செய்வீர்களா ?

ஞானக்கூத்தன் போய்விட்டார்
கொஞ்சநாள் முன்பு குமரகுருபரனும்
அதற்கு முன்பு வைகறையும்
அறிமுகம் அதிகமில்லா கவிகள் சிலரும்
அப்படியே புறப்பட்டுப் போயிருக்கக்கூடும்
போதாக்குறைக்கு முந்தாநாள்
கிளம்பிப் போனார் நா. முத்துக்குமார்
உத்சவத்தில் சாமி புறப்பாடு போல
கவிகள் புறப்பாட்டுக் காலம்போலும் இது

இளசும் பெரிசுமாக மேலும் சிலர்
எங்கேயோ சுருண்டு கிடக்கக்கூடும்
வறுமையில் வதங்கியோ
வாசிப்போரின்றி வாடியோ
தணியாத தனிமையின் சோகத்தில்
தாங்கவொண்ணா மன உளைச்சலில்
தங்களைத் தாங்களே குடித்துக்கொண்டு
தயாராகிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ
வாழ்க்கை ரசத்தைப் பருகி எழுதும் கவிகளே
வக்கிரமான வஸ்துக்கள் உங்கள் உடம்பை
வதைத்து சிதைத்துத் தீர்த்துவிடாமல்
கொஞ்சம் பார்த்துக்கொண்டால் அதுவும்
தமிழுக்கு நீவிர் செய்யும் சேவையாகும்தானே ?

**

5 thoughts on “செய்வீர்களா ?

 1. #தங்களைத் தாங்களே குடித்துக்கொண்டு#
  நானும் இதைதான் சொல்ல வந்தேன் நீங்களே சொல்லி விட்டீர்கள் !சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்து செயல் படணும்!

  Liked by 1 person

 2. கவிஞர்களின் இழப்பு உங்களை வருத்துவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வருத்தமான நிகழ்வுகள் தான்.

  Like

 3. celebrated poets lord byron john keats … our great barathiar kannadasan subbramania raju aadhavan died at an early age…..cine editor kishore singer swarnalatha director rasu maduravan also left this world in a hurry
  what to do bro
  how is your health ji

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s