட். அதனால் அதன் ஜட்ஜ்மென்டிலிருந்து அல்லது அவர்கள் வைத்திருக்கும் ஒரு ஃப்ரேமிலிருந்து ஒருவர் விலகி இருந்தால் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகி அவர்களுக்கு அது வியப்பாகிவிடுகிறது…..அடையாளம் என்பதே ஒவ்வொருவரின் ஜட்ஜ்மென்டில் மாறுபடுகிறதே!!

  சிலர் இவன்/ள் இப்படித்தான் என்று முடிவே கட்டி அதை வைத்துக் கொண்டேதான் இறுதிவரை பயணிப்பார்கள். அந்த ஜட்ஜ்மென்டை வைத்து அடையாளப்படுத்துவது நெவர் ஜட்ஜ் அ பெர்சன் என்பதை இந்த உலகம் கடாசிவிட்டு //மொத்தத்தில் ஒரு தெண்டப் பிண்டமென ஊர் ஊர் உலகம் ஒழுங்காகக் கணித்து வைத்துவிடுகிறது!

  Liked by 1 person

  1. @துளசிதரன், @ கீதா:

   இந்த ’பிம்பம்’ படுத்தும்பாடு இருக்கிறதே, சொல்லி முடியாது! இதனைப்பற்றி ஜேகே சொல்லியிருந்ததைத்தான் எபி-யில் பட்டாபி ராமன்/கீதாவுக்கான பதிலில் சொல்லியிருந்தேன்.

   நவீனத் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான ஆதவன் எழுதிய ‘காகித மலர்கள்’ நாவல் கிடைத்தால் நிதானமாகப் படித்துப்பாருங்கள். இந்தப் பிம்பப் பிரச்சினையை மையமாகக் கொண்டு அருமையாகப் பின்னி எழுதியிருப்பார். Centers around complex milieu of Delhi’s Tamil middle class ..

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s