உண்டோ ?

கிட்டாத பழம்தான்
எத்தனை இனிப்பு
எட்டாத சிகரம்
எவ்வளவு உன்னதம்
தேடித்தேடியும் நாடிஓடியும்
கிடைக்காத கடவுள்தான்
எப்பேர்ப்பட்டவன்
அருகிலில்லாக் காதலிக்கு
இணை யாருமுண்டோ உலகில்?

**

11 thoughts on “உண்டோ ?

 1. நரிகளுக்குதான் புளிக்கின்றன எட்டாத பழங்கள். ஏட்டில் மட்டுமே வெட்டென மறக்க முடிகிறது கிட்டதவைகளை!

  அருகிலில்லா மனைவிக்கு என்று வந்திருக்கவேண்டுமோ!!!! தட் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா மொமண்ட்!

  Liked by 1 person

   1. // இந்தக் கவிதையில் மனைவியில்லை!//

    கவிதையில் மனைவியில்லையா? மனைவியில் கவிதை இல்லையா? 😛

    Liked by 1 person

 2. @ ஸ்ரீராம்:
  //..ஏட்டில் மட்டுமே வெட்டென மறக்க முடிகிறது கிட்டாதவைகளை //

  ஏட்டில் எழுதிவைத்தேன்
  எழுதியதைச் சொல்லிவைத்தேன்..

  Like

 3. (மின்னஞ்சல் மூலமாகப் பின்னூட்டம்) கீதா சாம்பசிவம்:

  மனைவிக்குத் தெரியுமா இந்த விஷயம்?

  Liked by 1 person

 4. @ கீதா சாம்பசிவம்:

  மனைவியிடம் நல்லபேர் வாங்க நான் முயற்சிப்பதில்லை.(சராசரியாகப் படைக்கப்படவில்லையே, என்ன செய்ய)

  அதற்காக, நீங்கள் நல்லவரா, இல்லை கெட்டவரா.. என்று ஆரம்பித்துவிடாதீர்கள்!

  Like

 5. கிட்டாத பழம்தான்
  எத்தனை இனிப்பு
  எட்டாத சிகரம்
  எவ்வளவு உன்னதம்//

  பலருக்கும் இதெல்லாம் உன்னதமாகத் தோன்றினாலும்…

  //தேடித்தேடியும் நாடிஓடியும்
  கிடைக்காத கடவுள்தான்//

  புளித்துப் போய்விடுகிறார்…நிந்திக்கிறார்கள்…சினிமா போல டொட்டொய்ங்க்னு வந்து கையைத் தூக்கி கண் கூசும் அளவு ஒளி பாய்ச்சி சொடக்கு போடும் நொடியில் கண் திறக்கும் பொது நினைத்ததெல்லாம் நடந்திருக்கணும் என்று நினைப்பதால் இருக்கும்….உடனே கடவுள் இல்லை என்று….கிட்டத பழத்தை ஏற்பபவர்கள் எட்டாத சிகரத்தை நோக்கி இடைவிடாது தொட நினைப்பவர்கள் இதில் மட்டும் ஏனோ சோர்ந்து விடுகிறார்கள்…

  //எப்பேர்ப்பட்டவன்//
  இது கடவுளிடம் எதையும் எதிர்ப்பார்க்காதவர்கள் சொல்லுவது!!!???

  ரசித்தேன்….

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா: ரசனைக்கு நன்றி
   கடவுளில், இறைமையில், பிரும்மத்தில் உண்மையில் ஆழ்பவன் (ஆழ்வார்களைப்போல் வேறெதையும் சிந்திக்காமல்), சோர்வடையமாட்டான். இங்கே உண்மைத்தேடல் யாரிடமும் இல்லை. நுனிப்புல் மேய்பவர்களே அதிகம். படிக்காமலே ஃபார்வர்ட் செய்யும் வாட்ஸப் வீரர்களைப்போலே. இதற்கெல்லாம் மசிபவரா அவர்?

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s