மாலைக்குளிரின் மயக்கத்திலே

மயக்கும் மாலையைத் தழுவிக் கொஞ்சம்
வருடிப் பார்க்கிறது வாலிப இருட்டு
பால்கனி கதவைத் திறக்கையில்
குளிர்ச்சிக் குறுகுறுப்பாய் இளங்காற்று
நனைத்திருக்கிறது மழை எங்கோ எதையோ
வானத்தின் சாம்பல் கருத்துப் பெருக்கிறது
ஒளிர்ந்து மறைந்த சாகசமின்னல்
நொடியில் காட்டி மறைத்தது எதையோ
சிலிர்ப்புச் சிதறல்கள் கீழ்வெளியில்
ஓடிக்கொண்டும் ஓட்டிக்கொண்டும்
பிடித்தும் தூக்கி வீசியும்
கத்திக் கத்திக் கூப்பிட்டுக்கொண்டும்
பொங்கிப் பரவுகிறது பரவசக் குமிழிகள்
இருந்தும் – சீண்டும் குளிரின் நீள்விரல்கள்
இதமானதல்லவே பிஞ்சுகளின் மேனிக்கு
டிவியின் வில்லியிடமிருந்து விடுபட்டால்தானே
கூவி அழைக்கமுடியும் குழந்தைகளை அம்மாக்கள்?

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் and tagged , , , , , . Bookmark the permalink.

10 Responses to மாலைக்குளிரின் மயக்கத்திலே

  1. குழந்தைப்பருவத்தில்தான் மழையில் விளையாட முடியும். பெரியவர்கள் ஆனதும் உடலும் ஒத்துழைக்காது. மனதும் ​தைரியம் கொள்ளாது. சீரியல் வில்லிகளின் தயவில் குழந்தைகள் விளையாடட்டும் கொஞ்சநேரம் மழையில்.

    Liked by 1 person

  2. Aekaanthan says:

    @ஸ்ரீராம்:

    இந்தக் கோணத்தில் பார்த்தால் ஆண்டவன் தான் அடக்கிவைத்திருக்கிறான் அம்மாக்களை என்றும் தோன்றுகிறது. நடக்கட்டும் அவன் விளையாட்டு!

    Like

  3. பிஞ்சு குழந்தைகளை சிலர் வெயில், மழை, பனியில் விளையாட விடுவது இல்லை.
    மகிழ்ச்சியாக விளையாட அனுமதித்தால் நல்லது தான். எல்லாம் பழகினால் நல்லது.

    Liked by 1 person

    • Aekaanthan says:

      இப்படியும் பார்க்கலாம்தான். ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்கிற சிந்தனைகூட இல்லாமல், டிவி போதையில் சில அம்மாக்கள்..

      Like

  4. உண்மைதான். நல்லனவெல்லாம் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

    Liked by 1 person

    • Aekaanthan says:

      @ முனைவர் ஜம்புலிங்கம் :
      பெண்களின்மீது டிவியின் ஆதிக்கம் கவலைதருகிறது..

      Like

  5. டிவி முன்னால் அமர்ந்து விட்டால் எல்லாமே மறந்து விடும் அம்மாக்களுக்கும் கூட

    Liked by 1 person

    • Aekaanthan says:

      @ Balasubramaniam G.M :

      டிவி மும்முரத்தில் வெளியில் மழைபெய்கிறதா எனக் கவனிக்கூட அவர்களால் முடிவதில்லை!

      Like

  6. தவறுகள் சுட்டிக்காட்டிய விதம் அழகு நண்பரே வாழ்த்துகள்.

    Liked by 1 person

  7. Aekaanthan says:

    @கில்லர்ஜி தேவகோட்டை :

    நமது இளம் அம்மாக்களை நினைத்தால்தான் கவலை மிகுகிறது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s