உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக..
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் வாழும் கலைக்கோவில்
கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் வாழும் கலைக்கோவில்..
கொண்டது எனது அரசாங்கம்
எவனோ ஒருத்தன் சந்தோஷமாக எழுதிவிட்டுப்போயிருக்கிறானே ! மனதுக்குள் கிடந்து எழுந்த வரிகளை ரசித்து முணுமுணுத்தவாறு வளாகத்துக்கு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன். மேற்கொண்டு சிந்தனை சென்றது…
தப்புத் தப்பாகத் தெரிகிறதே காட்சிகள்? ஒரு பக்கம் எடப்பாடி. இன்னொரு பக்கம் குமாரசாமி. கலைக்கோவிலா, குயில்கள் வசிக்கின்றனவா? கோட்டான்கள் கூத்தடிக்கும் வெளியாக ஆகிவிடும்போலிருக்கிறது நாடு? குயில்கள் இருக்கட்டும், பறந்தோடிவிட்டனவே பறவைகளெல்லாம்? நீரில்லா நதிகள்.. யாருக்கு சொந்தமானால் என்ன? அதற்காகவே காத்திருப்பவர்கள் ஓடி வந்து, மணல் அள்ளலாம்…விற்கலாம்.. பணம் பண்ணலாம். கொடுமைகள் தொடர்கின்றன.. பிறந்த மண்ணுக்கெதிராக… யாரைப்பற்றி என்ன சொல்லி என்ன பிரயோஜனம் ?
**
அருமையான கவிதை படிக்கப்போகிறோம் என்று படிக்க ஆரம்பித்தால்,எடப்பாடியும்,குமாரசாமியும் எல்லோர் மனதிலும் வரும்படி அடடா!
LikeLiked by 1 person
@chollukireen :
பழையபாடல்களில் இப்படி ஏதேதோ வரிகள் வேறொரு உலகத்தைக் காட்டுகின்றன. நிதர்சனம் என்னடாவென்றால்…
LikeLike
அதெல்லாம் கனவாகவே போச்! தலைவர் பாடிய பாடலுக்கு இவர்கள் பொருத்தமில்லை.
LikeLiked by 1 person
@ஸ்ரீராம் :
உண்மை. இருந்தும் நமது அரசியல்வாதிகளை அவ்வப்போது பார்த்து எரிச்சலுறும்போதும், நம் நாட்டுமக்களின் விதி இவ்வளவு மோசமாக இருக்காது என்றே சிலசமயங்களில் தோன்றுகிறது. காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்..!
LikeLike
துளசி: கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் என்ற ஒரு பாடலும் நினைவுக்கு வந்தது.
கீதா: இங்கு நடப்பது எதுவுமே நன்றாக இல்லையே அண்ணா…பயமுறுத்துதே பல விஷயங்கள். என்னவோ போங்க…..நல்லது நடந்தால் சரி
LikeLike
@துளசிதரன்: நமது மண்ணின் அரசியல் வாழ்வோ, சமூக வாழ்வோ – எதைப்பற்றியும் நமது திரைவரிகளே தெளிவாக்கிவிடும். ஏற்கனவே நிறைய எழுதிப்போட்டுவிட்டுப் போய்விட்டார்கள் நம் கவிஞர்கள்!
கீதா : கலகத்துக்குப் பின் தான் விடிவோ என்னவோ? அதற்காக இப்படியா? மக்கள் போராட்டம் எனும் பெயரில் அராஜக அமைப்புகள் சதி, மக்கள் சாவது விதி என்றாகிவிட்டதே . எய்தவனைப்பற்றி எள்ளளவும் யோசிக்காமல் யார், யாரையோ குறைசொல்கிறார்கள்(அதுதானே உள்நோக்கம்), சராசரித் தமிழன் உடனே இந்தப்பாவிகளின் கூற்றை நம்பிவிடுகிறான். இவன் நம்ப, நம்ப, அவர்கள் இவனையேப் போட்டு நெம்பிக் கொண்டிருக்கிறார்கள்..
LikeLike