அன்றும் இன்றும் என்றும்

இந்த உலகில் பலர் மனமில்லாதவர். மனமில்லாதவர் என்றால் ஏதோ மனம் எனும் ஒன்றை, ஒரு entity-ஐ, அது எதுவாயினும், அதை, கடந்து சென்றுவிட்ட ஞானி என இங்கே அர்த்தமில்லை. மெய்யியல்பற்றியல்ல பேச்சு. மனமில்லாதவர் என இங்கே குறிப்பிடுவது யாருக்காகவும் எதையும் செய்ய விரும்பாதவர்களை. ஒரு துரும்பையும்கூடத் தூக்கிப்போட மனமில்லாதவர்கள். உலகம் என்பதும் வாழ்க்கை என்பதும் இவர்களைப் பொறுத்தவரை இவர்களேதான். வேறொன்றுமில்லை. இந்த லட்சணத்தில் அடுத்தவனாவது, கஷ்டமாவது, உதவியாவது, மாற்றமாவது, மண்ணாங்கட்டியாவது.. போங்கப்பா அந்தப்பக்கம்.. என்றிருப்பவர்கள். தங்களைத் தாண்டி வேறெதிலும் இஷ்டமில்லாதவர்கள். இப்படிப்பட்டவர்களால்தான் இந்த உலகம் எப்போதும் நிரம்பி வழிகிறது. மத்லபி என்பார்கள் வடநாட்டில். அதாவது அதிசுயநலவாதிகள்.

இத்தகையோர் விரவிக் கிடக்கும் உலகில், ஆங்காங்கே கொஞ்சம்பேர் வித்தியாசமாகத்தான் தெரிவார்கள். அவர்களிலும் பலர் அமைதியாகவே இருப்பார்கள். சிலர் தலை உயர்த்தி, மாற்றம், புரட்சி, புது உலகம் என்றெல்லாம் சத்தம்போட்டிருக்கிறார்கள். இது அப்போதும் நடந்திருக்கிறது. இப்போதும் சிலர் தலையை சிலுப்பிக்கொண்டு, புதிதாக எதையோ கண்டுபிடித்துவிட்டவர்களைப்போல் கூவித் திரிகிறார்கள். இனிவரும் காலத்திலும் இத்தகைய ப்ரக்ருதிகள் தோன்றத்தான் செய்வார்கள். ஒரேயடியாக முஷ்டியை உயர்த்தி, தொண்டை கிழிய கோஷம் போடுவார்கள். ஏதேதோ செய்ய முனைவார்கள். அல்லது அதற்காக ஆள் சேர்ப்பார்கள். அவர்களால் எல்லாம் ஒன்றும் நிகழாதா என்று கேட்கலாம். நிகழலாம் ஏதோ கொஞ்சம் இங்கேயும் அங்கேயுமாக. அல்லது நிகழ்வதாக, ஏதோ நடந்துவிட்டதாகக் கூடத் தோன்றலாம். பிறகு மீண்டும் எல்லாம் பழைய குருடி.. கதவத் திறடி.. என்றாகிவிடும். எப்போதும்போலவே, எருமைமாட்டுக்கணக்காய், எல்லாவற்றையும் உள்ளேதள்ளி மெல்ல அசைபோட்டு நடந்துபோய்க்கொண்டிருக்கும் உலகம்..

**

14 thoughts on “அன்றும் இன்றும் என்றும்

  1. @Balasubramaniam G.M :
    :
    No individual here ! பொதுவாக, உலகம் போகிற போக்கு. ஆயிரக்கணக்கான வருடங்களாக இவ்வுலகம் இயங்கிவரும் விதத்தை, எதற்கும் மசியாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் விதத்தை விலகியிருந்து யோசித்ததன் விளைவுதான் இது.

    Like

  2. எனக்குத் தோன்றியதை அதாவது யாராயோ சொல்ல நினைக்கிறீர்களோ என்று இங்குச் சொல்ல நினைக்கும் முன் ஜி எம் பி ஸாரின் கருத்து கண்ணில் பட்டுவிட்டது! எனவே டிட்டோ அந்த மூன்று வார்த்தைகள் மட்டும். மற்றபடி புரிந்தது பதிவு.

    நாம் எல்லோருமே அப்படித்தான். பேசுவோம் சில சமயம் முஷ்டி உயர்த்துவோம் என்பதை விட உயர்த்திப் பார்ப்போம்…பாம்பு புஸ் புஸ் என்பது போல் சீறிப்பார்க்க முயற்சி செய்வோம் தான்…நம் வார்த்தைகள் யார் காதிலேனும் விழுதோனு ஆனால் எந்த மாற்றமும் இல்லை எனும் போது அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டு போவதுதான்…செவிடன் காதில் ஊதிய சங்கு என்று சொல்லிக் கொண்டு…

    மாற்றம் கொண்டு வரணும்னா அது ஒவ்வொருவர் மன நிலையிலும் அந்த மாற்றம்வர வேண்டுமே. சோ கேள்வி பதிலில் எப்போதோ எழுதியதை வாசித்த நினைவு….”நம்ம மக்கள் முதல்ல போராட்டம் அது இதுனு கூச்சல்போடுவாங்க அப்புறம் எதை எதிர்த்தாங்களோ அதுவே பழகிப் போய்டும்…நாலு நாள் சத்தம் போடுவாங்க அப்புறம் அது பழ்கிடும் … கரைந்து போய்டும் அப்படினு..இதுதான் நடக்கிறது..

    கீதா

    Liked by 1 person

  3. ஏகாந்தன் அண்ணா உங்க கருத்தை பார்த்தேன்…தனிப்பட்ட மனிதர் இல்லை உலகம் போற போக்குனு…சரியே உலகம் இப்படித்தான்…

    வீட்டுல மனைவி கணவனைப் பார்த்துச் சொல்லுவது போல, “ஹூம் எத்தனை வாட்டி சொன்னாலும், பேயா கத்தினாலும், இந்த மனுஷன் காதுல விழுதா? ஏதாவது ஒன்னு? நான் சொல்றத கேக்கறாரா? ஏதாவது செய்யறாரா? ஹூம்..இந்த ஆள் கிட்ட போய் சொன்னேன் பாரு….என் புத்தியதான் …..ஹா ஹா ஹா ஹா ஹா ஹா…

    மீ எஸ்கேப்!!!

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:
      இவ்வளவு பொத்தாம்பொதுவாக எழுதியும் யாரையும் குறிக்கிறதோ என இருவருக்கு இங்கே சந்தேகம் வந்திருக்கிறதே! சுயநலம் என்றதாலா? சுயநலமில்லாதோர் யார்? அப்படி ஓரிருவர் இருந்தாலும் அவர்கள் எங்காவது கண்காணாத இடத்தில், மலையடிவாரத்தில் அல்லவா போய் கண்ணைமூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்?

      /.. இந்த ஆள் கிட்ட போய் சொன்னேன் பாரு….என் புத்தியதான் ,,//

      இம்மாம்பெரிய உலகின் மிகச்சிறிய யுனிட்தானே புருஷன் -பெண்டாட்டி. உங்கள் கணக்கும் சரிதான்!

      Like

  4. மத்லபி என்றால் இந்த அர்த்தமா? நான் மத்லப் என்கிற வார்த்தையின் பொருளோடு வைத்துக் குழப்பிக் கொண்டிருந்தேன்! ஏனென்றால் கிஷோர் பாடிய ‘மத்லபி ஹை லோக் யஹான்… மத்லபி ஹை ஏ ஜமானா…’ என்கிற பேகானா படப்பாடல் பிடிக்கும். (அதிரா… நான் ஹிந்தியில் டி இல்லை!)

    Liked by 1 person

  5. அதே போல இந்தப் பதிவைப் படிக்கும்போது உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தின் ஆரம்பிக்க காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. பின்னணியில் “அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா” என்கிற பாடல் ஒலிக்க, கண்தெரியாமல் தடுமாறும் கிழவியைப் பார்த்தவாறே உதவி செய்யாமல், வாயில் முணுமுணுக்கும் மந்திரத்தோடு கடக்கும் சிறுவன் –

    Liked by 1 person

  6. தனக்கு நேரும் அனுபவங்களை வைத்தே மனிதர்கள் உருவாகிறார்களோ… இந்த உலகமே இப்போது மத்லபி தான்.

    Liked by 1 person

  7. @ஸ்ரீராம் :
    இந்த வார்த்தையை சில சமயங்களீல் எனது வடக்கிந்திய நண்பர்கள் யாரையாவது குறிப்பிட்டு முணுமுணுக்கக் கேட்டிருக்கிறேன்.

    நீங்கள் குறிப்பிட்ட பாடல் நன்றாக இருக்கும்போலிருக்கிறது. கேட்ட நினைவில்லை. இந்தமாதிரி சோக, தத்துவப் பாடல்கள் முகேஷிற்கு நன்றாக வரும். கிஷோரும் ஆல்-ரவுண்டர்தான்.உன்னால் முடியும் தம்பி பார்த்திருக்கிறேன். காட்சி நினைவிலில்லை.

    அனுபவம் புதுமை… எனப் பாட்டுப்பாடினாலும், பொதுவான அனுபவங்கள் வெவ்வேறு பரிமாணங்களில் ஒவ்வொருவருக்கும்
    வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்கின்றன.அவரவர்களின் சூழல், கெமிஸ்ட்ரிக்கேற்றப்படி அனுபவிக்கிறார்கள்.புரிந்துகொள்கிறார்கள். கெமிஸ்ட்ரி, ஃபிஸிக்ஸ் பற்றியெல்லாம் கவலைப்படாத உலகம் அது மாட்டுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது.

    Like

  8. இப்போது உள்ள காலத்து ஏற்ற பதிவு.
    எனக்கு அமைதி புறாவே அமைதி புறாவே அழைக்கின்றேன் பாடல் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறது. எங்கும் அமைதி இல்லை, நிம்மதி இல்லை.

    Like

    1. @கோமதி அரசு :
      அமைதிப் புறாவே.. பாடல் நான் கேட்டதில்லை. புதுப்படப்பாடலா?

      சாந்தி, ஆத்மசக்தி. நமது இளைஞரிடையே நல்லொழுக்கம், ஆத்மசக்தி ஓங்கிவிடக்கூடாது என்பதற்காகவே, நன்றாக இருக்கிற சமூகம் நாசமாகப் போகவேண்டும் என்பதற்காகவே, நமது மீடியா, கீழ்த்தர அரசியல்வாதிகள் சிலரின் துணையோடு, வெளிநாட்டு சக்திகள் வேகமாக உழைக்கின்றன. பலருக்கும் இது புரிகிறது. ஆனால் எழுதுவதோ, பேசுவதோ இல்லை.

      Like

  9. தாயே உனக்காக என்ற படப்பாடல். பி சுசீலாவின் இனிய குரலில் பாடல் மிக இனிமையாக இருக்கும்.

    கேட்டுப்பாருங்கள்

    Liked by 1 person

Leave a comment