எங்கள் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் நுழைந்து உள்பக்கமாகபோய்த் திரும்பி நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன். தற்செயலாக அடுக்குமாடிச்சுவரின் உயரத்தில், அந்த சிறிய போர்டு கண்ணில் பட்டது. Don’t feed the pigeons. அடப்பாவிகளா! புறாவுக்கு சாப்பிட ஒன்றும் போடக்கூடாதா? பிச்சைக்காரனுக்கும் காசு, கீசு போட்றக்கூடாது. நாய் வாசலில் பசியோடு நாளெல்லாம் பட்டினியாகப் படுத்துக்கிடக்கட்டும். எதையும் போடாதே. நாம் மட்டும் நல்லா இருப்போம்.. டேய், நடக்கக்கூடிய காரியமா இது?
அந்தக்காலத்து மாடப்புறாக்கள் தான் இந்தக்காலத்து கோபுரப் புறாக்கள், அப்பார்ட்மெண்ட்டுப் புறாக்கள். இவைகள் மரங்கள் பக்கம் போகாது குடியிருக்க. கோயில் கோபுரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என உயர்ந்த கட்டிட அமைப்புகளில் வாழும். இந்தக்கால அடுக்குமாடிக் கட்டிடங்களின் உச்சிகள், மொட்டை மாடிகள் இவை ஜோடி ஜோடியாய்க் குடும்ப வாழ்வு நடத்த வசதியாகிப்போகின. கட்டிடங்களின் பால்கனிகளில் இங்குமங்குமாக அவ்வப்போது இவை பறக்கும். சிலசமயங்களில் எங்காவது ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு ஙூம்..ஙூம்.. என ஒரு அழுத்தமான ஒலியில் முனகும். இவற்றின் வாழ்வு முறை அது. வேறென்ன செய்துவிடுகின்றன இந்தப் புறாக்கள்? இவை உன்னிடம் என்ன அல்வாத்துண்டையா தினம் தினம் கேட்கின்றன? இதுகளுக்காக மூலையில் கொஞ்சம் தானியத்தைத் தூவினால் என்ன, குறைந்தா போய்விடுவாய் நீ? ஏனிந்தக் கொலவெறி?
மெத்தப்படித்த உனது புத்திசாலித்திட்டங்கள் நாடெங்கும் பல காடுகளை சீராக அழித்துவருகின்றன; இயற்கை வளங்களை சூறையாடுகின்றன. வளமான வாழ்விடங்கள் அமைத்துக்கொள்வதாகச் சொல்லிக்கொண்டு, விலங்குகளின், பறவைகளின் இருப்பிடங்களைக் கபளீகரம் செய்கிறாய். கட்டிடங்கள், தொழிற்கூடங்கள் என்று ஏதேதோ முன்னேற்றமொழி பேசியே ஏரி, குளங்களையும் தூர்த்து மூடுகிறாய். இயற்கையை இப்படி சீண்டிவிட்டுக்கொண்டே நாளெல்லாம் வாழ்கிறாய். நவீனம் என்கிறாய்; நாகரிகம் என்கிறாய். என்னே என் திறமை என்று மார்தட்டிக் கொள்கிறாய். இடையிடையே பழம்பெருமையும் பேசி பம்மாத்து வேலை செய்கிறாயடா நீ! திடீரென எங்காவது சுனாமி, புயல், பூகம்பம் என இயற்கை சீற்றம் காட்டிவிட்டால், ஐயோ, அம்மா என்று அலறுகிறாய். ஓஸோனில் விழுந்தது ஓட்டை; உலகமே அழியப்போகிறதென்று என்று பேத்தினாய் ஒருமுறை! வான்வெளியின் கருங்குழி என்னையே பார்ப்பதுபோல் தெரிகிறதே என்கிறாய். அழிவுக்குழிகளை உன்னைச் சுற்றியும் நீயே தோண்டிவைத்திருக்கிறாய். திடீரென்று எல்லாக்குழியும் என்னயே பார்க்கிற மாதிரி இருக்கிறதே என்றால், என்னதான் செய்வது?
ஐந்தறிவை மட்டும் வைத்துக்கொண்டு, எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையேயும், விலங்குகள் எல்லாம் தங்கள் வாழ்வை சரிவர நிர்வகித்துவருகின்றன. உனக்குப் புரியாததா இது? ஆறை வைத்துக்கொண்டு அலட்டும் உன்னிடம் இந்த அடிப்படை சாமர்த்தியம் கூட காணப்படவில்லையே? மாண்புமிகு மனிதா! உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு எங்கே வேகமாகப் பறந்துகொண்டிருக்கிறாய்? புதிய உலகம் படைப்பதற்கா? இல்லை, இந்தக் கிரஹத்தின் கணக்கை ஒருவழியாக செட்டில் செய்துவிட்டு, வேற்றுக்கிரஹத்தில் போய் உட்காருவேன் என்கிறாயா?
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. இந்த
மண்ணைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடா
கடந்து செல்லவும் முடியலைடா…
**
இப்போதெல்லாம் பழைய பாடல்களை நிறையவே நினைவு கூர்கிறீர்கள்!
மனிதன் சுயநலமான மிருகம். தான் வாழ பிற உயிர்களைக் கொல்லும் விலங்கு. பூமி மனிதனுக்கு மட்டுமா படைக்கப்பட்டிருக்கிறது? இது போன்ற உயிர்களில் ஒன்றைக் காணாமல் அடித்தாலும் பூமியின் உயிர்ச்சுழற்சி பாதிக்கப்படும் என்று அறியாமல் அழிவைத் தேடுகிறான்.
LikeLiked by 1 person
@ஸ்ரீராம்: பிற உயிரனங்கள் மீது அவன் காட்டும் அலட்சியமும், சில சமயங்களில் வெறுப்பும் அதிர்ச்சி தருகிறது. இது எங்குபோய் முடியுமோ..
பழைய பாடல்கள் எனக்குள்ளே மிகவும் ஆழத்தில் நீந்திக்கொண்டிருக்கின்றன எப்போதும்!
LikeLike
என்னே ஒரு ஆச்சர்யமான coincidence..
இன்னிக்கு லண்டனில் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்தவாறு பார்த்தேன் …வீடுகள் வரிசையா இருக்கும் விக்ட்டோரியன் டைப் மிட் டெரஸ் வகை வீடுகள் ஒட்டு மேலே FEED THE PIGEONS என்று பெயிண்ட் அடிச்சி விட்டிருக்காங்க .நான் போட்டோ எடுக்கறதுக்குள்ள ட்ரெயின் வந்திருச்சு .சில மனிஷ ஜந்துக்கள் வேணாமுன்னு சொன்னாலும் இன்னும் ஈரம் வற்றவில்லை மனுஷ மனசிலிருந்து ..எங்க ஏரியா பக்கம் பார்க் இருக்கு அதில் தினமும் பஞ்சாபி தாத்தாங்க காலைல வந்து ப்ரெட் மற்றும் பறவை உணவுகளை தூவுவாங்க ..சில நேரம் விண்டர்நாலும் அவங்க பிள்ளைங்களை அனுப்பி உணவு தராங்க .
குளிர் வருமுன் இங்கே மூட்டைகணக்கில் பேர்ட் உணவு வாங்கி வச்சிருவாங்க எல்லாரும் அணிலுக்கு பறவைகளுக்கும் கொடுக்க
எங்க வீட்டு சோலார் பேனல் போடும்போது முள்ளு ஸ்பைக்ஸ் போடறேன்னாங்க அது கழிவு செய்யாதிருக்க ..நாங்க வேணாம்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டோம் ..
இன்னிக்கு புறாவுக்கு கொடுக்கதேன்னு சொல்லி வளர்க்கப்படும் சிறுவர் நாளை சக மனுஷனுக்கு தாராதேன்னு யோசிக்கும் அபாயம் வரும் நாள் தொலைவிலில்லை 😦 ஷேம் ON HUMANS
LikeLiked by 1 person
Shame on few arrogant selfish humans 😦
LikeLiked by 1 person
@Angelin: அஞ்சு, கருத்திற்கு நன்றி.
லண்டனில் ’புறாவுக்கு சாப்ட ஏதாவது குடுங்கப்பா!’ என்று எழுதியிருப்பது மனதுக்குக் குளிர்ச்சி. மற்றவைகளையும் அணைத்துப்போனால்தானே அவன் மனிதன்!
பெங்களூரில்தான் இந்த அதிர்ச்சி. டெல்லியில் குறிப்பாக கனாட்ப்ளேஸில், பெரிய சாலைகளின் நாற்சந்திகளின் சிமெண்ட் ப்ளாட்ஃபார்ம்களில் நிறைய சோளம் தூவியிருப்பார்கள். குறிப்பாக சனி, ஞாயிறுகளில். புறாக்கள் கூட்டம் கூட்டமாக வரும் உணவு கழிக்க. கூடவே சில காக்கைகளும். டெல்லியில் நான் பணியாற்றிய சௌத் ப்ளாக் /அமைச்சரவைக் கட்டிடங்களின் பின்பக்கப்பகுதிகளில் குரங்குகளும் கூத்தடிக்கும். அவற்றிற்கும் ரொட்டி, வாழைப்பழம், கொய்யா போன்ற பழங்களை ரோட்டோரங்களில் வைப்பார்கள். அவை எடுத்துக்கொண்டு கூரைகளின் மேல், மரக்கிளைகளில் உட்கார்ந்துகொண்டு சாலைகளை வேடிக்கைப்பார்த்துக்கொண்டே சாப்பிடும்.இப்படி பார்த்துத்தான் எனக்கும் பழக்கம்.
LikeLike
எங்கள் குடியிருப்பில் புறாக்கள் நிறைய இருக்கிறது. நம்மை நம்பி வாழும் உயிர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்யக்கூடாது என்பது என்ன நியாயம்?
எங்கள் வீட்டில் காலை ,மதியம்,, மாலை மூன்று நேரமும் உணவு உண்டு.
LikeLiked by 1 person
@ கோமதி அரசு: புண்ணியம் உங்களுக்கு. புண்ணியம் என்று ஒன்று இல்லாவிடினும், ஒரு உயிர் மற்றொன்றின் பசி தீர்க்க உதவுவது இயல்பானதுதானே..
LikeLike
சென்னையில் வேளச்சேரியில் என் மகன்வீடு இருக்கிறது அங்கு நிறைய புறாக்கல் வசிக்கின்றன ஆனால் விடியற்காலை நேரங்களில் அவற்றின் முனகல் சப்தம் கர்ண கொடூரமாய் இருக்கும் ஒரு வேளை அவற்றின் சப்தமே சிலரை இம்மாதிரி எழுதத் தூண்டியதோ
LikeLike
@ஜி.எம்.பாலசுப்ரமணியம்:
சாப்பாடு போடாவிட்டால் முனகல் நின்றுவிடுமா !
LikeLike
எங்கள் அபார்ட்மெண்ட்டிலும் நிறைய புறாக்கள்.
தினமும் காலையில் வாக்கிங் போகும்போது முதலில் புறாக்களுக்கு அரிசி/கோதுமை/ராகி போட்டுவிட்டுத்தான் எனது நடையைத் தொடருவேன். நான் போடுவதைப் பார்த்து இன்னும் சிலரும் புறாவுக்கு உணவு போட ஆரம்பித்திருக்கிறார்கள்.
வீட்டினுள் விட்டால் குடும்பத்தை விரிவுபடுத்திக் கொண்டே போகும். நாங்கள் குடி வருவதற்கு முன் இரண்டு ஜோடிகள் எங்கள் பால்கனியில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன. முட்டை பொரிந்து குஞ்சுகள் வரும்வரை நாங்கள் காத்திருந்து பிறகு குடித்தனம் வந்தோம். மிகவும் nasty பறவைகள். நாற்றம் தாங்காது. அதனால் அவைகளுக்கு உணவு போடாதீர்கள் என்று சொல்லுகிறார்களோ, என்னவோ?
LikeLiked by 1 person
பால்கனியோ, வாசலோ, கொல்லைப்புறமோ அடிக்கடி பறவைகள் தெரிந்தால் ஏதேனும் தானியத்தைப் போட முயற்சிப்போம். இது மனித இயற்கைதான். ஆனால் அப்பார்ட்மெண்ட்ஸ்களில் புறாக்கள் கூடவே குடியிருப்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. பால்கனியிலோ, டெர்ரஸிலோ, ஏதோ ஒரு மூலையிலோபோய் கொஞ்சம் சாப்பிடத் தூவிவிடவேண்டியதுதான். எப்படி அப்படிச் செய்யாதிருக்கமுடியும்?
உண்மைதான். புறாக்கள் தாங்கள் அண்டும் இடங்களை ஆபாசப்படுத்திச் சென்றுவிடும். அடிக்கடி அலம்பிவிடவேண்டியிருக்கும். nasty -தான் எனினும் சில மனித ஜென்மங்களைவிடவா!
LikeLiked by 1 person
ஹா இதுக்கு எவ்வளவு பெரிய கமென்ட் அடிச்சேன் அன்னிக்கு….வரவே இல்லையா? இந்த ப்ளாகரை என்ன செய்யலாம்….இருங்க பார்க்கறேன் எங்கேயாவது கமென்டை காப்பி பண்ணி வைச்சுருக்கேனானு பார்க்கணும்….
கீதா
LikeLiked by 1 person
அன்று போட்ட கமென்டைக் காணலை..சரி அது அப்படியே வராது இன்று மனதில் வருவதை அடிக்கிறேன்…ஓரளவு நினைவுக்கு வந்து விட்டது…
பாவம் புறாக்கள். அவை மாடப் புறாக்கள் இல்லையா ஸோ எல்லார் வீட்டு மாடத்திலும் தான் வாழும்…எச்சமிடும்..என் கஸின் வீட்டு பால்கனியில் அவை வருகிறது என்று விரட்டிவிட்டுவிடுவார்கள் .ஏனென்றால் எச்சமிடுமாம். துர்நாற்றமாம் ஹைஜின் இல்லையாம்…என்னென்னவோ..இத்தனைக்கும் அவனுக்கு விலங்குகள் பிடிக்கும் இயற்கை பிடிக்கும்..என்பான்….எனக்குப் புரிவதில்லை…அவர்கள் வெளியூர் சென்ற போது ஒரு முறை இவை வந்து எச்சமிட்டு எல்லாம் செய்திருக்கின்றன. கிட்டத்தட்ட 20நாள் மிச்ச எச்சங்கள். நாறுகிறது என்று ஆள் வைத்துக் க்ளீனிங்க். அந்த ஆள் இனி அள்ள மாட்டேன் என்று சொல்லிவிட கழுவல் துடைத்தல் என்று ஊரிலுள்ள எல்லா கிருமிநாசினிகளும் போட்டு…..விடுங்கள் மனிதர்கள் எத்தனை நதிகள், அருவிகள், குளங்கள் என்று துணி துவைத்து சோப் போட்டு, ஷாம்பூ போட்டு தேய்த்து, , அந்த மூன்று நாட்கள் நாப்கினை துணியை எறிந்து,ஏன் காண்டம்ஸ் கூட எறிந்து, ஆய் போய், உச்சா அடித்து என்று செய்யாத அட்டூழியங்களா….ரோட்டிலேயே செய்கிறார்கள் ஆறறிவு படைத்தவர்கள்….அவை தானே நமக்கும் முன்னாட காலத்திலிருந்து வாழ்ந்து வருபவை….மனிதன் எப்போதுமே தன் கீழ் உள்ளவற்றை ஆள நினைப்பவன் தானே!
என் வீட்டில் பால்கனியில் வரும் புறாக்களுக்குத் தானியம் போடுவேன்…எச்சமிடும் தான்…போனால் போகிறது…கழுவி விட்டுவிடுவேன்….என்ன அழகு தெரியுமோ…இத்த்னைப் புறாக்கள் இருக்குதேனு சந்தோஷப்படுவேன்..
என் வீட்டில் இரு செல்லங்கள். என் 8 வயதுப் பெண்கள். பைரவிகள்! ரொம்பச் சமத்து தெரியுமா…அதில் ஒருத்தி கொஞ்சம் குண்டு முடி வெயில் காலம் என்பதால் கொட்டியது. இந்தக் கஸின் வந்திருந்தான்…டீ கீதா ஒன்னு சொல்லறேன்…ப்ளீஸ் இதை டிஸ்போஸ் பண்ணிடு…முடி கொட்டுறது நல்லதே இல்லை….மாமா (என் அப்பா) வயசானவர் இருக்கார். என்னைக் கேட்டியானா மனிதனா நாயா நு கேட்ட நான் மனிதனுக்குத்தான் மரியாதை கொடுப்பேன். யு ஹாவ் டு ரெஸ்பெக்ட் யுவர் ஃபாதர்…என்றான்…செம காண்டானேன். ஆனா வெளில அமைதியா இருந்தேன்…
இப்போ புதுசா ஒன்னு கிளம்பிருக்கு ஏதோ ஒரு உபன்யாசம் செய்பவர் (ஃபேமஸ்தான் இங்கு நான் பொது வெளி என்பதால் சொல்லவில்லை) சொன்னாராம்…வீட்டில் நாய் வளர்த்தால் நாம் சொல்லும் ஸ்லோகங்களின் பலன் எல்லாம் அந்த நாய்க்குப் போகும் அதன் காதில் விழுவதால் என்று சொல்லியிருக்க இதைச் சொல்லிக் கொண்டு என் உறவுக் கூட்டம் ஒன்று ..நான் சொல்லுவேன்…போகட்டுமே….அந்த நாய்க்குப் புண்ணியம் கிடைத்தால் கிடைக்கட்டுமே..மோட்சத்துக்குப் போகட்டுமே நல்லதுதானே..அதிலும் சுயநலமா.!..இராமானுஜரை உயர்வாகப் பேசும் அவர் இப்படிச் சொல்வது முரண் இல்லையோ??!!!
முதலில் இயற்கையும் இந்த ஜீவன்கள் எல்லாம் தான் இவ்வுலகில் இருந்தன..பரிணாம வளர்ச்சியில் உச்சத்தில்?? இருக்கும் மனிதனுக்குத்தான் மெச்சூரிட்டி இல்லை…செல்ஃபிஷ்! .இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மனிதனுக்கு நல்லது…இல்லையேல் அழிவுதான்…
கீதா
LikeLiked by 1 person
@துளசிதரன், கீதா :
பறவைகள், விலங்குகள்பற்றி உங்கள் விரிவான பின்னூட்டம் மனநிறைவு தருகிறது.
எங்கள் வீட்டு பால்கனியிலும் புறாக்கள் விஷமம் செய்துவிட்டுப்போய்விடுந்தான். அப்பப்ப அலம்பிவிடவேண்டும் இருந்தாலும் அதுகளைப் பார்க்கையில் எப்படிக் கோபம் வரும்? 70 வருட சுதந்திர நாட்டினிலே இப்போதுதான் மனிதனுக்கே டாய்லெட் இல்லை என்று கண்டுபிடித்துக் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். புறாக்களுக்கு எப்பக் கட்டி, அதுகளுக்குக் கத்துக்குடுத்து..ம்ஹூம்…நமக்கெல்லாம் நீண்ட ஆயுளை பகவான் அருளணும்..
//..என்ன அழகு தெரியுமோ…இத்தனைப் புறாக்கள் இருக்குதேனு சந்தோஷப்படுவேன்..என் வீட்டில் இரு செல்லங்கள். என் 8 வயதுப் பெண்கள். பைரவிகள்! ரொம்பச் சமத்து தெரியுமா…//
உங்களுக்குப் பெண்மனம் மட்டுமல்ல, மென்மனமும்கூட. உங்கள் உருக்கம் புரிகிறது. உங்களது அன்பைப்பெற அதுகளும் கொடுத்துவைத்ததுதான்.
சில நாடுகளில் கட்டாய ராணுவ சேவை என இருப்பதுபோல், நமது நாட்டிலும் நகர்வாழ் இந்தியர்களுக்குக் கட்டாய கிராம சேவை என்று ஒரு ஆறுமாதமாவது வைக்கவேண்டும். ரொம்பப்பேர் பறவைகள், விலங்குகளைப் புத்தகங்கள், சினிமாக்களில்தான் பார்த்திருக்கிறார்கள். அவைகளோடு சேர்ந்து இயற்கைவாழ்வு வாழ்வதெப்படி என்று சிந்தித்துக்கூடப்பார்த்திருக்கமாட்டார்கள். உண்மையில் அதைப்பற்றியெல்லாம் கவலையுமில்லை. ஆனால் ரொம்ப தார்மீக சிந்தனையில் தவிப்பதுபோல் தாட்பூட் என்று காலையில் எழுந்ததும் சம்பந்தப்பட்ட வாட்ஸப் அனுப்பத்தவறமாட்டார்கள். இவர்களையெல்லாம் குண்டாங்கட்டாகத் தூக்கிக்கொண்டுபோய் குக்கிராமங்களில் -எங்கே இண்டர்நெட்டிற்கு சான்ஸே இல்லையோ- அங்கே வாழவைக்கவேண்டும். 6-7 மாதமாவது. பின், கொஞ்சம் இவர்களது மனநிலையில் முன்னேற்றம் ஏற்படலாம்..
ஃப்ரௌனியின் சர்ஜரி நல்லபடியாக முடிந்ததா?
LikeLike
அப்பப்ப அலம்பிவிடவேண்டும் இருந்தாலும் அதுகளைப் பார்க்கையில் எப்படிக் கோபம் வரும்? 70 வருட சுதந்திர நாட்டினிலே இப்போதுதான் மனிதனுக்கே டாய்லெட் இல்லை என்று கண்டுபிடித்துக் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். புறாக்களுக்கு எப்பக் கட்டி, அதுகளுக்குக் கத்துக்குடுத்து..ம்ஹூம்…நமக்கெல்லாம் நீண்ட ஆயுளை பகவான் அருளணும்..//
உங்களுக்கும் தான் கருணை உள்ளம் அன்புள்ளம் தான்…. அட நான் என் செல்லங்களுக்கு டாய்லெட் வேண்டும் என்று அடிக்கடிச் சொல்வதுண்டு…
அடுத்து வந்த குக்கிராமங்களில் கொண்டுவிடுவதைப் பற்றிய உங்களின் கருத்தை மிகவும் ரசித்தென்…யெஸ் நானும் என் மகனும் அடிக்கடி இப்படி எல்லாம் பேசிக் கொள்வதுண்டு….
ப்ரௌனிக்கு நல்ல படியாக சர்ஜரி முடிந்து இப்போது நன்றாக இருக்கிறாள். இன்னும் ஒருவாரம் ரெஸட்ரிக்கடட் மூவ்மென்ட்ஸ் தான்…ஹையோ ரொம்பச் சமத்து..என்ன புத்திசாலி தெரியுமோ….முதலில் தனக்கு படி ஏறி இறங்க முடியலைனு தெரிஞ்சு என்னையே பார்க்கும்….நான் தூக்கிக் கொண்டு செல்வேன்..தூக்கிக் கொண்டுதான் போகணும். அப்புறம் ஒரு வாரம் ஆனதும் இறங்குவதற்கு அவளைத் தூக்க வேண்டாம் என்று சொன்னாள் எப்படி? நான் தூக்கினாள் உட்கார்ந்து விடுவாள் தூக்கக் கூடாதாம். இறங்கிவிடுவாள். அப்புறம் அவள் வேலையை முடித்ததும் மீண்டும் படியேற வரும் போது நின்று என்னைப் பார்ப்பாள்….மீண்டும் வீட்டிற்குள் வந்ததும் இறக்கி விடச் சொல்வாள்…என்ன புத்திசாலி…சமத்து…மிக்க நன்றி ப்ரௌனியின் நலம் விசாரித்ததற்கு…
கீதா
LikeLiked by 1 person
@ கீதா:
ப்ரௌனி தேறிவருவது அறிந்து மகிழ்ச்சி. உங்களை பிஸியாக வைத்திருக்கிறது! நல்லபடியாக பூரண குணமாகட்டும்.
நாய்களின் புத்திகூர்மை வியக்கவைப்பது. இப்படி ஒவ்வொரு விலங்குக்கும் பறவைக்கும் சிறப்புகள் இருக்கும் ; சிருஷ்டிகர்த்தா நிச்சயம் அப்படி ஒரு அரேஞ்ச்மெண்ட் பண்ணியிருப்பார்; நமக்குத்தான் புரிந்துகொள்ள மனமில்லை அல்லது நேரமில்லை. என்னவோ,
மனிதனையும் கடத்துகிறது காலம்!
LikeLike