கஃபெடரியாவுக்கு இது பரவாயில்லை
முதுகிலிருந்த மூட்டையை
இறக்கிவைத்துக்கொண்டே சொன்னாள்
கிறக்கமான நயனங்களையுடைய அவள்
இங்கேயே உட்கார்ந்து ஏதாவது சாப்பிடலாம்
மஞ்சள் நாற்காலிகளை தங்களுக்காக
மரத்தடியில் இழுத்து வைத்த இன்னொருத்தி
மகிழ்வாய்க் குமிழ்வாய் மலர்ந்தாள்
கூந்தலைக் கோதிக்கொண்டிருந்த
மூன்றாவது அழகி முன்னேறிச் சென்றாள்
மூவருக்குமாய் ஏதோ வாங்கிவந்தாள்
ஆளுக்கொரு ப்ளேட்டாகக் கையிலேந்தி
அரைவட்டமாய் அமர்ந்துகொண்டு
சலசலத்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்
சிலுசிலுத்துக்கொண்டிருந்த இளங்காற்று
உச்சியில் படர்ந்து குடைபிடித்திருந்த
ஆதிமரத்தின்மீது சாய்ந்தவாறே
ஆசையோடு அவர்களது பேச்சைக்
கேட்டுக்கொண்டிருந்தது
**
//கிறக்கமான நயனங்களையுடைய அவள்//
//மகிழ்வாய்க் குமிழ்வாய் மலர்ந்தாள்//
//சலசலத்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்//
//சிலுசிலுத்துக்கொண்டிருந்த இளங்காற்று//
//உச்சியில் படர்ந்து குடைபிடித்திருந்த//
வார்த்தைகளின் கோர்வைகள் அழகாகவும் குதூகலமாகவும் உள்ளன.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
LikeLiked by 1 person
அரட்டைக்காட்சி?
LikeLiked by 1 person
அருமை…
LikeLiked by 1 person