என்ன, நான் சொல்வது ?

இருக்கிறது ..
வாயைத் திறக்குமுன்னே
இல்லவே இல்லை என்கிறது மறுப்பு
முடித்துவிடலாம்..
நம்பிக்கை துளிர்க்கையில்
நம்மால் முடியாது எனும் அவநம்பிக்கை
நடுவிலே எழுகிறது முட்புதராய்
நடுங்காதே நல்லதே நடக்கும் ..
தேற்றுவதற்குள்
தேறாது ஒன்றும் பேராது என
வேறாக விஷயத்தைச் சித்தரிக்கும்
போறாத வேளையில் பிறப்பெடுத்து
சேறாகக் குழப்பும் ஜீவன்கள்
எதிர்ச்சொல்லுக்கும் மறுப்புக்கும்
அவநம்பிக்கைக்கும் அவதூறுக்கும்
அவ்வப்போது அதிர்ந்துகொண்டிருந்தால்
ஆகவேண்டியதைப் பார்க்கவேண்டாமா
மனிதனின் உளறலை புலம்பலைப்
பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டு
கன்னத்தில் கைவைத்தா நிற்கிறது
காலம் ?

-ஏகாந்தன்

10 thoughts on “என்ன, நான் சொல்வது ?

  1. ஆஆஆவ்வ்வ்வ் இன்று மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ… கவிதைக்கு முதல் ஆளாக வந்திட்டேன்…

    நீங்க சொல்றது உண்மை.. எனக்கு முக்கால்வாசி புரிகிறது கால்வாசி புரியாததுபோல இருக்கிறது…

    முதல் 4 வரிகள் படித்தபோது நினைத்தேன், ஒருவருக்கு ஏதோ நோய் வந்திருக்கிறது, சாப்பிட முயற்சிக்கிறார் ஆனா அந்த நோயின் தாக்கம் சாப்பிட முடியவில்லை.. இப்படி..

    ஆனா பின்பு அது மாறியிருக்கு:)..

    Liked by 1 person

    1. @அதிரா:
      இருக்கிறது என்கிறது ஒரு சமூகத்தின் ஒரு பகுதி. இல்லை என்று இன்னொரு பகுதி -காலங்காலமாய். எதைப்பற்றி? இன்னுமா புரியவில்லை?

      Like

  2. எதற்கும் காத்திருக்காது காலம் என்பதை உணரும் வேளையில் அதன் கையிலேயே பொறுப்பை ஒப்படைத்துவிட்டு முடியாது என்று நினைக்காமல் முடிந்தவரை முயற்சித்து விடலாம், வந்தது அல்லது வருவது வரை கடவுள் புண்ணியம் என்று நினைத்தோமானால் நாம் செய்ய வேண்டியதைச் செய்யும் முதல் படியில் ஏறிவிடுவோம். தேவை பாஸிட்டிவ் திங்கிங்!

    Liked by 1 person

    1. @ ஸ்ரீராம்:
      அது சரி. எப்போதுமே பாஸிட்டிவாக இருந்துகொண்டிருந்தால் போரடிக்காதா என்பார் சிலர் !

      Like

      1. போரா? பாசிட்டிவாக இருந்தால் தானே நீங்கள் சொல்லுவது போல் கன்னத்தில் கைவைத்து இருக்காமல் நகர முடியும்…அப்படிப் புலம்புபவர்கள் சில சமயம் எனக்குப் போரடிக்கும்….ஆனால் பாவம் என்று ஏற்றுக் கொண்டுவிடுவதும் உண்டு.

        கீதா

        Liked by 1 person

  3. துளசி: நன்றாக இருக்கிறது வரிகள்! இதுதான் நிதர்சனம் மனித மனம்!

    கீதா: ஆமாம். ஏகாந்தன் சகோ. மனம் இப்படித்தான் சில சமயங்களில் போராடும். என்றாலும் நேர்மறையாய்ச் சிந்திக்க முயன்று, முயன்ற வரை போராடி…அப்புறம் இருக்கவே இருக்கு துவண்டு வீழ்தல் சிலசமயங்களில்..அட போடா இப்படித்தானே எப்போதும் என்று மனம் அதையும் ஏற்றுக் கொண்டு அடுத்ததை நோக்கி நகரத் தொடங்கிவிடும்….

    Liked by 1 person

    1. @ துளசி: வருக, கருத்துக்கு நன்றி
      @ கீதா: இந்தக்கவிதையின் முதல் இரண்டு வரிகளில் நான் சூசகமாகச் சொல்லவிரும்பியது (அதிராவைக் குழப்பியது), ஆஸ்திக-நாஸ்திக கருத்து யுத்தத்தைத்தான்! மற்றபடி வேறு தளங்களிலும் மனிதனின் தடுமாற்றங்கள், குழப்பங்கள் என…

      Like

  4. மறைமுகமாய்ச் சொல்லி இருந்தாலும் புரிகிறது! இப்போதைய நிலைமை தடுமாற்றத்தைத் தான் தருமோ எனக் கவலையாகவும் இருக்கிறது! இதில் யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பதெல்லாம் இல்லை! குழப்பங்கள் தீர்ந்தால் போதுமே!

    Liked by 1 person

Leave a comment