அப்படிப் பார்த்தால் ..

வாழ்க்கையில் யார் உங்கள் முன்னே செல்கிறார்கள், யார் உங்கள் பின்னால் வருகிறார்கள் என்பதல்ல, யார் உங்களுடன் வருகிறார்கள் என்பதே முக்கியம்.

– ஸ்வாமி வாட்ஸப்பானந்தா

ஸ்வாமி, இங்கே ஒன்றை கவனித்ததாகத் தெரியவில்லை. அல்லது மேற்கொண்டு விளக்கவில்லை. சிஷ்யை இன்று லீவு என்பதால் மூடு அவுட்டாகியிருக்கலாம். அந்த விஷயத்தை –சிஷ்யை விஷயத்தையல்ல- ஸ்வாமி கவனிக்காதுவிட்டுவிட்ட விஷயத்தை, கொஞ்சம் தொடர்வோம்.

யார் உங்களுடன் வருகிறார்கள் என்பது முக்கியந்தான். ஆனால் அது யாரைச் சார்ந்தது? யாரைவைத்து, கூடவே இனிக்க இனிக்கவோ அல்லது இடித்துப் பேசிக்கொண்டோ வருபவர் முக்கியம்? உங்களை வைத்துத்தான். எப்படி உங்களை நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள், எத்தகைய மனிதராய் இருக்கிறீர்கள், எப்படி வெளிஉலகுக்குத் தெரிகிறீர்கள் என்பதைப் பொறுத்ததுதான் யார் உங்களுடன் வருகிறார்கள் அல்லது இனியும் வருவார்கள் என்பதெல்லாம்.

அதனால் வாழ்க்கையில் உங்களின் முன்னே யார், பின்னே யார் என்பதல்ல பிரமாத விஷயம். உங்கள்கூடவே சதா வந்துகொண்டிருப்பவர்கூட, அவர் எவ்வளவுதான் அன்புக்குரியவராயிருப்பினும், சிறந்தவராக இருப்பினும் ஓரளவுக்குத்தான் அவரது முக்கியத்துவமும். அதற்கு மேலில்லை. பின்னே? இவை எல்லாவற்றுக்குமிடையே, நடுநாயகனாக அல்லது நாயகியாக நிற்கும் நீங்கள்தான் இங்கே உன்னிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது. மற்றவர்களிடம் மட்டுமல்லாது, உங்களிடமேகூட நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், யாராக, எத்தகையவராக உண்மையில் இருக்கிறீர்கள், இந்த உலகில் வாழ்கிறீர்கள் – இதுதான் இங்கே விஷயமே. இதில் உன்னதம் இல்லையெனில் வேறொன்றும் பெரிதாக எந்தவித பாதிப்பையும் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடாது. நீங்கள்தான் இந்த உலகத்தில் உங்களுக்கு எல்லாம். வேறெதுவும், யாரும் இல்லை.

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் and tagged , , . Bookmark the permalink.

16 Responses to அப்படிப் பார்த்தால் ..

 1. athiramiya says:

  ஆஆஆஆஆஆவ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:))..

  Liked by 1 person

 2. athiramiya says:

  ///கூடவே இனிக்க இனிக்கவோ அல்லது இடித்துப் பேசிக்கொண்டோ வருபவர் முக்கியம்?/// ஹையோ ஏகாந்தன் அண்ணன் நோக் போகும்போது ஆரு வந்து இடிச்சதூஊஊஊஊஊஊ?:)) கடவுளே காலையிலேயே எனக்கென்னமோ ஆச்ச்ச்ச்சூஊஊஊ:))..

  Liked by 1 person

 3. athiramiya says:

  ///மற்றவர்களிடம் மட்டுமல்லாது, உங்களிடமேகூட நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், யாராக, எத்தகையவராக உண்மையில் இருக்கிறீர்கள், இந்த உலகில் வாழ்கிறீர்கள் – இதுதான் இங்கே விஷயமே. ///

  100 வீதம் உண்மையான தத்துவம்…. அடுத்தவர் பார்க்கவில்லை என சொந்தப் புத்தியைக் காட்டுவதும்.. அடுத்தவர் பார்க்கும்போது மட்டும் மிக நல்லவராக நடிப்பதுக்கும் சிலர் இருக்கிறார்கள். இவர்களோடு நேரில் பழகினால் மட்டுமே கண்டு பிடிக்கலாம்…

  Liked by 1 person

 4. Aekaanthan says:

  @ athiramiya : //..100 வீதம் உண்மையான தத்துவம்…//
  வருக!
  தத்துத்துவம் தட்டுப்பட்டது உங்களுக்கு. ஞானியல்லவா !

  Like

 5. சாலை சிக்னல் வேலை செய்யாத, போக்குவரத்துக் காவலர் இல்லாத இரவு நேரங்களில் சாலை விதிகளை யார் மதிக்கிறார்களோ…

  இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் சென்னை படுமோசம்!

  Liked by 1 person

 6. முன்னால் எஸ் எம் எஸ் தத்துவங்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது ஆன்டிராய்ட் காலம் அல்லவா? வாட்ஸாப் வலம் வருகின்றன!

  Like

  • Aekaanthan says:

   @ ஸ்ரீராம் :
   வாட்ஸப்பில் நித்தம் நித்தம் பல அபத்தங்களுக்கு நடுவே, ஒன்றிரண்டில் கொஞ்சம் விஷயமிருக்கும். பெரும்பாலும். படிக்காமலே ஃபார்வர்டு செய்யும் அசமழிஞ்சங்கள். காலம் வெளிப்படுத்தும் கோலம்..

   Like

 7. வந்தவரெல்லாம் தங்கி நின்றால் இந்த மண்ணில் நமக்கே இடமேது

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @Balasubramaniam G.M : அந்தக் கவலை வேண்டாம். இங்கே எல்லாம், போனால் வராது. பொழுதுபட்டாத் தங்காது !

   Like

 8. //நீங்கள்தான் இங்கே உன்னிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது. மற்றவர்களிடம் மட்டுமல்லாது, உங்களிடமேகூட நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், யாராக, எத்தகையவராக உண்மையில் இருக்கிறீர்கள், இந்த உலகில் வாழ்கிறீர்கள் – இதுதான் இங்கே விஷயமே. //

  நன்றாக சொன்னீர்கள்.

  ஸ்வாமி வாட்ஸப்பானந்தாவால் நல்ல சிந்தனை முத்து கிடைத்தது.

  நீங்கள்தான் இந்த உலகத்தில் உங்களுக்கு எல்லாம். வேறெதுவும், யாரும் இல்லை.//
  “உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதியும் எனக்காக மலர்கள் மலர்ந்தது எனக்காக”

  பாடல் நினைவுக்கு வருது.

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ கோமதி அரசு:
   சில நாட்களுக்குப்பின் இன்றுதான் என் பக்கத்துக்கே வந்து உங்கள் கருத்தைக் கவனித்தேன். நன்றி.

   இங்கே நான் சொல்லவந்தது சுயநலமாக இருப்பதைப்பற்றி அல்ல. ’சுயம்’ என்று ஒன்று நம்மில் இருக்கிறதே, அதை நன்றாக அவதானிக்கவேண்டும் என்பதையே குறித்தேன்..

   Like

 9. தன்னைத் தானே அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

  Liked by 1 person

 10. உங்களிடமேகூட நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், யாராக, எத்தகையவராக உண்மையில் இருக்கிறீர்கள், இந்த உலகில் வாழ்கிறீர்கள் – இதுதான் இங்கே விஷயமே.//

  யெஸ் செம …உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்…வரிகளும் நினைவுக்கு வருது…

  நம் அட்டிட்யூடைப் பொருத்தே நம்முடன் கூட வருபவர்கள் அமையும் நன்றாக இல்லை எனில் நம்மை நெருங்கவே பயப்படுவார்கள். நாம் நம்மை அறிந்து கொண்டுவிட்டால் நல்லது….

  Like

 11. Aekaanthan says:

  @ கீதா: //..உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்…வரிகளும் ..//

  போராட ஏதுமில்லை. (எம்ஜிஆருக்கு இங்கு எண்ட்ரி இல்லை!) அமைதியோடு இருந்துவிடலாம்.

  நம் ‘இருத்தலை’ப்பற்றிய பிரக்ஞை இல்லாதிருக்கிறோம், பெரும்பாலும்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s