அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?

மனதுக்குப் பிடித்தமான, உன்னதமான ஒரு விஷயத்தை, நாம் நம் மனதிலேயேதான் சரியாக அனுபவிக்கமுடியும். அல்லது இணக்கமானவர்களோடு, நம்மோடு ஒத்திசைவு உள்ளவர்களோடு சரியான சூழலில் பகிர்ந்துகொள்ளலாம். அளவளாவி மகிழலாம். ஆனால் ஒருபோதும் உணர்வற்ற முட்டாள்களோடோ, அயோக்கியர்களோடோ இத்தகைய மென்னுணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது. ஆனால் நம்மை அப்படி நிம்மதியாக இருக்க விட்டுவிடுவார்களா, நம் நாட்டில்?

நமது பத்திரிக்கைகளை, டிவி சேனல்களை, தவிர்க்கமுடியாமலும் ஒரு வித தினசரி சலிப்புடனும்தான் படிக்கவேண்டியிருக்கிறது/ பார்க்கவேண்டியிருக்கிறது. செய்திகள் என்கிற பெயரில் காலையிலிருந்தே சுற்றிச்சுற்றி வரும் தினசரி அபத்தங்கள், கேலிக்கூத்துகள், வக்கிரங்கள், வன்ம விவரிப்புகள். குறிப்பாக இந்திய டிவி சேனல்கள், சினிமாக்கள் போன்ற பொதுஜன ஊடகங்கள் இத்தகைய செய்தி, பட வெளியீடுகளில் ஒப்பற்றவை. தனிமனித, குடும்ப உறவுகள் தொடர்பான நல்லுணர்வுகளை, ஒழுக்கமதிப்பீடுகளை திட்டமிட்டு சிதைப்பதில் ஈடுஇணையற்றவை. மீடியா சுதந்திரம் என்கிற லேபிளை நெற்றியில் ஒட்டிக்கொண்டு, சமுகச் சீரழிவை, உக்கிரமாக, வருடக்கணக்கில் செய்துவருபவை (எல்லாப் பத்திரிக்கைகளும், மீடியாவும் இப்படி மோசமில்லை எனும்போதும்).

இன்று காலை, கர்னாடகா எக்ஸிட்-போல், ஐபிஎல், அயர்லாந்து-பாகிஸ்தான், ஈரான் –இஸ்ரேல், மோதி-முக்திநாத் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு பத்திரிக்கைக் கதவைத் திறந்தேன். எந்த நேரத்தில் திறந்தேனோ.. எரிச்சலுற்றது மனது. எகிறியது BP.

என்ன அது? அன்னையர் தினம். இதில் எரிச்சலுற என்னப்பா இருக்கிறது? கொஞ்சம் பொறுங்கள். எரிச்சல் கொடுத்தது தினமல்ல, அப்பாவி அம்மாக்களுமல்ல. இந்த தினத்தின் மகிமையை தன் ‘ஸ்டைலில்’ குறிப்பிட்டுக் குதூகலித்தது ஒரு பத்திரிக்கை. அன்னை அல்லது அம்மா அல்லது தாயார் என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? ஒரு நெருக்கமான, அப்பாவித்தனமான அன்பு, அளவிலாப் பாசம், எப்போதும் பொங்கிநிற்கும் ப்ரியம், பிரிவு தரும் உருக்கம், கண்கலக்கம், நீங்காத நினைவு – இதெல்லாம்தானே? ஆனால் நமது பத்திரிக்கைகள் எதை, எந்தமாதிரி அம்மாக்களை இன்றைய தினம் நமக்கு நினைவுபடுத்த, நாம் மெச்சவேண்டும் என விரும்புகின்றன?

Power Moms! என்ன திடீரென்று ஆங்கிலத்துக்குத் தாவிக் குழப்புகிறீர்கள் என்கிறீர்களா? தமிழிலேயே வருகிறேன்: ’சக்திவாய்ந்த அம்மாக்கள்!’ இது சரிதானே. அம்மாவின் சக்திக்கு இணையாகுமா என்கிறீர்கள். இந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தால் நானும் மகிழ்ந்திருப்பேன். இவர்கள் குறிப்பிட்டது உங்க அம்மா, எங்க அம்மா போன்ற அப்பாவி அம்மாக்களைப்பற்றியல்ல. அவர்கள் தினம் காட்டி, புகட்டி வளர்த்த பாசத்தின் சக்தியைப்பற்றியல்ல, இந்தப்பத்திரிக்கைகள், குறிப்பிட்டுப் பீற்றிக்கொள்வது.

பின்னே? Power Moms என்று இவர்கள் குறிப்பிட்டு நம்மையும் உணர்ச்சிவசப்படச் சொல்வது, அரசியல்வாதிகளின் அம்மாக்கள், பாலிவுட்டின் அம்மாக்கள். இவர்கள்தான் சக்தி வாய்ந்த அம்மாக்களாம். இவர்களே அன்னையர் தினக் கொண்டாட்டத்திற்குத் தகுதியானவர்கள்! நீங்களும் நானும் இதை அப்படியே ஒத்துக்கொண்டு நமது அசட்டு அம்மாக்களைப்பற்றிய சிந்தனைகளை மூலையில் தூக்கிக்கடாசிவிட்டு, ’பவர் அம்மா’க்களைப் பற்றி இந்த நன்னாளில் சிந்தித்து மகிழவேண்டும். இந்திராகாந்தி, சோனியா காந்தி, ஷீலா தீக்ஷித் என்று கூவிக்கொண்டு பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டுமாம். எப்படி இருக்கிறது நமது மீடியா சொல்லும் அம்மாக் கதை? நம்மைப்போன்ற அசடுகளுக்கு இவ்வாறு விளக்கியும் புரியாமல் போய்விடுமே என்பதற்காக பாசக்கார அம்மா-பிள்ளை படங்கள் சிலவும் போட்டிருக்கிறார்கள். இந்திரா காந்தி-ராஜீவ் காந்தி, சோனியாகாந்தி-ராகுல், ஷீலா தீக்ஷித்-சந்தீப் தீக்ஷித், போறாக்குறைக்கு ராப்ரி தேவி !(ஊழல்திலகம் லாலு ப்ரசாத் யாதவின் அர்ருமை மனைவி). ராப்ரிதேவி தன் மகன் தேஜஸ்வி யாதவுடன். அடடா! எப்பேர்ப்பட்ட அம்மாக்கள் நம்நாட்டில் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். நாம் கொடுத்துத்தான் வைத்திருக்கவேண்டும். சந்தேகமில்லை. பாலிவுட் ரசிகர்களையும் விட்டுவிடக்கூடாதே! அதற்காக மேலும் படங்கள் போட்டுக்காண்பித்திருக்கிறது பத்திரிக்கை: ஹிந்திப்படங்களில் அம்மாக்களாக வந்து அம்மாவின் அன்பைப்பற்றி நமக்கு விபரமாகச் சொல்லித் தெளிவித்த நிருபா ராய் (அமிதாப் பச்சனுக்கு அம்மாவாக வந்து அழுதுகொண்டே இருந்தவர்), ரீமா லாகூ, ஃபரிதா ஜலால் ஆகிய புண்யாத்மாக்கள்.

என்ன புரிகிறதா ஏதாவது? இப்போதாவது? அன்னையர் தினம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பெற்றதாயை நினைத்து உணர்ச்சிவசப்படும் ஜீவன்களே, மேற்சொன்னதுபோன்ற ’பவர்-அம்மா’க்களை இன்று நீங்கள் நினைக்காவிட்டால், அன்னையர் தினம் கொண்டாடி என்ன ப்ரயோஜனம்?

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் and tagged , , , , . Bookmark the permalink.

32 Responses to அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?

 1. எனக்கு அன்னையர் தினமென்றால் இரு வித அம்மாக்கள் நினைவுக்கு வருகிறார்கள் இருவர் பற்றியும் முன்பே பகிர்ந்திருக்கிறேன் தங்கள நிலையில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் இக்கால அன்னையரும் அவர்கள் ப்ற்றிய ஆதங்க எண்ணங்களும் ஒன்று நானெழுதியது இன்னொன்று வ்லைப்பதிவர் சுந்தர் ஜி எழுத்யதுஇன்னொரு genre ல் என்பேரன் அவனது தாயைமிஸ் செய்து எழுதியதுஆங்கிலத்திஒல் நான் அதை தமிழாக்கம்செய்து எழுதியது

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ Balasubramaniam G.M :
   நீங்கள் இதுபற்றி மூன்று பதிவுகள் எழுதியிருக்கிறீர்களா? ஹாட் சப்ஜெக்ட்தான்!

   Like

 2. நானும் பதிவு போட்டிருக்கேன் என்றாலும் மீள் பதிவு. இந்த “தினம்” கொண்டாடுவதில் எல்லாம் எனக்குப் பெரிய அளவில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. நல்லவேளையாக நீங்கள் சொன்ன செய்திகள் இங்கே எந்தப் பத்திரிகையிலும் நான் பார்க்கவில்லை! பிழைத்தேன்! இதுவானும் பரவாயில்லை. சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று நமீதா, அனுஷ்கா, தமன்னா போன்றோரிடமிருந்து தேச பக்தியைக் கத்துக்க வேண்டி இருக்கு!

  Liked by 1 person

  • அதென்ன அனுஷ்கா தமன்னா? இது மாதிரி நாட்களில் இந்த இருவரையும் எப்போதுமே நான் தொலைக்காட்சியில் பார்த்ததே இல்லையே கீதாக்கா?

   :)))

   Liked by 1 person

  • Aekaanthan says:

   @ Geetha Sambasivam :
   நமது டிவி சேனல்களின் சினிமா நட்சத்திர obsession – ஐ நாம் ஏதும் செய்வதற்கில்லை. மேலும் மேலும் இது மோசமாகத்தான் போகும். நம் கையில் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறதே..உபயோகிக்கவேண்டியதுதான்.

   Like

 3. ​நான் செய்திச் சேனல்கள் பார்ப்பதே இல்லை. அதிலும், ஆங்கில சேனல்களை பார்த்து, அதே போல் செய்வதாய் நினைத்துக்கொண்டு அங்கு நான்கைந்து அறிவுஜீவிகள் உட்கார்ந்து பேசிப்பேசி மாய்வார்கள் பாருங்கள்… அதைக் கேட்டால் என் பிபி எகிறும்! அந்த வெறுப்பிலேயே அந்தப் பக்கமே நான் செல்வதில்லை.

  Like

 4. பவர் அம்மாக்களா? அவர்கள் ஏதோ புதுமை செய்வதாய் நினைத்துக் கொண்டு செய்கிறார்கள். இன்று அம்மாக்களுக்கு மவுசு. நாளையோ, நாளையோ அதற்கு மறுநாளோ அந்தப் படத்தை எடுத்து உள்ளே வைத்து விட்டு பாட்டி, அப்பா படத்தை எடுத்து ப்ரொபைல் படமாக்கிக் கொண்டு கொண்டாட வேண்டும்!​

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ஸ்ரீராம் : இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் ஒரு காலத்தில் எப்படி இருந்தது? அந்தப் பத்திரிக்கையில் நான் பார்த்த நியூஸ், படங்கள் தான் காலையில் இப்படி என்னை சூடேற்றியது. அதனால் மற்றவர்கள் ஒழுங்கென சொல்வதற்கில்லை.

   ஆமாம், அப்பா, பாட்டி படங்களை கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும்!

   Like

 5. athiramiya says:

  ஏகாந்தன் அண்ணன்.. நமக்கெதுக்கு ஊர் வம்பு.. அன்னையர் தினம் என்பது குழந்தை பெற்றோருக்கு மட்டுமன்றி தாய்மை உணர்வுள்ள அனைத்துப் பெண்களுக்குமே உரியது… நல்லதைப் பொறுக்குவோம்ம் தீயதை தவிர்ப்போம்… பிபி ஏறிடாமல் வாழ்வோம்..

  இப்படிக்கு:)-
  இதயத்தைப் பாதுகாப்போர் சங்கத்து பேர்சனல் செக்கரட்டறி:))

  Liked by 1 person

 6. Aekaanthan says:

  @athiramiya :
  இபாசா-வின் பர்சனல் செரட்டரியா ! இரவோடு இரவாக புதிய பதவிகள், பட்டங்கள் உங்களைத் தேடிவந்துவிடுகிறதே! உங்கள் காட்டில் மழைதான்.

  ..ஒருவேளை அது ‘பொங்கு சனி’யாக இருக்குமோ?

  Like

  • athiramiya says:

   ஹா ஹா ஹா ஆமா ஆமா கரீட்டூஊஊ இப்போ செவின் பொயிண்ட் ஃபிவ் இன் முதல் 2.5 மங்குசனி.. நடு 2.5 பொங்குசனி எல்லோ:)).. அடுத்து மரணச் சனிதேன்ன் ஹையோ ஹையோ:)..

   Liked by 1 person

   • Aekaanthan says:

    @athiramiya :

    ’னிச விஷயத்தில் உங்கள் கணக்கு தவறு. ஏழரையை , இரண்டரை இரண்டரையாக முன்று பகுதியாக்கிப் பார்ப்பதல்ல- மங்கு, பொங்கு , மாரக ’னிச’க்கள். ஒவ்வொருவரின் ஆயுளிலும் (யாரையும் விட்டுவிடுபவர் அல்லர். நீதிமான். நடுநிலைவாதி) மூன்று முறை -அதாவது ஏழரை X மூன்று=22 1/2 வருடங்கள் வந்து கௌரவிப்பார், இண்டர்வியூ எடுப்பார். யாரும் எங்கும் ஓடி ஒளியமுடியாது!

    Like

   • athiramiya says:

    ஓ ஓ விளக்கத்துக்கு மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணன்… அப்போ இப்போ எனக்கு பொங்கு ..னிச:) நடக்குதூஊஊஊஊஉ பொயிங்கோ பொயிங்கெனப் பொயிங்கப்போகுது எல்லாம்ம்.. அரோகரா…:))

    எங்கள் புளொக்குக்கு உள்ளே போகத்தான் எல்லோரும் சுவர் ஏறிக் குதிப்பினம்:) நான் உள்ளே போவது ஈசி.. ஆனா வெளியே வருவதற்குத்தான் சுவர் ஏறாமல் ஒரே ஜம்பில் இங்கு வந்தேன்ன்ன்:)..

    Liked by 1 person

 7. usha says:

  media ukku power moms, ice vacha than avanga pozhappu odum. naam namadhu ammavai potruvom. erichal edhukku.

  Liked by 1 person

 8. Geetha says:

  ஆஹா ;இது என்ன இங்கு நடக்கிறது நான் நேற்று, துளசியின் கமென்ட் மற்றும் என் கமென்ட் அப்படி ஒரு கமென்டு போட்டேனே….வரலியா ஏகாந்தன் அண்ணா? இல்லை நான் சொல்லியது தவறு என்று வெளியிடவில்லையா…கலாய்த்துப் போட்டேனே…

  அல்லது இந்த அதிராவின் 7.5 எடுத்துக் கொண்டு போய்விட்டாரா!!! ஹா ஹா ஹா..என்னாச்சு ஹையோ நேற்று என்று பாத்து வெர்டில் அடித்து வைக்காமல் போய்விட்டேன். எப்போதும் வேர்டில் அடித்து காப்பி பேஸ்ட் தான் போடுவேன்…நேத்து போட்டதும் கமென்ட் மாடரேஷன் வெயிட்டிங்க் என்று வந்தது சரி போய்விட்டது என்று நினைத்து வெளியில் போனேன்…இது என்னாச்சு …இப்போ அதே போன்று போட வருமா…ம்ம்ம்ம்ம் என்னவோ போங்க

  கீதா

  Like

 9. கமென்ட் போட்டு விட்டு மெலே கமென்ட்ஸ் பார்த்து ஸ்ரீராமுக்கு போட்ட கமென்ட் மட்டும் வந்துருக்கு….
  ஏதோ நடக்குது…ஏகாந்தன் அண்ணாவின் தளத்திற்கு வந்தால் ஏதோ கருத்தை போட மாட்டேங்குது என்னவோ இருக்கு பூதம்…

  துளசி: பவர் அம்மாக்களா? இப்படிக் கேட்டதே இல்லை. நல்ல காலம் எங்கள் ஊரில் இப்ப்டி எல்லாம் சொல்லி வாழ்த்து எதுவும் வரவில்லை. (கீதா: துளசியின் கமென்ட் இப்படித்தான் இருந்த நினைவு எக்ஸாட்டாகத் தெரியவில்லை. என் கமென்டே எனக்கு சரியாக வராது இதில் அவர் கமென்ட் எல்லாம் எங்கு நினைவு இருக்கப் போகுது சரி போட்டு முயற்சி பண்ணுவோம்னு …)

  கீதா: நேக்கு அம்மாவை பத்தி ஒன்னும் தெரியாதாக்கும் கேட்டேளா (ஸ்ரீராம் ஒன்னும் தெரியாதாக்கும் கேட்டேளா என்று எங்க ஊர் பாஷையை தொடங்கிவைக்க எனக்கும் அது பற்றிக் கொண்டுவிட்டது ஹா ஹா ஹா) இவால்லாம் என்னவோ பவர் அம்மானு ஏதோ சொல்லி வட்டாக்கறா கேட்டேளா…வெறதே களியாக்கறாளாக்கும். இந்தப் பவர் அம்மானா என்னனு நினைக்கறேள் நீங்கள்? அது வேற ஒன்னுமில்லை இவால்லாம் “பூஸ் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை/அவர் எனர்ஜினுட்டு அவாவா கொழந்தைகளுக்குக் கொடுத்ததைப் போட்டு களியாக்கறா…நம்ம அம்மாக்கள் எல்லாம் நமக்குக் காபி கொடுத்து, பழைய சாதத்தையும் போட்டு கோந்தே கேட்டியா சமத்தா இருக்கணும்மாக்கும், நன்னா உழைக்கணுமாக்கும், சத்தியமா நடந்துக்கணும்னு சொல்லி பவர் ஊட்டின பவர் அம்மாக்களாக்கும்!! இவா கெடக்கறா விட்டுத் தள்ளுங்கோ…வட்டுகள் அதுகள்…என்னமோ பண்றோம்னு என்னத்தையோ கெக்கெபிக்கேனு பண்ணித் தொலைக்கறதுகள்…..விடுங்கோ..

  Like

  • Aekaanthan says:

   @துளசி: நீங்களும் கீதாவும் முதலில் போட்ட கமெண்ட் (ஒரிஜினல்) எங்கே போயிற்றோ தெரியவில்லை. வர்ட்ப்ரெஸ் கூத்துக்கள் ஓவராகத்தான் போய்க்கிட்டிருக்கு.
   Power Mom -களின் படமெல்லாம் போட்டு கூத்தடித்திருந்தது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ். ஒருகாலத்தில் நான் மிகவும் மதித்த ஆங்கில ஏடு. குறிப்பாக எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தியின் அரசைத் துணிந்து திருப்பித்தாக்கிய பத்திரிக்கை. இப்போது இத்தகைய நிலையில். இருந்தும் மற்ற ஜால்ராக்களுக்கு இந்த ஏடு அவ்வளவு மோசமில்லைதான்.

   @கீதா: கமெண்ட் என்கிற பெயரில் எத்னிக் ஃப்ளேவரில் தூள்கிளப்பியிருக்கிறீர்கள்!

   நீங்கள் சொன்னதே சரி. பவர் மாம்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ப்ரக்ருதிகள் வெறும் கவர் மாம்ஸ்தான். நாம் சின்ன வயசில் புத்தகம், நோட்டுகளுக்குப் போடுவோமே பழுப்புக் கவர் – அதைச் சொல்கிறேன். நமது அம்மாக்கள் மனதின் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எப்போதும். அது இந்த அரைவேக்காடுகளுக்கு என்றும் புரியப்போவதில்லை.

   பட்டணத்தில் பூதம்போல் வர்ட்ப்ரெஸ்ஸிலும் பூதமா? நான் admin-coomments -பகுதிக்குள்ளும் சென்று நேற்றே தேடினேன் உங்களது கமெண்ட் ஏதாவது ஒளிந்துகொண்டிருக்கிறதா என்று. நீங்கள் ஸ்ரீராமுக்கு கொடுத்த குட்டி கமெண்ட் ஒன்றுதான் மறைவிலிருந்து வெளிப்பட்டது ! ஒரிஜினல் ஓடியது எங்கே?!

   Like

   • Geetha says:

    அதானே அண்ணா ஒரிஜினல் ஓடியது எங்கே? எங்கே? எப்படி மாயமா போகுதுனு தெரியலை…பரவால்ல கிட்டத்தட்ட அதே கருத்த போட்டு வந்து நீங்க பதில் கொடுத்து முடிஞ்சாச்சு..இனியாவது ஒழுங்கா வருதானு பார்ப்போம்…

    கீதா

    Like

 10. அதிரா 7.5 நல்லாருக்காரா….பொங்கி பொங்கி வராரா? ஹா ஹா ஹா…அப்போ எங்கிட்டருந்துதான் உங்களுக்கு வந்துருக்காரா…அது சரி அதான் எனக்கு லோடைட் உங்களுக்கு ஹை டைட் போல…

  கீதா

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @Geetha : அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக ஒரே பாய்ச்சலில் இருக்கிறார் அதிவேக அதிரா!

   Like

  • athiramiya says:

   //பொங்கி பொங்கி வராரா?///

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கண்படுத்தாதீங்கோ கீதா:)) பொயிங்கி வழியட்டும்:)) காவேரி முட்டட்டும்.. கூவம் கிளீன் ஆகட்டும்:)) ஹா ஹா ஹா:)..

   Liked by 1 person

   • Aekaanthan says:

    @ athira:
    காவேரி, கூவம், தேம்ஸ் எல்லாம் ஒன்னா சேர்ந்திடப்போகுதே!

    Like

 11. Geetha says:

  இண்டர்வியூ எடுப்பார்/// சனி எந்தச் சேனலில் வேலை செய்கிறார்? ஜோதிட சானலிலா? இல்லை சங்கரா திருப்பதி சானலிலா? எதில் இன்டெர்வியூ எடுப்பார் அண்ணா…கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க….என்னையும் எடுப்பாரா என்று…

  கீதா

  Like

  • Aekaanthan says:

   @Geetha :
   இருட்டினில் கருப்பாக வருபவரை டிவி கேமரா காணாது. ஆனால் அவரது கண்களோ யாரையும் காணாதிருக்காது!

   Like

 12. Geetha says:

  இந்திராகாந்தியின் அரசைத் துணிந்து திருப்பித்தாக்கிய பத்திரிக்கை. //

  ஆமாம் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நன்றாகப் போட்டு தாக்குவார்கள் ஒருகாலத்தில். பரபரப்புக்குப் பபெயர் போன பேபபர். வீட்டில் அதை சென்சேஷனல் பேப்பர் என்றுதான் சொல்லுவார்கள்.. இப்போது அதிகம் பேப்பர் எல்லாம் பார்க்காததால் தெரியவில்லை அண்ணா தரம் பற்றி எல்லாம்… ஆனால் உங்கள் கருத்திலிருந்து தெரிகிறது ..தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று. ஊடகமே சரியில்லையே…

  //இருட்டினில் கருப்பாக வருபவரை டிவி கேமரா காணாது. ஆனால் அவரது கண்களோ யாரையும் காணாதிருக்காது!//

  ஹா ஹா ஹா ஹா அதுவும் சரிதான்…ரொம்பவே கேர்ஃபுல்லா இருக்கணும் போல…

  கீதா

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @கீதா:
   கர்னாடகா தேர்தல் முடிவு அக்கப்போர், ஐபிஎல் நடுவிலே உங்கள் கமெண்ட்டும் வந்து பார்த்து இதோ பதிலும் தந்தாயிற்று. இன்னும் எபி கதை படிக்கவில்லை..எதெதற்குள்தான் மண்டையை விடுவது எடுப்பது என்று புரியமாட்டேன்கிறது, சிலசமயங்களில்!

   Like

 13. பவர் அம்மாக்கள் தினம் – அன்னையர் தினம் பற்றி வித்தியாசமான கணிப்பு.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s