டிவி-யில் சமையல் நிகழ்ச்சிகளைக்
கண்கொட்டாது கண்டுகளித்துக்
`கற்றுக்கொண்ட` சமையல் ஆர்வலர்
சமையலறையில் பிரவேசித்து
கத்தியைக் கையிலெடுக்கும்
லாவகத்திலிருந்தே தெரிந்துவிடும்
நறுக்குவதற்கும் கொல்வதற்கும்
வித்தியாசம் அறியாத ஆளுமை
செய்முறையை டிவியில் பார்த்து
வன்முறையில் இறங்கியவரிடம்
வசதியாக மாட்டிக்கொள்ளும்
வகைவகையான சாமான்கள்
வதக்கியும் வாட்டியும்
தீய்த்தும் கருக்கியும்
அன்னாரின் கைவண்ணமாய்
அருமையான பதார்த்தங்கள்
நம் தொப்பைக்குள்போய்ச்
சரணடைந்துவிடாதிருக்க
எல்லாம்வல்ல இறைவன்
இனிதே அருள்வாராக
ஆமென்
**
செய்பவருக்குத் திருப்தி தர அவற்றை உண்டுதானே ஆக வேண்டும்
LikeLiked by 1 person
sometimes self cooking gives you a pleasure…
but i never disclose that i cook well to my wife
she does not accept that i am good at cooking… though shecooks well…
what is the psychology behind this…
LikeLiked by 1 person
@Balasubramaniam: செய்பவருக்கு திருப்தி தரவேண்டுமே என்று நான் எதனையும் வயிற்றுக்குள் போட்டுக்கொள்வதில்லை. பிடிக்கவில்லை என்றால் உண்பதில்லை. நம் கதை இப்படி! அதே சமயத்தில் யாராவது நன்றாக எந்த பதார்த்தத்தையாவது செய்திருந்தால், அதனை உண்டபின், நன்றாக இருந்தது, அல்லது நன்றாக செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுவதுண்டு. சிலர் அதை formal comment என நினைத்துக்கொண்டால், நான் ஒன்றும் செய்வதற்கில்லை!
@Natchander: I agree. Cooking gives satisfaction to some men. I am one of them, though I am rarely allowed to come near the kitchen ! My wife also can cook quite efficiently. Her territory!
The psychology here is rarely a woman will accept the fact that her husband can cook and cook well. At the maximum she would say my husband can cook, or sometimes he cooks. She would not say he cooks well!
LikeLike