சொல்வனத்தில் டாம் ஆல்ட்டர்


(படம்: இணையம். நன்றி)

டாம் ஆல்ட்டர் (Tom Alter) : பிரபல பாலிவுட் நடிகர், ஹிந்தி தியேட்டர் பர்சனாலிட்டி, கிரிக்கெட் பத்தி எழுத்தாளர் என விதவிதமான முகங்கள்.. அவரைப்பற்றிய என் கட்டுரை ஒன்று (டாம் ஆல்ட்டர் என்றொரு கலைஞர்) நடப்பு ‘சொல்வனம்’ இணைய இதழில் வெளியாகியுள்ளது. வாசிக்க அன்பர்களை அழைக்கிறேன்.

லிங்க்: http://solvanam.com/?p=50753

நன்றி : சொல்வனம் இணைய இதழ்

16 thoughts on “சொல்வனத்தில் டாம் ஆல்ட்டர்

 1. தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்லி இருக்கும் படங்களில் ஆஷிக்கி, ஆராதனா,போன்ற படங்கள் பார்த்திருக்கிறேன். இரண்டு படங்களிலும் என்ன கேரக்டரில் வந்தார் என்று தெரியவில்லை. எனினும் தெரிந்து கொண்டேன்.

  லிங்க் தனி விண்டோவில் திறக்கும்படி செய்வது உதவியாய் இருக்கும்.

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம் :

   ஆராதனாவில் அவர் நடிக்கவில்லை. அந்த படம் அவருக்கு இந்தியப்படங்களில், நடிப்பில் ஆசையை மூட்டிவிட்டது.
   ராஹுல் ராய், அனு அகர்வால் நடித்த மகேஷ் பட்டின் சூபர் ஹிட்டான ஆஷிக்கியில், லேடீஸ் ஹாஸ்டலின் ஸ்ட்ரிக்ட் வார்டனாக வந்து காதலர்கள் சந்திப்பதை அனுமதிக்க மறுப்பார். ரசிகர்களின் கோபத்தை வாங்கிக்கட்டிக்கொண்டார்.
   மனோஜ் குமாரின் க்ராந்தி (புரட்சி)-யில் (19-ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்திய பின்னணி), பிரிட்டிஷ் ஆர்மி ஆஃபீஸராக வருகிறார். நான் பார்க்கவில்லை இந்தப் படத்தை.

   Like

 2. டாம் ஆல்டர் ..ஜுனூன் சீரியலில் வந்தவர் நினைவிருக்கே 🙂

  அங்கே சென்று வாசிக்கிறேன் ..

  Liked by 1 person

 3. அருமையான பகிர்வு .இவரை சில ஹிந்தி படங்களில் அப்புறம் முந்தி தூர்தர்ஷன் பேட்டிகளிலும் பார்த்திருக்கேன் ..அப்போவே ஆச்சர்யப்படுவோம் ஒரு வெள்ளைக்காரர் நம்மூர் சீரியலில் ஹிந்தியில் பேசறாரேன்னு
  மெகா சீரியல் ஜுனூனால்தான் எனக்கும் பலருக்கும் 90 களில் இவரை தெரியும் .tall and handsome அவரது நீல நிற கண்கள் என நிறைய பேசுவோம் ஸ்கூல் டேஸில்
  ஆனால் உங்க பதிவை வாசித்துதான் அவர் மறைந்ததையே அறிந்தேன் ..

  Liked by 1 person

  1. @ angelin :

   முதல் வருகை .. வருக!

   Tom was a quiet at the same time a sparkling performer in Hindi films and TV serials. எனக்கு அவரை எண்பதுகளில் சத்யஜித் ரேயின் The Chess Players படத்திலிருந்தே தெரியும். ஹிந்தி படங்களில் ஆங்கிலேயராக ரோல் வந்தால் அதற்கு உடனே இவரைத்தான் போடுவார்கள்.
   கடைசி வரை நாடகத்தில் நடித்திருந்திருக்கிறார் ஆல்ட்டர். அவருக்கு உடம்பு இவ்வளவு சீரியஸ் என கூட நடித்தவர்கள் கூட அறிந்திருக்கவில்லை. Exceptional personality in many ways.

   கருத்துக்குநன்றி.

   Like

 4. அங்கு வாசித்து இதோ இந்தக் கமென்டை போட்டு டைம் முடிந்துவிட்டது!!!!!!!! என்று சொல்லி மீண்டும் கேப்சா பொட சொல்லி போட்டால் ட்யூப்ளிகேட் கமென்ட் என்கிறது….எனக்கும் வேர்ட்ப்ரெஸ்ஸுக்கும் எப்பவுமே ஒரு சண்டை நடந்துதான் ஒரு வழியாய் முடிகிறது….

  பெயரும் கொஞ்சம் மட்டுமே (திரைப்படங்கள் மூலம் குறிப்பாகக் காலாபானி படத்தின் மூலம்!!) அறிந்திருந்த ஓர் ஆளுமை பற்றி தங்களின் கட்டுரை மூலம் பல அறிய முடிந்தது. வியக்கவைத்துவிட்டார் இந்தப் பன்முகத் திறமையாளர்! அதுவும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் இங்கு நம் நாட்டிலேயே தங்கி கலையுலகில் எத்தனை மிளிர்ந்திருக்கிறார். தோனியைப் பற்றிக் கூட அவர் எழுதியது கொஞ்சம் சர்ச்சையைக் கிளப்பியது இல்லையாஅ?

  நல்லதொரு கட்டுரை.

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா :

   என்னடா, ஆளையோ காணோம் எனப் பார்த்தேன். வந்துவிட்டீர்கள். வர்ட்ப்ரெஸ் பனிப்போர் தொடர்கிறதோ!

   மிகவும் வித்தியாசமான இந்திய சினிமா ஆளுமை ஆல்ட்டர். உத்தராகண்ட் மாநிலத்தை, முஸ்ஸூரி-டேராடூன் பகுதியை தன் பிறந்தமண்ணாக உணர்ந்தவர், அதற்காக ஏதேனும் செய்ய சிந்தித்தவர். அருமையான மனிதர். ஹிந்திப்படங்களில் எந்த ஒரு ஆங்கிலேய வீரராக, டாக்டராக வேடமேற்க இவரைத்தான் அழைத்தார்கள். இவரும் சின்னஞ்சிறு ரோல்களிலும் சிறப்பாக செய்துள்ளார். ஹிந்தி தியேட்டர் எனப்படும் நாடகத்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்த கலைஞர். An exceptional artiste and
   an extraordinary gentleman .

   Like

  1. @ கீதா: உண்மைதான். கிரிக்கெட் பக்தியின் உச்சத்தில் தோனியின் சில காரியங்களைக் கடுமையாக விமரிசித்திருக்கிறார். Alter is a respected Cricket columnist.

   Like

 5. ஆஆஆஆவ்வ்வ் மீயும் லாண்டட்…. பத்திரிகையை விரிச்சு, ரொம் பற்றிப் படிச்சு வர லேட்டாப் போச்ச்ச்ச்ச்… மிக அருமையான தகவல்கள். இப்படி நிறையத் தகவல்கள்
  எனக்கு நாளுக்கு நாள் கிடைக்குது, ஆனா எல்லாம் மனத்தில நிக்குமோ தெரியவில்லையே:)..

  அவரின் முகத்திலே ஒரு செந்தளிப்பு ஒளி இருக்கு.

  Liked by 1 person

   1. @ angelin :

    நீங்க க்ளாரிஃபை பண்ணாட்டி, ஏதாவது சிடி-ரொம் பத்தி எழுதிப்புட்டோமோ எனத் தடவியிருப்பேன். தப்பிச்சேன்!.

    Like

   2. /////ரொம்// is Tom 🙂//

    என் செக்கரட்டறிக்கு அடுத்த மாதம் முதல் சலரியில் வன் பவுண்ட் உயர்த்தப்போறேன்ன்:))

    Like

 6. @ அதிரா:

  வந்தீங்க.. ரொம்-பத்திப் படிச்சீங்க ..சந்தோஷம்.

  மனசுல எது தங்கணுமோ அது தங்கும். கவலை எதுக்கு?

  செந்தளிப்பு ஒளி ! – இதைத்தான் தேஜஸ் என்பார்கள் சமஸ்க்ருதத்தில்..

  Like

  1. ஓ தேஜஸ் கேள்விப்பட்டேன் எங்கோ.. அது சமஸ்கிருதமோ?:).. அப்போ எனக்கு இப்போ கிந்தி, தெலுங்கு, மலையாளம், ஃபிரெஞ் இத்தோடு சமஸ்கிருதமும் தெரியுமே:)) ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:))..

   அவதிப்பட்டு வேர்ட் பிரெஸ் ல ஜொயின் ஆகிட்டேன் ஆனா பாஸ் வேர்ட் என்ன போட்டேன் என மறந்திட்டேன்:).. இப்போ எதைத்தொட்டாலும் இங்கின பாஸ்வேர்ட் கேக்குது கர்ர்ர்:)).. இது கொம்பியூட்டரில் லொக்கவுட் ஆகாமல் இருப்பதால்.. வண்டில் ஓடுது:)

   Liked by 1 person

   1. @ அதிரா:

    தேஜஸ் – ஹிந்தியிலும் அதே.

    ரொம்ப சாமர்த்தியமான ஆள் என காண்பித்துக்கொள்ள ஏகப்பட்ட பாஸ்வர்ட் பயன்படுத்துவது இப்போது வழக்கம்!
    மறந்தால் மண்டையில் சூடு! பாஸ்வர்டுக்கென ஒரு பாக்கெட் டயரி வைத்துக்கொள்ளலாமே – டென்ஷன் குறையும்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s