சுடரே, சொல்வாய்

சாமியைக் கும்பிடக்கூட
ஆசாமியிடம் விண்ணப்பித்தாகவேண்டிய
அதீத அவலம்
அமலா
அனந்தா
பத்மநாபா
பாரினில் மனிதர்க்கிப்படிப்
பாதகமேன்
பறையுமோ பரந்தாமா?

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in ஆன்மிகம், இலக்கியம், கவிதை, புனைவுகள் and tagged , , , , . Bookmark the permalink.

8 Responses to சுடரே, சொல்வாய்

 1. துளசிதரன்: ஆமாம் பல இடங்களில் இப்படித்தானோ?

  கீதா: பரந்தாமன் எப்படிப் பறைவார்??!!! ஹாஹாஹா அவரையே ஆசாமிகள் தானே காட்சிப் பொருளாக்கிவிட்டனரே! பரந்தாமனே இப்போது..போயும் போயும் ஏனடா பூமியில் போய் அவதாரம் எடுத்தோம்னு வருந்தி யோசித்துக் கொண்டிருக்காராம்…ஒருவேளை அதனால் தான் கல்கி வருவதற்கும் தாமதமாகிறதோ என்னவோ!!!!

  Liked by 1 person

  • //ஒருவேளை அதனால் தான் கல்கி வருவதற்கும் தாமதமாகிறதோ என்னவோ!!!!//

   ஓ… இது தெரியாமல் நான் ரெண்டு வாரமா பேப்பர் காரன் கிட்ட ஏன் கல்கி போடவில்லை என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன் கீதா!

   :))

   Liked by 1 person

   • Aekaanthan says:

    @ ஸ்ரீராம்:

    அவனும் அந்த கல்கியையே வேண்டி நிற்பானாயிருக்கும் எனக்கு எப்போது விமோசனம் என!

    Like

  • Aekaanthan says:

   @துளசிதரன், கீதா:

   வாருங்கள். வருகைக்கு நன்றி.

   தரிசனத்துக்காக விண்ணப்பம்போட்டு ஜேசுதாஸ் மாதிரி ஒரு பக்தர் காத்திருக்கவேண்டுமெனில், இது காலத்தின் கோலமன்றி வேறென்ன? பல இடங்களில் என்று சொல்வதற்கில்லை. சில கோவில்களில் கடவுளைவிடவும், மனிதர்தம் கட்டுப்பாடுகள் முன்னால் வருகின்றன. ஆன்மிகம் என்பதன் பொருளறியா ஆசாமிகள்! வடக்கே இந்தமாதிரிக் கூத்துகள் இல்லை. நந்தி தேவரைத் தொட்டுக் காதில் ஏதோ மெசேஜ் சொல்லி, சிவலிங்கத்துக்கு தங்கள் கையால் தண்ணீர் விட்டு அபிஷேகம் செய்துவிட்டு செல்வார்கள் வட இந்திய பக்தர்கள். அதைப்பார்க்க நமக்குக் கூச்சமாய் இருக்கும். அது ஒரு விதம்.

   மனிதர்கள் கட்சிகட்டிக்கொண்டு அடித்துகொண்டிருக்கையில் ஆண்டவன் காட்சிப்பொருளாய் மட்டுமே இருப்பது சரிதான்! கல்கி அவதாரம் தாமதமா? இது என்ன இந்தியன் ரயில்வேஸா! எப்போதுவேண்டுமானாலும் எந்த ப்ளாட்ஃபார்மிலும் வந்து சேர்வதற்கு. ஆண்டவன் வாய் திறப்பதில்லை. மனிதனோ புலம்பலை என்றும் நிறுத்துவதில்லை!

   Like

 2. தாஸர்களுக்கு வந்த சோதனை. வேறென்ன?

  Liked by 1 person

 3. Aekaanthan says:

  தாஸர்கள் என்றுமே யாசித்து வெளியில் நிற்கவேண்டும் போலிருக்கிறது. காலையில் படித்தேன்: அனுமதி கிடைத்துவிட்டது என்று.

  காலை வாக் போய்வருகையில் மனதில் சில கவிதைகளோடு திரும்பி வந்தேன். அதனை எழுதி சேகரித்துவைத்தேன். கூடவே இதுவும் புறப்பட்டது. ப்ளாகில் போட்டேன் உடனே -trending விஷயமாயிற்றே என்று.

  Like

 4. கையில் காசிருந்தால் எதுவும் சாத்தியமே கடவுளானாலும்

  Liked by 1 person

 5. Aekaanthan says:

  @GM Balasubramaniam:

  காசேதான் கடவுளப்பா..! – என்கிற பாட்டு நினைவுக்கு வருகிறதோ!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s