என்ன ஒரு திமிரு பாத்தீங்களா சார்?
திமிரா? நாம்பாக்கலையே.. எங்கே?
ரோட்டுல நடந்துவரும்போது அப்படி என்னத்தத்தான் பாத்துகிட்டு வர்றீங்க? இப்ப ஒரு பய, விருட்டுன்னு நமக்குள்ள ஸ்கூட்டரத் திருப்பி சீறிகிட்டுப் போறானே..ஒரு அடி வேகமா வந்திருந்தேன்னா, நா இடிபட்டு சாஞ்சிருப்பேன்!
சேச்சே.. சின்னப்பசங்க! கொஞ்சம் வேகமானவனுங்க. அவ்வளவுதான். ஆனா, அப்படில்லாம் இடிச்சுரமாட்டான்.
இடிச்சுரமாட்டானா? இடிச்சுட்டான்னா? சரி, நம்மள இடிச்சுத் தள்ளலன்னே வச்சிக்குவோம். போற வேகத்துல எங்கயாவது பள்ளத்துல இவன் விழுந்து கால கைய ஒடச்சிகிட்டான்னா என்ன செய்யறது? அறிவு வேணாம்.. ?
ஒன்னும் ஆகாது. அப்படியே ஆனாலும், 500 மீட்டருக்கு ஒரு ஆஸ்பத்திரி, கிளினிக்கு இருக்கு பெங்களூரிலே. போயி பேண்டேஜ் போட்டுகிட்டுப் போயிருவான்.
நிறுத்துங்க! பேண்டேஜ் டேப்புக்கும் எலெக்ட்ரிக் டேப்புக்கும் வித்தியாசம் தெரியுமா இவனுக்கு ?
ஓ..! அப்படியா சொல்றீங்க நீங்க..
பின்னே என்ன நா அப்பலேர்ந்து சொல்லிகிட்டு வர்றேன். நீங்க என்னத்த பாக்குறீங்க..என்னத்தப் புரிஞ்சிக்கிறீங்க..
அதுவா? .. பால்வண்ணம் பருவம் கண்டு.. வேல்வண்ணம் விழிகள் கண்டு.. மால்வண்ணம் நான் கண்டு .. வாடுகிறேன் ..
வாடிக் கெட்டுப்போங்க, இல்ல பாடிக் கெட்டுப்போங்க! ஒங்ககிட்டேல்லாம் பேசறதே வேஸ்ட்டு ..
**
அவர் பாட்டுக்குப் புலம்பறார்.
இவர் பாட்டுக்கு ரசிகரா இருக்கார்!
இசை உலகத்தையே மறக்க வைக்கிறதோ!
LikeLiked by 1 person
@ஸ்ரீராம் says:
உள்ளுக்குள்ளே பாட்டு ஓடிக்கொண்டிருக்கையில் வெளியே ஓடும் ஸ்கூட்டர் ஒரு பொருட்டா !
LikeLike
நாம் நினைத்தாலும் அவர்களைப் போல் செய்ய முடியுமா நாம் தொலைத்த வாழ்க்கை அவர்கள்வாழ்கிறார்கள் / காலத்துக்கு ஏற்ற வாழ்வு வாழட்டுமே
LikeLiked by 1 person
@Balasubramaniam G.M :
வாழட்டும். யார் வேண்டாம் என்கிறார்கள்!
LikeLike
ஹா ஹா ஹா ஹா…ஆராம்சே ஒருத்தர்….மற்றவர் எரிகொள்ளியாய்…அந்த ஸார் வந்திருக்கலைனா கண்டிப்பா நான் இது ஹஸ்பன்ட் வைஃப் னுநினைச்சுருப்பேன் ஹா ஹா ஹா ஹா
கீதா
LikeLiked by 1 person
@Geetha :
சரியாகச் சொன்னீர்கள். போஸ்ட் பண்ணுவதற்கு முன் இரண்டு தடவை படித்துப் பார்த்தபோதுதான் பொறியில் தட்டியது. அடடா, இது புருஷன் பொண்டாட்டி உரையாடல் என்று நினைத்துவிடுவார்களே என்று. போட்டேன் ஒரு சார்-ஐ.. தப்பித்தேன் உங்களிடமிருந்து!
LikeLike
ஹா ஹா ஹா ஹா ஹா “போட்டேன் ஒரு சார்-ஐ.. தப்பித்தேன் உங்களிடமிருந்து!” அது!!! ஹா ஹா ஹா
LikeLiked by 1 person
சின்னப்பசங்க வேகம் வேகம், வாழ்வை ரசிக்கும் பருவம்.
பாடல் பகிர்வு அருமை.
LikeLiked by 1 person
@ கோமதி அரசு :
இளமை என்றாலே வேகம், ஆட்டம் பாட்டந்தானே!
LikeLike
ஹா… ஹா… ரசித்தேன்…
LikeLiked by 1 person
@திண்டுக்கல் தனபாலன் :
வருக !
LikeLike
ஹாஹாஹாஹா!
LikeLiked by 1 person