திரிவேணி சங்கமம்

வெட்டவெளியில் தனியாக பலூனுடன்
விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை
சிறுவிரல்களிலிருந்து புறப்பட்ட நெடுநூல்
வானத்தை முட்ட முயற்சிக்கும்
சிவப்புப் பலூனில் முடிந்திருந்தது
நீலவானில் அசைந்து அசைந்து
வேடிக்கைக் காட்டிய பலூன்
குட்டிமனதைக் கட்டிப்போட்டிருந்தது
உயர உயர எழும்பிய சிவப்பு
தன்னையும் தூக்கிக்கொண்டுபோகும் என
ஏங்கி ஆடியது குழந்தை
சற்றும் எதிர்பாரா ஒரு தருணத்தில்
பிஞ்சு விரல்களின் பிடியிலிருந்து
பிரிந்து எகிறியது நூல்
நீலத்துக்குள் மேலும் நீண்டது சிவப்பு
வண்ணங்கள் கலந்த அந்த மாயப்புள்ளியில்
கலந்து காணாமல் போய்விட்டிருந்தது குழந்தை

**

2 thoughts on “திரிவேணி சங்கமம்

Leave a comment