மே, 11 : என்ன உலகமே, ஞாபகமிருக்கா !

20 வருடங்களுக்கு முன் (1998), இதே நாளில்தான் இந்தியா போக்ரான்-2 என்று பின்னால் அழைக்கப்பட்ட, அதிரடி நவீன அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. ’ஆபரேஷன் ஷக்தி’ என கோட்-பெயர் கொண்ட இந்த அணு ஆயுத சோதனைகளின் முதல் பாகமாக மூன்று அணு ஆயுதங்களை ராஜஸ்தானின் போக்ரான் (Pokhran) பாலைவனத்தில், பூமிக்கடியில் வெடித்து தூள்கிளப்பியது இந்தியா! கூடவே, கொஞ்சம் வெரெய்ட்டியும் காட்டி பயமுறுத்தியது: ஒரு அதிநவீன fusion அணுகுண்டு மற்றும் இரண்டு fission அணுகுண்டுகளை வெற்றிகரமாக வெடித்து சோதித்தது. அதிர்ந்துபோன அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், சீனா போன்ற வல்லரசுகளும், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, போன்ற ஏனைய முக்கிய நாடுகளும் இந்தியாவை கடுமையாக விமரிசித்து, திட்டித் தீர்க்குமுன், இன்னுமொரு நல்ல காரியம் செய்தது இந்தியா. இரண்டு நாள் கழித்து (மே 13), இன்னும் இரண்டு fission அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்தியது. என்ன ஆயிற்று, இந்த இந்தியாவுக்கு? உலகின் வல்லரசு நாடுகள் தலையைப் பிய்த்துக்கொண்டன. அமெரிக்க சிஐஏ மற்றும் பெண்ட்டகன் (Pentagon) நிர்வாகங்களுக்கு, சித்தம் கலங்கிப்போனது எனலாம். இத்தனை உளவு சேட்டலைட்டுகளை இந்தியாவுக்கு மேலே உலவவிட்டும், எப்படி நம் கண்ணில் மண்ணைத் தூவியது இந்த நாடு என்பதே அங்கே கொதித்த பிரதானமான கேள்வி. இந்த அதிநுட்பமான, பாராட்டத்தக்க இந்திய அணுவிஞ்ஞான சாதனைகளின் பின்னணியில் சிறப்பாக தலைமைதாங்கி வழிநடத்தியவர் –அப்போது இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் உற்பத்திக் கழகத்தின் (DRDO) டைரக்டராகப் பணியாற்றிய, புகழ்பெற்ற மிஸைல்-டெக்னாலஜிஸ்ட்டான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். (We salute you, Sir.) அப்துல் கலாமையும், ஆர்.சிதம்பரம் போன்ற மற்ற அணுசக்தி விஞ்ஞானிகளையும், கூட ஒத்துழைத்த தரைப்படை பொறியியலாளர்களையும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார் இந்தியப் பிரதமரான அட்டல் பிஹாரி வாஜ்பாயி. மேலும் அன்று மாலையே ’இந்தியா இப்போது முழுத்திறனுள்ள அணுஆயுத வல்லரசு’ என சத்தமாக அறிவித்து, உலகை, குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய உலகை மேலும் படபடக்கவைத்தார்.

அப்போது பிஜேபி-யின் தகவல்தொடர்பு அமைச்சர் பிரமோத் மகாஜன், இந்திய அரசின் செய்தித்தொடர்பாளராக வாஜ்பாயியால் நியமிக்கப்பட்டிருந்தார். மகாஜன் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சாமர்த்தியமாகப் பேசும் திறனுள்ளவர். அணு ஆயுதசோதனைக்குப் பின்னான டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்தியா அணுஆயுதத் தடைகளுக்கெதிராக சோதனைகளை நடத்திவிட்டதே.. வல்லரசுகள் அங்கீகரிக்குமா, மேற்கத்திய நாடுகள், ஐநா போன்ற அமைப்புகள் பொருளாதாரத் தடையெல்லாம் விதிக்குமே.. என்ன செய்யப்போகிறீர்கள் என்றெல்லாம் கேள்விகள் இந்திய மற்றும் அந்நிய நிருபர்களிடமிருந்து பறந்துவந்தபோது, பிரமோத் மகாஜன் புன்சிரிப்புடன் அதனை அனாயாசமாக எதிர்கொண்டது நினைவில் இருக்கிறது. அவர் சொன்னது இதுதான்: யாருடைய அங்கீகரிப்பையும் இந்தியா வேண்டவில்லை. எங்களுக்கு அது தேவையுமில்லை. அறிவித்துவிட்டோம், நாங்கள் அணுஆயுத வல்லரசு என்று. புரியவேண்டியவர்களுக்கு இது நன்றாகப் புரியும் என்றார். இந்தியா பலதரப்பிலிருந்து கடும் விமரிசனம், தடைகளுக்கு ஆளாகுமே, எப்படிக் கையாள்வீர்கள் என ஒரு வடக்கத்திய நிருபர் ஹிந்தியில் துருவியதற்கு, மகாஜன் ஹிந்தியில் சொன்ன சுருக் பதில் தெளிவாக நினைவில் இருக்கிறது. ’கொஞ்ச நாட்களுக்கு எங்கும் சூடு, அனல் பறக்கும். அதன்பிறகு எல்லாம் குளிர்ந்துவிடும்! (thode samay ke baadh, sab tanda padjayega !). ஹிந்தி நிருபர்களுக்கு சேர்ந்து சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

நான் அப்போது கென்யாவின் தலைநகரான நைரோபியில் தூதரகப்பணியில் இருந்தேன். கென்யாவின் புகழ்பெற்ற ஆங்கில நாளேடான The Daily Nation –ல் அடுத்த நாள் இப்படித் தலைப்பு செய்தி வந்து கென்யர்களை அதிரவைத்தது. அப்போது 70000-க்கும் மேலாக அங்கிருந்த இந்திய தேசத்தவர்களைக் குதூகலிக்கவைத்தது: ”India explodes N-Bomb ! World in shock !”

**

12 thoughts on “மே, 11 : என்ன உலகமே, ஞாபகமிருக்கா !

 1. அந்த நேரத்து த்ரில்லையும், சந்தோஷத்தையும் மறுபடி நினைவுகூர வைத்தீர்கள். எவ்வளவு அருமையான மனிதர் அப்துல் கலாம் அவர்கள்… ஏதேதோ நாட்களை நினைவு வைத்திருக்கிறோம்.. இந்நாளின் இந்த விசேஷத்தை யாரும் பேசுவதில்லை. உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர வைத்த நாள்.

  Like

  1. @ஸ்ரீராம் :

   க்ரிக்கெட்டுக்கு நடுவே இரவில் நெட்டில் நியூஸ் அப்டேட் பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென எங்கோ தென்பட்டது மே 11-ன் முக்கியத்துவம். அடடா, இதையா விடுவது என்று அதிவேகப் பதிவு செய்தேன் இரவோடு இரவாக. முன்பே திட்டமிட்டிருந்தால் இன்னும் நிறைய எழுதியிருக்கமுடியும். விஷயமிருக்கிறது.

   நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். இந்தியனைத் தலைநிமிரவைத்த வருடம். இப்போது இந்தியா ராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் வல்லமையோடு இருக்கிறது. இப்போதைய தலைமுறைக்கு 1998ன் சாதனையைத் தெரிந்துகொள்வதில் சிரமம் இருக்கலாம். இதன் அருமை தெரியாமல் போகலாம். ஆனால் நம்மீது சர்வதேச நெருக்கடிகள் – ராஜீய, பொருளாதார, ராணுவ நெருக்கடிகள் சூழ்ந்திருந்தவேளையில், இந்தியாவின் பொருளாதாரம் இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ், மற்றும் தேவகௌடா, சந்திரசேகர் (தங்கத்தை விற்று நாடு நடத்திய அரசு) போன்ற பலவீப் பிரதமர்களின் ஆட்சிகளால் சீரழிந்திருந்த நிலையில், ஆட்சிக்குவந்த பிஜேபி அரசு ஒன்றுதான் இத்தகைய காரியத்தைச் செய்திருக்கமுடியும். 1998-ன் தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி ஓப்பனாகச் சொல்லியிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணுஆயுத வல்லரசாக இந்தியாவை நிறுவுவோம் என்று. பிஜேபி சொன்னது; செய்தும் காட்டியது. எனக்குத் தெரிய, வாஜ்பாயி அரசின் மகத்தான சாதனைகளில் இது முக்கியமானது. இந்த சோதனைகள் நம் சாதனைகளாக மேலைநாட்டவர்களால் ஒரு தயக்கத்துடந்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் காரணங்கள் நமக்குப் புரிந்தே இருந்தன. வாஜ்பாயி அரசின் காலகட்டத்திலேயே (1999-2004), வாஜ்பாயியின் தீவிர வெளிஉறவுக்கொள்கைகள், செயல்பாடுகளால், அமெரிக்கா, ப்ரிட்டன், ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் தாங்கள் விதித்திருந்த பொருளாதார, தொழில்நுட்பப் பரிமாற்றத் தடைகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெற்றுக்கொண்டன. வாஜ்பாயி தலைமையிலான பிஜேபி அரசின் போற்றத்தகுந்த சர்வதேச அரசியல் வெற்றி இது. நமது மீடியாவும், எதிர்க்கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. மேலைநாடுகள் ‘கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்!’ என்றன இந்தியாவைப்பார்த்து 2000-களின் ஆரம்பத்தில்.

   இத்தகைய வாஜ்பாயி அரசைத்தான், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட்ட நம் அழுகல் அரசியல் கட்சிகள் கூட்டு சேர்ந்து, 2004 தேர்தலில் தோற்கடித்தன. ‘இந்தியா ஒளிர்கிறது!’ என்று வெறுமனே சொல்லாமல், உண்மையில் சர்வதேச அரங்கில் ஒளிரவிட்டுக்காட்டிய பிஜேபி அரசிற்கு, வாஜ்பாய் போன்ற ஒரு தலைவனுக்கு இந்திய மக்களின் நன்றிக்கடன் அது !

   Like

  1. @கோமதி அரசு :

   வருகை, கருத்துக்கு நன்றி. ஸ்ரீராமுக்கு நான் மேலே இட்டிருக்கும் பதிலையும் படிக்கவும்

   Like

 2. தினம்/ இந்த நாள் தான் நினைவில்லையே தவிர நிகழ்வுகள் நன்றாக நினைவுள்ளது. அற்புதமான மனிதர் அப்துல்கலாம். இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்தவர் மட்டுமின்றி பயத்துடன் கூடிய மரியாதையையும் பிற நாடுகளுக்கு ஏற்படுத்தியவர். நம்மை அவ்வப்போது சீறி சீறி மிரட்டிக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு மிகவுமே நடுக்கம் ஏற்பட்டது என்பதும் உண்மை.

  நீங்கள் சொல்லியிருக்கும் கேள்விகள் கேட்கப்பட்ட போது அப்துல்கலாமும் சொன்ன ஒன்று நினைவுக்கு வருகிறது. வெடித்து சோதனை நிகழ்த்தினால் நாம் அணுகுண்டு கல்சருக்குத் துணை போகிறோம் என்றோ அல்லது அதை சப்போர்ட் செய்கிறோம் என்றோ அர்த்தம் இல்லை. சமாதானம் அமைதி என்று பேசினாலும் நமக்கும் பாதுகாப்பு தேவை. நாமும் வல்லரசு என்று சொல்ல வேண்டும் நாமும் சளைத்தவர் அல்ல என்றும் தெரியவேண்டும் என்றும் தமிழில் செய்தி வாசித்த நினைவு…

  அப்பொதும் இப்போதும் நினைவுக்கு வந்த வரும் ராமகிருஷ்ணபரமஹம்ஸர் சொன்ன ஒரு கதையின் சாராம்ஸம்.. பாம்பு சீறும் போது நாம் பயப்படக் கூடாது. அதே சமயம் பயத்தில் கொல்லவும் வேண்டாம். நாம் அதை பயமுறித்தினால் போதும். நம்மைத் தற்காத்துக் கொள்ள என்று…

  சல்யூட் டு த க்ரேட் அப்துல்கலாம்!
  மீண்டும் கமென்ட் போடுவதில் பிரச்சனை இந்தக் கமென்ட் வந்ததா என்று தெரியவில்லை…நார்மலாக மாடரேஷன் வரும்…இன்று அதுவும் வரலை…
  கீதா

  Like

 3. ஹப்பா அவெய்ட்டிங்க் மாடரேஷன் என்று வந்துவிட்டது…

  கீதா

  Like

  1. @Geetha :
   உங்களது கமெண்ட்டை மட்டும் மாடரேஷனில் வர்ட்ப்ரெஸ் ஏன் வைக்கிறது என்று புரியவில்லை!

   இந்த சப்ஜெக்ட்டில் இன்னும் நிறைய எழுத – இந்திராகாந்தியின் 1974 போக்ரான் அதற்குப்பின்னான அம்மணியின் அமைதி, நரசிம்மராவ், வாஜ்பாயி என்று வரும். ஒரேயடியாக வாசகர்களை நான் பயமுறுத்த விரும்பவில்லை. வேறொரு கட்டத்தில் நான், அணுஆயுத, ஏவுகணை விஷயங்களில் சர்வதேச அழுத்தம் பற்றி எழுதக்கூடும்! வெளிஉறவு விஷயங்கள் பற்றியும் ( நம்ப லைனே அதுதானே!) எழுதலாம் என எண்ணம். குறிப்பாக மோதி/சுஷ்மா ஸ்வராஜின் தீவிர முனைப்பில் நாம் வெளிநாட்டு உறவுகளில், சர்வதேச அரங்குகளில் பெற்ற நன்மைகள் என்றெல்லாம்.. (நமது மீடியாக்களும் அரசியல் கட்சிகள் என்கிற பெயரில் இயங்கும் தேசவிரோத சக்திகளும் ஒருபொழுதும் கூறாதவை- கூறவிரும்பாதவை..)

   மேலே போக்ரான் சூழல் பற்றி இன்னும் எழுதியிருக்கிறேன் ஸ்ரீராமுக்கான பதிலில். படியுங்கள்.

   Like

 4. ஸ்ரீராமுக்கான பதிலைத்தான் முதலில் வாசித்தேன் அண்ணா. நல்ல விவரங்கள் அதை வாசித்ததும் நான் என்ன நினைத்தேனோ அதை நீங்கள் எனக்குக் கொடுத்த பதிலில் சொல்லிவிட்டீர்கள்.. //வெளிஉறவு விஷயங்கள் பற்றியும் ( நம்ப லைனே அதுதானே!) //

  பல நாடுகள் – வளந்த நாடுகள், வளரும் நாடுகள், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நாடுகள் என்று பல நாடுகளுக்கும் நீங்கள் அதுவும் வெளியுறவுத் துறையில் இருந்ததால் நிச்சயமாக நீங்கள் பல விஷயங்களையும் குறிப்பாக பத்திரிகைகள் கண்டு கொள்ளாத, முதன்மைப்படுத்தாத பல விஷயங்களை நீங்கள் சொல்ல முடியுமே என்று நினைத்தேன். ஏனென்றால் அந்த நாடுகளைப் பற்றியும் கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள். (சொல்வனம் கட்டுரைகள் மிக மிக நன்றாக இருக்கின்றன..) ஸோ நுணுக்கமான பார்வையில், யதார்த்த அனுபவ ரீதியிலான வகையிலும் நீங்கள் எழுதுஅதற்குப் பல இருக்குமே என்று நினைத்தேன்…வாஜ்பாயி நல்ல பிரதமராக தலைவராக இருந்தார் என்பது மிக மிக உண்மை. நல்ல மனிதரும்..எழுதுங்கள் அண்ணா நேரம் கிடைக்கும் போது…

  (இப்ப காலை எழுந்ததும் காபி…பின்பு கனிவு கொடுக்கம் நல்ல பாட்டு மாலை முழுவதும் ஐ பி எல் என்று வழக்கப் படுத்திக் கொண்ட பாப்பா வாச்சே இப்ப ஹா ஹா ஹா)

  எனக்கு அளித்த பதிலையும் வாசித்தேன்…பொக்ரான் சூழல் பற்றியும்…நல்ல விரிவான தகவல்கள். நல்ல நினைவுத்திறனும் வியக்க வைக்கிறது அண்ணா.

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா: மீள்வருகை, உற்சாகமான கருத்துக்கு நன்றி.

   சர்வதேச விஷயங்கள் -இந்தியாவின் கோணத்தில், என எழுத ஆரம்பித்தால் எங்கெங்கோ சென்றுவிடும். நரேந்திர மோதியின் ஆட்சி பற்றி மிகத்தவறான, விஷமமான கருத்துக்களைக் கொளுத்திப்போட்டுக்கொண்டிருக்கும் ப்ரஹஸ்பதிகள் நிறைந்த தமிழ்நாட்டில்-இதர பகுதிகளில், சரியான perspective-தரலாம் என்றும் எண்ணுவதுண்டு. அப்புறம் நான் ஒரு அரசியல் பதிவர் என்றழைக்கப்படலாம்! (உடனே முத்திரை குத்துவது நம்ம ஆட்களின் பழக்கமாயிற்றே).
   ஏற்கனவே, 2015 புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில் என்னை ஆன்மீகப் பதிவர் என வகைப்படுத்தியிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். ஆணையும் பெண்ணையுமே புரியாதவனைப்போய் ஆன்மீகப் பதிவன் என்றா அழைப்பது? என் பதிவில் அவர்கள் என்னத்தை க் கண்டார்களோ ?

   Like

 5. உங்களுடைய அனுபவங்கள் புத்தகங்களாக வர வேண்டும்.. வெளியிட முடியாவிட்டாலும் மின்னூலாக அளியுங்கள். அதோடு மோதி செய்த, செய்யப் போகும் நல்லவை அனைத்தும் விபரமாகப் பதியப்பட வேண்டும். சாதாரணமாக எங்கே உட்கார்ந்திருக்கும் நமக்கே அவரின் திறமை தெரிகிறது. ஆனால் மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே! 😦 அவர் ஏதோ பொய்களைப் பேசும் உளறல் அரசியல் வாதி என்றே முத்திரை குத்துகின்றனர். 😦

  Like

  1. @ கீதா: புத்தகம், மின்னூல் என்றால் ஒரேயடியாக ஆசையூட்டுகிறீர்களே. முயற்சிக்கவேண்டும். ஒரு நல்ல தலைவரின் பெயரைக் கெடுத்துக்குட்டிச்சுவராக்க சிலர் மற்றும் சில இயக்கங்கள் தமிழ்நாட்டிலும், நாட்டின் இதர பகுதிகளிலும் கங்கணம் கட்டி அலைகின்றனர் -அவர்களின் சொந்த, மற்றும் இயக்கங்களின் அரசியல் லாபத்திற்காக. இது எடுபடாது. நல்லவிஷயங்களை, உண்மையை மூடி மறைக்கமுடியாது. தங்கத்தின் முன்னே பித்தளை தாங்காது!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s