எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்
வெறுப்பு விதண்டாவாதம்
கடுகடுத்து அலையும் உலகினில்
எம்மதமும் சம்மதம் என்பவரும்
எல்லாம் அவரவர்க்கு வாய்த்தபடி
என நினைந்தே கடப்பவரும் உண்டு
இங்கே விதிக்கப்பட்டிருப்பதோ
இதோ அதோ எனக் கொஞ்சகாலம்
நிலையிலா நீர்க்குமிழி வாழ்வினில்
ஏனிந்த மாளாக் கோபம் குரோதம்
எதன்மீதும் குறைகாணும் மூர்க்கம்
சகமனிதர் ஜீவன்களோடு
சதா அன்புகாட்டாவிடினும்
எப்போதாவது கொஞ்சம் காட்ட
எத்தனித்தால்தானென்ன
பாதையை மாற்றினால்
பயணம் சுகமாகலாம்
வெறுப்புப் பக்கங்களை
கிழித்தெறிந்துவிட்டால்
விதியும்கூட மசிந்துவிடலாம்
முடியாதா என்ன, உன்னால்?
**
appadi than kadanthu poi kondirikirom
LikeLiked by 1 person
ஏக்கம் புரிகிறது…
LikeLiked by 1 person
நானும் நினைப்பதுதான்.எண்பது சதவிகிதம் கடைப்பிடிக்க முடிகிறது. சமயங்களில் மனித பலவீனம் வெல்கிறது! சதா அன்பு காட்டக்கூட வேண்டாம். வெறுப்பை உமிழாமல் இருந்தால் போதும்.
LikeLiked by 1 person
//சகமனிதர் ஜீவன்களோடு
சதா அன்புகாட்டாவிடினும்
எப்போதாவது கொஞ்சம் காட்ட
எத்தனித்தால்தானென்ன//
முயற்சி செய்யலாம்.
அருமையான கவிதை.
LikeLiked by 1 person
இந்த நினைப்பே மாற வழிசெய்யும்
LikeLiked by 1 person
@உஷா, @திண்டுக்கல் தனபாலன், @ஸ்ரீராம், @கோமதி அரசு, @ஜி.எம்.பாலசுப்ரமணியம் :
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல .
LikeLike