தொடர்ந்து வரும் அப்பா

இல்லை என்றானபின் மேலும்
இருக்க ஆரம்பித்தார் மனதில்
இப்போதெல்லாம் என்னில்
அவ்வப்போது ஒரு சிந்தனை
ஆறமாட்டாமல் வருகிறது
திரும்பிவந்து மீண்டும் சிலநாள்
இருக்கமாட்டாரா நம்மோடு
அந்தக்காலம் போலவே இரவு
ஆகாரம் முடிந்த கையோடு
ஆகாயத்தில் நிலாவும்
அதன்கீழே அப்பாவும்
தோழர்களாய்த் துணைவரக்
காலார நடக்கலாமே
கதைகதையாய்ப் பேசலாமே
ஆல் இந்தியா ரேடியோவில்
அருணாச்சலத்தின் நாதஸ்வரத்தை
ஆற அமர உறங்காதிருந்து
ஆர்வமாய் ரசிக்கலாமே
. . .
அப்பா .. ?

*

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் and tagged , , , , . Bookmark the permalink.

19 Responses to தொடர்ந்து வரும் அப்பா

 1. மிகவும் அருமை. இல்லை என்றானபின் தான் சில அருமைகளை தெரிகின்றன.

  // நம்மோடு
  அந்தக்காலம் போலவே இரவு
  ஆகாரம் முடிந்த கையோடு
  ஆகாயத்தில் நிலாவும்//

  இது போல ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவம் உண்டு.

  Liked by 1 person

 2. ஏன் எனக்கு மிகவும் பிடித்துப் போனது என்றால், என் அம்மா மறைந்தது 2002 இல். அம்மா மறைவு என்னை மிகவும் பாதித்தது. என் அப்பா மனைவியின் பிரிவால் மிகவும் பாதிக்கப்பட்டு அவர் பெயரில் நிறைய கவிதைகள் புலம்பலாய் எழுதி ஒரு புத்தகமே வெளியிட்டார் (ஹேமாஞ்சாலி) அவரின் சில நடவடிக்கைகள் எங்களுக்கு சிறு சங்கடத்தைக் கொடுத்ததுண்டு. ஏழு வருடங்களுக்குப் பின் சற்றே மீண்டு, 2009 இல் சென்னை வந்தார். கொஞ்சம் மற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

  2016 ஏப்ரலில் அவர் மறைந்தபோது அவர் இல்லாததன் தாக்கம் மனதில் அறைந்தது. இப்போதும் உணரும் வலி.

  சில செயல்களில், சில விருப்பங்களில், சில சுவைகளில், சில வார்த்தைப் பிரயோகங்களில் அவர் நினைவில் வந்து கொண்டே இருக்கிறார்.

  Liked by 1 person

 3. அம்மாவா? அப்பாவா? ஏனோ இரண்டின் இழப்புத் தாக்கத்தில் இப்போது அப்பாதான் அதிக வலியை மனதில் ஏற்படுத்துகிறார். சமீபத்து இழப்பு என்பதாலா? இல்லை என்றும் தோன்றுகிறது.

  அப்பா…..

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ ஸ்ரீராம்:
   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இறையனுபவம் இருப்பதுபோல், அப்பா அனுபவமும் ப்ரத்தியேகமாக இருக்கும்தான்.

   உங்கள் அம்மாவின் பிரிவின் தாக்கத்தில் உங்கள் அப்பா கவிதையாய்ப் பொறிந்து புத்தகமும் வெளியிட்டுள்ளார் என்பதை இப்போதுதான் அறிகிறேன். உருக்கம். அவர் மனதில் என்னென்ன ஓடிக்கொண்டிருந்ததோ..

   அம்மாவின் பிரிவு ஒரு வேதனை. அப்பாவின் பிரிவுதரும் சோகம் பிறிதொன்று என்றுதான் தோன்றுகிறது. வாழ்வெனும் மொத்தத்தொகையில் துக்கத்தின் வகைகள்..

   Like

 4. Geetha says:

  ஏகாந்தன் அண்ணா! உங்களின் வரிகள் என் மனதை மிகவும் தாக்கியது! அழுதுவிட்டேன்!

  என் அப்பாவுடன் தினமும் தொடர்பில் இருந்தாலும்…..என் மனதை உலுக்கியது….என்னை அறியாமலேயே அழுதுவிட்டேன்….வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை….
  நமக்கு வேண்டியவர்கள் இல்லாத போது நமக்கு அதைச் செய்திருக்கலாம் இதைச் செய்திருக்கலாம் என்று தோன்றும் இல்லையா…அப்படி மருகுவதை விட…இருக்கும் போதே ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்துவிட வேண்டும்…என்று தோன்றியது எப்போது என்றால் எதிர்பாராத என் அம்மாவின் மறைவு….51 வயதில்…அம்மா மறைந்த பிறகு. அதனால் என் அப்பாவுடன் அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன்…அதனால் தான் இந்த உணர்வு…

  கீதா

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ கீதா:
   ஐம்பத்தோறு வயதிலேயே அம்மா போய்விட்டாரா.. உங்களுக்கென்று ஒரு தனிச்சோகம் ஏன்தான் இப்படி வந்ததோ ?

   //நமக்கு வேண்டியவர்கள் இல்லாத போது நமக்கு அதைச் செய்திருக்கலாம் இதைச் செய்திருக்கலாம் என்று தோன்றும் இல்லையா…//
   என் அப்பாவைப்பற்றி அதிகம் நினைத்திருக்கிறேனே தவிர, உருப்படியாக அவருக்கு ஒன்றும் நான் செய்யவில்லை என்பது எனது அந்தரங்க சோகம். அவர் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அவரிடம் அன்பாக ஏதாவது சொல்லியிருக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. சிறுவயதில் எனக்கு வாயே இருந்ததில்லை. கண்களும், காதுகளும் மட்டுமே வேலை செய்தன. இப்போது வெளிச்சமிடும் அறிவு அப்போது எனக்கு இருட்டில் கிடந்தது. இந்த சோகச்சுமையோடுதான் நான் மிச்சசொச்ச வாழ்வை வாழ்ந்து தீர்க்கவேண்டும்.

   Like

   • // என் அப்பாவைப்பற்றி அதிகம் நினைத்திருக்கிறேனே தவிர, உருப்படியாக அவருக்கு ஒன்றும் நான் செய்யவில்லை என்பது எனது அந்தரங்க சோகம்//

    நானும் அப்படியே. அதே ஏக்கம். முன்னர் சொன்னால் “சரி வந்து இப்போது செய்” என்று சொல்லி விடுவா(ர்களோ)ரோ என்று இப்போது சொல்கிறேனோ என்றும் தோன்றும். அவரது ஆசை ஒன்று அவரது கடைசி ஐந்து வருடங்களில் இருந்தது. கடைசி வருடங்கள் என்பது தெரியாதே என்று இப்போது சொல்வது(ம்) எஸ்கேப்பிசமாகத்தான் இருக்கும். அதாவது அவர் பிறந்து வளர்ந்த, பள்ளியில் படித்த ஊருக்குப் போகவேண்டும் என்கிற ஆசை. போஸ்ட்போன் செய்துகொண்டே இருந்தோம். கடைசி வரை போகவில்லை.

    Like

 5. சுகி சிவம் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த தனது தாய் பற்றி கல்கியில் எழுதி இருந்தார். அதைப்பற்றி மிக யதேச்சையாக நேற்று கூட என் சகோதரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதுவும் நினைவுக்கு வருகிறது. இதைப்பற்றி முகநூலில் மட்டுமா, இல்லை எங்கள் தளத்திலும் பகிர்ந்திருந்தேனா என்று நினைவில்லை.

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ஸ்ரீராம்:
   அப்பாவின் ஆசையை நிறைவேற்றமுடியாத வருத்தம் உங்கள் மனதில் கனக்கத்தான் செய்யும். ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைவேறா ஆசைகள் ஏதோ ஒருவடிவில் வந்து, உச்சிமரக்கிளையில் கழுகைப்போல் உட்கார்ந்துவிடுகிறது.

   Like

 6. மிகவும் நெகிழ்ந்து விட்டேன்…

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @திண்டுக்கல் தனபாலன்:

   வெகுநாளுக்குப்பின் வருகையும் கருத்தும் – நன்றி நண்பரே.

   Like

 7. தொடர்ந்து வரும் அப்பா. நல்ல கவிதை. தங்கள் அப்பாவின் நினைவுகள் எங்களை நெகிழச் செய்தன.

  Liked by 1 person

 8. angel says:

  இல்லாதபோது அதிகம் தேடுகிறோம் 😦

  ஏப்ரல் வந்தா 9 வருடம் ஆகப்போது அவர் குரலை அருகாமையை உணர்ந்து

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @angel : உங்களின் அப்பா உங்களுக்குள் வாழ்கிறார். அல்லது உங்களது அருகிலேயே இருக்கிறார். அவ்வப்போது புரிந்து கொள்வீர்கள்.
   நானும் புரிந்துகொள்கிறேன்.

   Like

 9. Dr B Jambulingam Dr B Jambulingam says:

  பொதுவாகவே இருக்கும்போது நாம் உணராததை பின்னர் தாமதமாக உணர்கிறோம்.

  Liked by 1 person

 10. கதைகதையாய்ப் பேசலாமே
  ஆல் இந்தியா ரேடியோவில்
  அருணாச்சலத்தின் நாதஸ்வரத்தை
  ஆற அமர உறங்காதிருந்து
  ஆர்வமாய் ரசிக்கலாமே//

  இந்த வரிகளை படிக்கும் போது எனப்பாவின் நினைவு வந்தது.
  என் அப்பா எங்களை விட்டு 51 வயதில் இறந்து விட்டார்கள்.

  என் அப்பாவிற்கும் இசை மீது மிகுந்த ஆர்வம்.
  எம்.எஸ் கச்சேரி எங்கு நடந்தாலும் வானெலியில் வாந்தாலும் கேட்பார்.
  நாம் பேசும் நகைச்சுவைகளை கேட்டு உடல் குலுங்க கண் ஓரத்தில் கண்ணீர் துளிர்க்க சிரிப்பார்கள்.
  எப்போதும் நெஞ்சில் அவர் நினைவுகள்!
  அப்பாபோல் வராதுதான்.

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @கோமதி அரசு:

   51-வயதிலேயே அப்பாவை இழப்பதென்பது பெரும் அதிர்ச்சி தருவது. தாங்கமுடியாதது.
   உண்மை . அப்பாபோல் வராது.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s