நல்லதொரு கவிஞராக இனம் காணப்பட்டிருந்த குமரகுருபரன் 19-6-2016 அன்று காலமான செய்தி கலங்கவைக்கிறது. நெருக்கும் நிம்மதியின்மையையும், தனிமையின் கடுமையையும் கவிதைகளாகப் பொங்கியவர். படித்தவர்களின் மனதில் இன்னும் நிறைய எழுதுவார் என்கிற எதிர்பார்பார்ப்பைக் கிளர்ந்தெழச் செய்தவர். ஆனால், என் செய்வது? காலனின் கணக்கு கடுங்கணக்காயிற்றே ! இளம் வயதிலேயே இந்த உலகைவிட்டுப் புறப்பட நேர்ந்துவிட்டது கவிஞருக்கு.
ராஜபாளையத்துக்காரர். நண்பர்களுடன் கவிதை, இலக்கியம் பற்றி இரவெல்லாம் பேசிக் கழித்தவர். இதழியலில் இருந்த ஆர்வத்தினால், விண் நாயகன், குமுதம், தினமலர் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவமும் உண்டு அவருக்கு.
‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது` என்கிற அவருடைய கவிதைத் தொகுப்பிற்காக, கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் `இயல் விருது` குமரகுருபரனுக்கு சில நாட்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டிருந்தது. `ஞானம் நுரைக்கும் போத்தல்` என்பது அவரது முதல் கவிதைத் தொகுப்பின் பெயர். அதிலிருந்து ஒரு கவிதையைப் பருகலாமா :
யாருடைய பூக்கள் நாம்?
நமது ஆழத்தில் விழுந்து கிடக்கும்
அந்தப் பூவை மலரவைத்தவன்
எவன்?
யாருடைய பூக்கள் நாம்?
பூக்களைப்பற்றி
இப்போது ஏன்
பேசிக்கொண்டிருக்கிறோம்?
பூக்கள் அறியுமா பிரிவை?
பூக்கள் கையசைக்குமா?
இது தீராது
நீ உன் சிகரெட்டைப் பற்றவை
வழியனுப்பு
பிரிவதுமில்லை
விலகுவதுமில்லை பூக்கள்
**
அறிமுகமில்லை தெரியத் தந்தமைக்கு நன்றி
LikeLiked by 1 person
bro i have read MANY A FLOWER IS BORN TO BLUSH UNSEEN………
read kumaras works….
LikeLike