’சொல்வனம்’ சிறுகதை : நிஜமாக ஒரு உலகம்

’சொல்வனம்’ இணையப் பத்திரிக்கையின் நடப்பு இதழில்
(இதழ் 182, 26 டிசெம்பர், 2017) எனது சிறுகதை
‘நிஜமாக ஒரு உலகம்’ வெளிவந்துள்ளது.
அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன்.

லிங்க்: https://solvanam.com/?p=51152

நன்றி: ’சொல்வனம்’

**

11 thoughts on “’சொல்வனம்’ சிறுகதை : நிஜமாக ஒரு உலகம்

 1. சூப்பர்ப் சார் ஒவ்வொருவரியையும் ரசித்து படித்தேன் .நீங்க சாம்பார் வடை சட்னின்னு சொல்லும்போது அப்படியே நானும் ரெஸ்டாரண்டில் உக்கார்ந்திருக்கிற உணர்வு .அந்த குட்டிக்குழந்தை போலவே நானும் அப்பா அம்மாவுடன் தோசையை பிச்சு சாம்பாரில் டிப் பண்ணி சாப்பிட்டிருக்கேன் 🙂 .விவேக் போல சிலர் அபூர்வமா இருப்பாங்க அவங்களுக்கு எதோ ஒரு அதை குறையென்பதைவிட எல்லாம் இருந்தாலும் எதோ ஒருவெறுமை .என்கூட ஓர் மாணவன் படிச்சி பின்னாளில் கனடா போனான் .அவன் இப்படித்தான் கொஞ்சம் விவேக் போல .10 பேஜுக்கு நோட்ஸ் எழுதினாலும் இதென்ன ஒண்ணுமில்லன்னு சொல்வான் 🙂 .குழந்தைகள் மட்டும்தான் தான் அவங்க உலகில் நிஜம் மட்டுமே இருப்பதால் மஞ்சு சந்தோஷப்பூக்களை பறக்க விடட்டும் விவேக் வாழ்க்கையில்

  Liked by 1 person

  1. @ஏஞ்சலின்:

   கதை உங்களது இளம்பிராயத்து நினைவுகளையும் கிளறிவிட்டுவிட்டதா!
   மனிதர்களும், வாழ்வுநோக்கிய அவர்களது அவதானிப்புகளும் பலவிதம்.

   Like

 2. இதுக்கு இங்கேயும் கமென்ட் போட்டிருந்தேனே! அது எங்கே? ம்ம்ம்ம்ம்????

  Like

 3. //விவேக்கிற்கு ஏற்பட்ட சோகத்தை யூகம் தான் செய்ய முடிகிறது. ஆனால் அது சரியா என்று தெரியவில்லையே! 🙁// இங்கேயும், சொல்வனத்திலேயும் இதே தான் பகிர்ந்திருந்தேன். ஆனால் இங்கே காணோம்!!!!!!!!!!!!!!!!! :))))

  Like

  1. @Geetha Sambasivam :

   வருகை, கருத்துக்கு நன்றி. சொல்வனத்தில் கருத்து வெளிவர தாமதமாகலாம்.

   Like

 4. கதை நன்றாக இருக்கிறது. விவேக்கின் மனம் ஏதோ ஒரு சிக்கலில் இருக்கிறதோ? அதாவது யதார்த்த உலகிற்கு அவனாம் வர இயலாமல் என்று? ஆனால் ஒரு சிறு குழந்தை அவனது மனதை நெகிழ்த்துகிறது குழந்தைகள் உலகம் தான் நிஜம் பேசும் உலகம் என்பதையும் மற்றும் கொஞ்சம் இறுக்கமான எப்போதும் மூடியிருக்கும் மொட்டைப் போன்ற அவனது மனது குழந்தையின் அன்பில் பூவாய் விரியத் தொடங்குகிறது ஆனால் பூவைப் போன்று அது தற்காலிக மலர்ச்சியாக இல்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் மனது சொல்கிறது.. அருமை…

  ஆனால் இப்படி விவேக்கைப் போன்றவர்கள் இவ்வுலகை எதிர்கொள்ள ரொம்பவும் கஷ்டப்படுவார்கள் அவனுக்கு ஏதோ உளவியல் ரீத்யாக ஏதோ ஒன்று அவனைப் பாதித்துள்ளதுபோல கதையில் தெரிகிறது. ஏதோ ஒன்று புரியுது ஏதோ ஒன்று புரியலை….மற்றபடி கதை நடை நன்றாக இருக்கிறது..

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா :

   மனிதர்கள் பலவிதம். எல்லோரு ஈஸியாக, down to earth -ஆக இருக்கவேண்டியதில்லை சிருஷ்டியில். சிலருக்கு எதிலும் மனம் ஒன்றாத, விலகிய நிலை அபூர்வமாக நிகழும். அது ஒரு ப்ரச்னையல்ல! மனோவியாதி என்று அர்த்தமல்ல. அதுதான் அவர்கள். அவர்களுக்கு வாய்த்திருக்கும் இயல்பு. அந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து, அவர்களும் வாழ்வை அவர்களது கோணம்/புள்ளியிலிருந்து அனுபவித்து , அடுத்த நிலைக்கு செல்வார்கள். அந்த அடுத்த நிலை ‘சராசரி மனிதர்’களின் நிலையல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s