இப்போதுதான் தட்டுப்பட்டது கையில் காசு
இல்லை என விரட்டிவிட்டோமே
இருக்கிறாளே அதோ என நினைத்து
போய்க் கொடுத்துவிட்டு சாலையின்
இந்தப் பக்கம் வந்து நின்றேன்
கொஞ்சநேரத்தில் மீண்டும்
முன்னால் நின்றிருந்தாள்
தாங்கிய குழந்தையும்
ஏந்திய கையுமாய்
இப்போதுதானே கொடுத்தேன் என்றேன்
இல்லை கொடுக்கவில்லை என்றாள்
தலையாட்டி மறுத்தாள்
கையைப் பார்த்திருப்பாள்
முகத்தைப் பார்க்கவில்லையோ
ஆமா .. முகந்தான் முக்கியமா என்ன
இந்த முட்டுக்கெட்ட வாழ்க்கையிலே
**
பணத்தை நினைவு கொள்ளும் அளவு முகங்கள் நினைவில் இருப்பதில்லை
LikeLike
why blame them their survival is harsh bro
LikeLike