கோவில்பட்டியில் சமீபத்தில் ஒரு போராட்டத்தை நமது பாரம்பரியமிக்க தேசியக்கட்சிக்காரர்கள் நடத்தினார்கள் என்கிறது மீடியா செய்தி. ’இப்ப என்ன அதுக்கு’ என்று சிடுசிடுக்காதீர்கள். கொஞ்சம் பொறுமையாகப் பொறுமை காட்டவேணும். அப்போதுதான் எதையும் உங்களுக்குச் சொல்ல முடியும்.
மக்கள் பிரச்சினை சம்பந்தப்பட்டதுதான் இந்த போராட்டம். அதனால் நியாயமானதே. என்ன பிரச்சினை? ஆயிரக்கணக்கான
பயணிகளை தினம் சந்திக்கும் ஒரு பிஸியான ஊரின் பஸ்நிலையத்திற்குத் தேவையான யோக்யதை எதுவும் கோவில்பட்டி நிலையத்திற்கு இல்லை என்கிறார்கள் தினம் தினம் அவஸ்தையை அனுபவிப்பவர்கள். விசித்திரம் என்னவென்றால், பழைய பஸ் நிலையத்திற்குப் பதிலாக புதிய பேருந்து நிலையம் சமீபத்தில்தான் திறக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது முன்னேற்றம்? முன்பு 28 பேருந்துகள் நிறுத்த வசதியிருந்த ‘B’ கிரேடு நிலையமாக இருந்தது கோவில்பட்டி. இப்போது 18 பஸ்கள்தான் நிறுத்தமுடியும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கென பஸ்களின் நேர அட்டவணை கூடப் பொருத்தப்படாமல், கட்டணக் கழிப்பிட வசதியும் செய்துதரப்படாமல் ‘C’ கிரேடு பேருந்து நிலையமாக மறுபிறவி எடுத்திருக்கிறது அந்த பஸ்ஸ்டாண்ட். அப்பாவி மக்களை சீண்டிக்கொண்டே பொழுதுபோக்கவேண்டும் என நினைக்கிறார்களா ஆட்சியாளர்கள்? அப்படித்தான் இருக்கவேண்டும்.
பொதுமக்களின் இன்னல்கள்போக்க, நடவடிக்கை வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். நோக்கம் சரியானதே. விஷயம் இதோடு நிற்கவில்லை; இந்தப் போராட்டத்தை ஒரு நூதனப் போராட்டமாக நடத்தினார்களாம் கோவில்பட்டி காங்கிரஸ்காரர்கள். ஆ.. காங்கிரஸ்.. எப்பேர்ப்பட்ட கட்சி? இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை, ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டுத் துரத்தியடிக்கப் போராடும் ஒரு பேரியக்கமாக வடிவமைத்துத் தலைமை தாங்கினார் மகாத்மா காந்தி. வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப்
போராடுகையில் ஹிம்சையை, வன்முறையைத் தவிர்த்தார். எங்குமே, யாருமே கேட்டிராத நூதன வழியாக அஹிம்சைப் போராட்டத்தை அறிவித்தார். இந்தியா முழுவதும் சுதந்திர உணர்வில் எழுந்து ஆர்ப்பரிக்கவைத்தார். ஆங்கிலேய ஆட்சியை ஆட்டம்காணவைத்ததோடல்லாமல், உலகின் கவனத்தையே இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டார் காந்தி. அன்னாரின் அடிச்சுவட்டை இம்மியளவும் பிசகாமல் தொடர்பவர்களல்லவா அன்னை சோனியாவின் காங்கிரஸார்?
காந்திக்கு மேலேயும் ஒருபடி போகப் பார்த்திருக்கிறார்கள் கோவில்பட்டியில். ‘நூதனப் போராட்டம்’ என்பதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். எப்படி இவர்களது நூதனம்? ஹிம்சைவழிப் போராட்டம். என்னய்யா சொல்கிறீர் என்று கோபப்படுகிறீர்கள். பொறுமை.. பொறுமை. தமிழ்க்காங்கிரஸார் சொகுசாகத் தின்றுவிட்டு, வெள்ளைவெளேர் வேட்டிசட்டையோடு பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கோஷமிட்டார்கள். ’அதுக்காக, சாப்பிடாமயா இந்த வெயில்ல வந்து போராடமுடியும்’-னு பாயாதீங்க. மேற்கொண்டு அறியுங்கள். இரண்டு அப்பாவி விலங்குகளை – அதாவது அவர்களிடம் எளிதில் அகப்பட்டுக்கொண்ட இரண்டு கழுதைகளை- தரதரவென இழுத்துவந்து அங்கு அடைத்துவிட்டார்கள். மணிக்கணக்கில் விலங்கு ஹிம்சை. கோஷம். நூதனப் போராட்டம் ! ’கழுதையைப் பார்த்தாவது கோவில்பட்டிக்கு யோகம் வருமாம்’ – சொல்கிறார் ஒரு லோகல் காங்கிரஸ் பிரஹஸ்பதி. இப்படிப் போகிறது செந்தமிழ்நாட்டில் நமது பாரம்பரியமிக்க தேசிய கட்சியின் கதை. காந்திவழி வந்த அரசியல்வாதிகளின் போராட்ட நெறி ..
**
ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று வடிவேல் பாணியில் கிண்டல் செய்வார்களே… அது இவர்களுக்கு சரியாய்ப் பொருந்தும்!
LikeLiked by 1 person
@ஸ்ரீராம்: வரவிருக்கும் நாட்களில் தமிழர்கள் கண்டு களிக்க இன்னும் என்னென்ன அரசியல் காட்சிகள் பாக்கி இருக்கின்றனவோ !
LikeLike
என்ன ஏகாந்தன் சகோ நீங்க இப்படி எல்லாம் பாரம்பரிய காந்திவழி??? (ஆமாம் காந்தி கலைக்கச் சொன்னாரே காங்கிரஸை அன்று சுந்தந்திரம் பெற்ற பின்..ஆனா பாருங்க இப்ப) வந்த காங்கிரஸ் செஞ்ச போராட்டத்தத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!!!! நாங்க போட்டுருக்கற இந்த வெள்ளை வெளேர் வேட்டி சட்டைக்குக் காரணம் எங்கள் துணிமூட்டைகளைச் சுமந்து செல்லும் இந்தக் கழுதைகள்தான் …அது போல இந்தப் பேருந்து நிலையத்தால.. கழுதை மாதிரி உழைக்கற எங்க மக்கள் படும் அல்லல்களைப் பாருங்கள் அதனால ரெண்டுகால் கழுதைங்களை ரட்சிக்கணும் நு நாலுகால் கழுதைகள் அதை ஹிம்சை பண்ணி நூதனப் போராட்டம் பண்ணிருக்காங்க….இதுக்குப் போயி இப்படி !!! ??? சொல்லலாமா?!! சொல்லுங்க..
இப்படியானவங்க இருக்கற வரை தமிழ்நாடு உருப்படப் போவதில்லை…கழுதைங்க நு திட்ட வந்துச்சு ஐயோ பாவம் கழுதைங்கனு சொல்லி அதுங்கள கேவல்ப்படுத்தினா மாதிரி ஆகிடும்…அப்பாவி ஜீவன்கள் இந்த அடப்பாவிகளிம் மாட்டிக் கொண்டு…ஹும்
கீதா
LikeLiked by 1 person
@ துளசிதரன்,கீதா:
//கழுதைங்க நு திட்ட வந்துச்சு ஐயோ பாவம் கழுதைங்கனு..//
இதுகளத் திட்டறோம்னு அப்பாவி விலங்குகளோட பேரக் குறிப்பிட்டு அவமதிச்சிரக்கூடாது. அதுங்க பட்ற கஷ்டங்க போதும். நீங்க சொல்றது சரிதான்.
பின்ன என்னதான் செய்யறது? இந்தக் கழிசடைகளத் திட்றதுக்குன்னு புதுசா ஏதாவது அபத்த வார்த்தைகள உருவாக்கினாத்தான் சரியாவரும்போலருக்கு!
LikeLike
கழுதைதான் கிடைச்சுதா இவங்கே பலன் அடைய……. காலக்கொடுமை.
உங்கள் பதிவு வெளியாவது எனக்கு தெரியவில்லை நண்பரே
LikeLiked by 1 person
@கில்லர்ஜி தேவகோட்டை :
காலத்தின் கோலந்தான் எல்லோரையும் பாடாப்படுத்துது..
//உங்கள் பதிவு வெளியாவது எனக்கு தெரியவில்லை நண்பரே//
என் பதிவு வெளியிடும்போது தமிழ்மணத்திலும் (அது ஒன்னுதானே நமக்கு கெடச்ச திரட்டி) பதிவு செய்கிறேனே.. எல்லோரும் கொஞ்சம் பாத்துவைக்கட்டும்னு. நீங்க தமிழ்மணம் பக்கம் அடிக்கடி வர்றதில்லையோ?
LikeLike
பெங்களூர் வாத்தல் நாகராஜைப் பின்பற்றுகிறார்களோ
LikeLiked by 1 person
@Balasubramaniam G.M :
வாத்தல் நாகராஜுக்கு இந்த விஷயத்தில் ஏதாவது நேஷனல் அவார்ட் கொடுக்கலாம்!
LikeLike
இவ்வகையான போராட்ட நெறிதான் இப்போதைய அரசியல்.
LikeLiked by 1 person
உண்மைதான்..
வருகைக்கு நன்றி
LikeLike