சின்னதாக ரெண்டு . .

பூசித் தடவி.. போற்றிப்போற்றி..

போகிற இடம் தெரியாதென்பதால்
போகாதிருக்க முடியாது
இதற்கிடையில் ..
தெவிட்டாத அலங்காரம்
தீவிர கண்காணிப்பு – ஒருநாள்
நெருப்பு கொஞ்சவிருக்கும் மேனிக்கு

**

சிட்டாக ஒரு சிந்தனை

சிட்டுக்குருவிக்கான நாளில் உட்கார்ந்து
சிந்தித்தாயிற்று கொஞ்சநேரம்
எட்டி உயர்ந்திருக்கிறது பால்கனிப்பக்கம்
தட்டுத்தட்டாய் கிளைபரப்பிக் கீழ்வீட்டுமரம்
வெட்டச்சொல்லிடவேண்டியதுதான் இன்றைக்கு
தட்டில் வடாமும் காயமாட்டேன் என்கிறது ..

**

15 thoughts on “சின்னதாக ரெண்டு . .

  1. வருக!
   நீங்கள் பாக்யசாலி. மரங்களோடு இசைந்து வாழும் பாக்யம்.
   இந்த விஷயத்தில் அடுக்குமாடிக்குடியிருப்பாளர்களைவிட,
   சொந்த த் தனிவீட்டுக்காரர்கள் கொடுத்துவைத்தவர்கள். கீழேயும் மேலேயும் உங்களை அடிக்க ஆளில்லை!

   Like

 1. ஆஹா என்ன அருமையான இரு கவிதைகள் சூப்பரோ சூப்பர்…

  போகும் இடமும் தெரியாது, போகும் நாளும் தெரியாது.. அவை தெரியாமல் இருப்பதால்தான் நாம் இவ்ளோ கூத்துப் போடுகிறோம்:)..

  இது சம்பந்தப்பட்ட ஆனா வித்தியாசமான ஒரு கோணம்.. இது கண்ணதாசன் அங்கிள் ஜொன்னார்:-
  போகும் பாதை எதுவெனத் தெரிந்து விட்டால், முள்ளிலும் நடந்திடலாம், ஆனா பாதையே எதுவெனத் தெரியாதபோது என்ன பண்ண முடியும்???..

  Liked by 1 person

 2. சிட்டுக்குருவிக்கான நாளை சிட்டுக் குருவிக்குப் பயன்படுத்தாமல் உங்கள் செளகரியத்துக்குப் பயன் படுத்திச் சிந்தித்தமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:))

  Liked by 1 person

  1. @அதிராமியா:
   கண்ணதாசன் நெறயத்தான் ஜொள்ளியிருக்கார் ஒவ்வொரு விஷயத்தைப்பத்தியும்!
   சிட்டுக்குருவியைப்பத்தி சிந்தித்தபின்னே, நம்ப வேலயக் காண்பிக்கவேண்டாமா!

   Like

 3. மிகவும் ரசித்தேன் இரண்டையும்…

  ஒரு நாள் நெருப்புக்கு இரையாகப் போகும் மேனிக்கு அலங்காரத்தை விடுங்கள்…எரியும் வரைக்குமேனும் கொஞ்சம் கண்காணிக்கணுமே இல்லைனா நல்லாருந்து வயசானாலே எப்ப இது டிக்கெட் வாங்கப் போகுதோ…ஹும் கிடந்து பிராணனை வாங்குதுனு சொல்பேச்சுக்கள். இதுல மேனிய காக்காம படுத்தா அம்புட்டுத்தான்…நீங்க இந்த அர்த்தத்துல சொல்லலியோ?!!! சொல்லலைனா பொருந்தாது இந்தக் கருத்து…!!
  மத்தபடி அலங்காராம் அழகைப் பாதுகாத்தலுக்கு மெனக்கெடல் சொல்லுங்க…அதானே…

  சிட்டுக் குருவி சொல்லுது…..இது நல்லாருக்கே உங்களுக்கு வடாம் காயவைக்கணும்னா எங்க வூடுதான் கிடைச்சதாக்கும்… மரக் கிளைய உடைக்கனுமாக்கும்…மொட்டைமாடி எதுக்கு இருக்காம்….நாக்கு ருசிக்கனும்னா உடம்பையும் கொஞ்சம் வளைக்கணும்…சரி வெட்டினீங்கனா உங்க வூட்டுக்குள்ள அந்தா தெரியுது பாருங்க பால்கனி மேல ஒரு இடுக்கு அதுல எங்க கூட்ட மாத்திக்கிடறோம்….என்னா?!! இதுதான் டீலு…..

  கீதா

  Liked by 1 person

  1. @கீதா:
   உண்மை. இப்பவெல்லாம் வயசானவர்களைப்பார்த்தாலே சிலர் இன்னும் ஒக்காந்துருக்கே..எப்பப் பொறப்படுமோ? என்று முணுமுணுக்கிறார்கள்..நினைக்கிறார்கள். தங்களுக்கும் காலம் வரும் என்பதை மறந்துவிட்டு!

   கிராமத்தில் ஏகப்பட்ட சிட்டுக்குருவிகள், பறவைகளோடு வாழ்ந்தது நினைவுக்குவருகிறது. க்யூபாவின் ஹவானாவில்கூட- எங்கள் வீட்டு பால்கனியில் அரிசித்துணுக்குகளுக்காக வந்து உட்காரும். இந்தியாவில் இப்போது தேடவேண்டியதாகிவிட்டது.

   Like

 4. என்ன ரொம்ப தத்துவமாக இறங்கி விட்டீர்கள்! போகுமிடம் / நாள் தெரிந்தால் சுவை இல்லையே…நிச்சயமில்லாத நாளையின் கவலையின்றி சுகமாய் இன்று!

  Liked by 1 person

 5. வடாமை மொட்டை மாடிக்கு கொண்டு போனால் போச்சு! பால்கனியில் மர நிழல் நிழல் ஒரு வரம் அன்றோ!

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம் :

   லௌகீக வாழ்க்கையில் நிச்சயமில்லாத நாளை சுகமான இந்தப்பொழுதிற்குத் துணைபோகும்தான்.

   மொட்டைமாடியில் வேறென்ன ப்ரச்சினையோ ? பால்கனியில் கண்ணுக்கெதிரேயே வடாத்தை வைத்துக்கொண்டால் நல்லது என்று மாமி சொல்லியிருக்கக்கூடும்..

   Like

  1. Dr B Jambulingam :
   வடாம் காயமாட்டேன் என்கிறது என்று எழுதவில்லை. ‘வடாமும்’ என்று வருகிறது கவிதையில். இங்கே வடாமல்ல விஷயம்!

   Like

 6. சின்னதாக ரெண்டு!
  பூசித் தடவி.. போற்றிப்போற்றி

  நல்ல கவிதை. இந்தக் கவிதையில் பட்டினத்தார் நினைவுக்கு வருகிறார்.

  “இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
  ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே – பருத்ததொந்தி
  நம்மது என்று நாம் இருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
  தம்மது என்று தாம் இருக்கும் தான்”.

  சிட்டாக ஒரு சிந்தனை

  “சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
  கிளைகளின்மீது எம்பித் தாவுகிறது”
  வெட்டச் சொல்லிவிட்டால் எங்கே போகும்!

  Liked by 1 person

  1. @முத்துசாமி இரா :

   பட்டினத்தார் நினைவுக்கு வந்ததும் நல்லதே! கருத்தைச் சார்ந்து சிலசமயம் கவிதை வேறொன்றோடு தன்னை தொடர்புபடுத்தித் தாவும்.

   பறவைகளுக்கு வாழ்விடம் தராமல், மனிதன் தன் வாழ்வியலை உயர்த்திக்கொண்டுவிடமுடியாது. எப்போது புரியுமோ இந்த அடிப்படை உண்மைகளெல்லாம்..

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s