காலை நகர்கையில்

இரவு மறைந்த கொஞ்சநேரத்திலேயே
இன்னொரு நாளுக்காகப் பரபரக்கும்
நகரத்தின் காலைப்பொழுதொன்றில்
குண்டுகுழிகளைத் தவிர்த்து
நிதானமாக நடக்கிறேன் ஓரமாக
கொக்கரக்கோ என்ற திடீர்க் கூவல்
கவனம் சிதைத்துச் சிலிர்ப்பூட்டியது
நகரத்தின் மத்தியில் சேவலா – இல்லை
கனவுபோன்ற கிராமத்தில்தான் நான்
களிப்பாக நடந்துகொண்டிருக்கின்றேனா
திரும்பிப் பார்க்கையில்
தெறித்தது கண்ணில்
கொல்லப்படுவதற்காகப்
பெருங்கூண்டொன்றில்
சிறைவைக்கப்பட்டிருந்த சேவல்தான்
விவரம் புரியாமல்
கழுத்தை உயர்த்திக்
கம்பீரம் காட்டியிருக்கிறது
இதுமட்டுமல்ல
புவிவாழ் ஜீவன்கள்
அத்தனையுமே அப்பாவிகள்தான்
மனிதன்மட்டுமே
பாவி

**

3 thoughts on “காலை நகர்கையில்

 1. நம் விதி
  தெரியாமலே
  நாமும் ஆடுகிறோம்
  நாடகம் தினமும்.
  நாடகம்
  என்றும் அறியாமலேயே….

  ஹி ஹி ஹி… நானும் முயற்சித்துப் பார்த்தேன்.

  Liked by 1 person

 2. புவிவாழ் ஜீவன்கள் எல்லாமே அப்பாவிகள்தான்.
  உங்கள் கவிதையை படித்தவுடன் மனிதனின் குணம் இந்த இரண்டு பாட்டுலே சொன்ன பட்டுகோட்டையார் பாடல் நினைவுக்கு வந்தது.
  //இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே ! இது தான் உலகம் வீண்
  அனுதாபம் கொண்டு நீ நம்பிடாதே!//
  என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

  //குட்டி ஆடு தப்பினால்
  குள்ளநரிக்கு சொந்தம்!
  குள்ளநரி மாட்டிக்கிட்டா
  குறவனுக்கு சொந்தம்
  தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில்
  பட்டதெல்லாம் சொந்தம்.//

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s