கவிதைபோலக் கொஞ்சம் …

ரொம்பத்தான் எழுதிவிட்டேனோ உரைநடை? இந்தாருங்கள். பிடியுங்கள் காலையில் கொஞ்சம் கவிதை. . அல்லது கவிதைபோலக் கொஞ்சம் . .

அந்தம்

வெந்ததைத் தின்றுவிட்டு
வேகாமல் போய்விடும் மனிதனே
நொந்ததை – மனம் நொந்ததை
சிந்தையில் தெளியாது அகன்றது
விந்தையே அன்றி வேறென்ன?

**

ஹ்ம்ம்…

புரிந்துகொண்டதுபோல்
தலையாட்டிக்கொள்கிறேன்
சிரித்துக்கொள்கிறேன் சிலமுறை
வேறுசில நேரங்களில் மெல்ல
நினைத்துப் பார்க்கிறேன்
ஏதும் புரிந்துகொண்டேனா உண்மையில் ?
ஹ்ம்ம் .. புரியவில்லை ..

**

14 thoughts on “கவிதைபோலக் கொஞ்சம் …

    1. @ Balasubramaniam G.M :

      என் கவிதையிலிருந்து உங்களுக்கு ஏதோ புரிந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி!

      Like

  1. துளசி: ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க ஸார். எனக்கெல்லாம் கவிதை என்பது எட்டாக் கனி!!

    கீதா: அருமை அருமை…மிகவும் ரசித்தேன் ஏகாந்தன் சகோ! அந்தம் சிந்தையில் தெளியாது அகன்றது ஆனால் ..ஹ்ம்ம் நன்றாகவே பதிந்து புரிந்தது!!!!..ஏனென்றால் நானும் பல முறை புரியாமல் ஹ்ம்ம் சொல்லிக் கடப்பதால்!!

    Liked by 1 person

    1. @ துளசி: நன்றி. சில சமயங்களில் பொத்துப்பீறிட்டுக்கொண்டு சில சிந்தனைகள் இப்படி கவிதை வடிவுகொள்வதுண்டு.

      @ கீதா: உங்களின் மற்றும் ஸ்ரீராமின் கருத்துக்களை இரவில் படித்தபோது, வெந்த/வேகாத சிந்தனையின் நீட்சியாக இன்னுமொரு குட்டிக்கவிதை பிறப்பதைத் தவிர்க்கமுடியவில்லை. அடுத்தாற்போல் அதையும் இடுகிறேன்..கோழி முட்டையிடுவதைப்போல் !

      Like

  2. க்யூபா பற்றிய உங்கள் தொடர் முதலாம் பாகத்தை சொல்வனத்தில் வாசித்தேன் சகோ! இனிதான் இரண்டாம் பாகம் வாசிக்கணும்.
    காஸ்ட்ரோ, சேகுவெரா பற்றிய மறுபுறமும் கொஞ்சம் கொஞ்சம் அங்குமிங்குமாக வாசித்திருந்தாலும் உங்கள் பதிவு நிறைய சொல்லியது. உங்கள் அனுபவங்கள் செம..ஊரைப் பற்றிய விவரங்கள் எல்லாமே நிறைய அறியத் தந்தது…

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:
      சர்ச்சை அதிகம் வேண்டாமென்பதற்காக சே குவேராபற்றி சற்றுக்குறைத்துக்கொண்டேன். இல்லையெனில் இன்னும் இருக்கிறது. நான் புரட்சி/ கம்யூனிஸ்டுத் தலைவர்களின் மறுமுகத்தைத் தேடியவன் கண்டவன்! அவர்கள் பதவிக்கு வரும்விதமும் அதைத்தக்கவைக்க செய்யும், செய்த அட்டூழியங்களும் சாதாரணமானவை அல்ல. ( நம் நாட்டில் நல்லகண்ணு போன்ற நல்லமனிதர்கள்/ அப்பாவிகள் இருக்கிறார்கள்-கம்யூனிசத்தை ஒரு உன்னதம் எனக் கருதிக்கொண்டு. அவர்களுக்கு ரஷ்யா, க்யூபா, சீனா போன்ற நாடுகளில் ஐம்பது, அறுபதுகளில் நடந்த நல்ல காரியங்கள்(!) பற்றித் தெரியாது.)
      மேலும் படியுங்கள்.

      Like

  3. வெந்ததா, வேகாததா என்று அறியாததால்தான் நொந்து போகிறானோ என்னவோ!

    //புரிந்துகொண்டதுபோல்
    தலையாட்டிக்கொள்கிறேன்//

    அடுத்தவர் பேசும்போது அலைபாயும் மனம் இந்தக் கலையைக் கற்றுக்கொடுத்து விடுகிறது மனிதனுக்கு!

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்:

      உங்கள் கமெண்ட்டை (வெந்ததா வேகாததா..) இரவுபடித்தபின் இன்னுமொரு சிறுகவிதை தோன்றியது. பதிவில் இடுகிறேன்..வேறென்ன செய்ய!

      Like

    1. @ Geetha Sambasivam :

      வெந்து தணிந்ததற்குத்தான் விடிமோட்சம். வேகாதது என்பது ‘அங்கு’ போகாதது – திரும்பி இன்னொரு உருவில் வரப்போவது – மேற்கொண்டு வேக.. – என்று விரியும் இந்தக் கவிதையின் வெளி..
      கவிதைகளை ரசித்ததற்கு நன்றி.

      சொல்வனத்தில் என் க்யூபா கட்டுரைகளைப்பற்றி (இரண்டு பகுதிகள்) லிங்க் கேட்டீர்கள். இதோ:

      https://solvanam.com/?p=47535
      https://solvanam.com/?p=47689

      Like

Leave a comment