ஐபிஎல்-இல் நேற்று (27-4-16) ஒரு ரன்னில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை, டெல்லியில் வென்றது ரெய்னாவின் குஜராத் லையன்ஸ். இது மேட்ச் ரிசல்ட். இதுமட்டுந்தானா அந்த மேட்ச்சில் நடந்தது ?
முதலில் பேட் செய்த குஜராத் லையன்ஸ், துவக்கவீரர்களான ட்வேன் ஸ்மித்(Dwayne Smith), ப்ரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) ஆகியோரின் அதிரடி அஸ்திவாரத்தில் ப்ரமாதமாக ஆரம்பித்தது. ஆனால் ரெய்னா, கார்த்திக், ஜடேஜா என்று வரிசையாக வழிய, 172 தான் அதனால் எடுக்க முடிந்தது.
டெல்லியின் பதில் பிணாத்தலாக இருந்தது. குல்கர்னி வரிசையாக 3 விக்கெட்டுகளை சாய்த்துவிட்டார். 16 ரன்களில் 3 விக்கெட் என சிதறிக் கிடந்தது டெல்லி. ஜே.பி டூமினி(JP Duminy) இறங்கி ஒழுங்காக பேட்செய்ய, தடுமாறலில் இருந்து மீள்வதாகப் பட்டது. 57 ரன்களில் நான்காவது விக்கெட்டும் வீழ்ந்துவிட, டெல்லி 140-க்குள் காலியாகிவிடும்-குஜராத் வெற்றி நிச்சயம் என முடிவு செய்து, பாப்கார்னும், பெப்சியுமாக இளைப்பாறியிருந்தது ரசிகர் கூட்டம். எல்லாம் நார்மல்.
அப்போதுதான் அது நிகழ ஆரம்பித்தது. 6-ஆம் நம்பரில் விளையாட ஒரு புயல் வந்து இறங்கியிருப்பதை ரசிகர்கள் மட்டுமல்ல. அவரை மைதானத்துக்கு அனுப்பிவைத்த டெல்லி கேப்டனுக்கே ஒரு மண்ணும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஐபிஎல் அப்படிப்பட்ட கிரிக்கெட்.
க்றிஸ் மாரிஸ் (Chris Morris). டெல்லியின் சிறந்த பௌலர். வந்திருப்பதோ பேட்டிங் செய்ய. நிலைமையோ அபத்தம். 56 பந்துகளில் 116 ரன் தேவை டெல்லிக்கு. மாரிஸைப்போய் யார்தான் கண்டுகொள்வார்கள்? பௌண்டரியும் சிக்ஸருமாக ஆரம்பித்ததற்குக் கொஞ்சம் கைதட்டல் கிடைத்தது. `என்ன, பயல் ஒரு ரெண்டு, மூணு சிக்ஸர் அடித்துவிட்டு ஓடிவிடுவான் !` – என டெல்லியின் கேப்டன் உட்பட அனைவரும் நினைத்திருந்தனர் போலும். ஆனால் கிரிக்கெட் எனும் விசித்திர விளையாட்டு தன் வேலையைக் காண்பிக்க டெல்லியைத் தேர்ந்தெடுத்திருந்தது நேற்று!
வெறும் 17 பந்துகளில் கடந்தார் மாரிஸ், அரை சதத்தை. என்ன! ஒரு வேளை, டெல்லி ஜெயிச்சிருமா ! கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது. இதுவரை ரிலாக்ஸ்டாக இருந்த எதிரி டீமின் கேப்டன் ரெய்னாவுக்குக் கவலை பற்றிக்கொண்டது. பௌலர்களை வேகவேகமாக சுழல், வேகம் என மாற்றினார். ம்ஹூம்! ப்ரயோஜனம் இல்லை. ஜெயிக்கப்போற நேரத்துல எங்கேருந்துடா வந்தான் இந்த மாரிஸ்? இவன் பௌலர் அல்லவா? பேட்டிங்கும் தெரியுமா! யாரைக் கூப்பிட்டு என்ன மாதிரி பந்துபோடச் சொல்வது இவனுக்கு? எந்த பௌலர் வந்து, என்ன எழவைப்போட்டாலும், பறக்குதே பந்து சிக்ஸருக்கு. எல்லாம் நம்ப நேரம்… நாக்குத் தள்ளியது ரெய்னாவுக்கு.
18 ஆவது ஓவரில் டுமினி அவுட் ஆகியும், ஒருவேளை மாரிஸ் ஒண்டி ஆளாக நின்று, தனக்குக் கிடைக்கவேண்டிய வெற்றியைப் பறித்து டெல்லிக்குக் கொடுத்துவிடுவாரோ என்கிற பயம் குஜராத்திடம் கடைசி பந்துவரை இருந்தது. கடைசி ஓவர்களை ப்ரவீண்குமாரும், ப்ராவோவும் (Bravo) பிரமாதமாகப் போட, பவுண்டரி, சிக்ஸர் விழாது போனதால், குஜராத் ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பித்துவிட்டது மாரிஸிடமிருந்து.
மாரிஸ் 32 பந்துகளில், 4 பௌண்டரி, 8 சிக்ஸரென 82 ரன் எடுத்து, கிட்டத்தட்ட கதையையே மாற்றி எழுதிவிட்டிருந்தார். கிரிக்கெட் ரசிகர்கள், வர்ணனையாளர்கள், நிபுணர்கள் என எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்குள், முழுப்பைத்தியமாக்கிவிட்டிருந்தார் டெல்லியில். சோனி சேனலின் chatterbox-ஆன, ஹிந்தி கிரிக்கெட் வர்ணனையாளர் நவ்ஜோத் சித்து (Navjot Sidhu)(BJP’s MP), மாரிஸின் ஆட்டத்தை வர்ணிக்க வார்த்தை தேடித் திணறியது இன்னுமொரு சுவாரஸ்யம். இறுதிவரை நாட் அவுட். தடாலடி ஆட்டத்தினால் கிடைத்தது ஆட்டநாயகன் விருது. அதுவல்ல விஷயம்- க்றிஸ் கேல்(Chris Gayle), டிவில்லியர்ஸ் (de Villiers), கோஹ்லி, மெக்கெல்லம் ஆகிய ஜாம்பவான்களின் முன்னால், டி-20 கிரிக்கெட்டில், ஐபிஎல்-லில், ஒரு புது நாயகனின் திடீர் காட்சி !
“என்ன மாரிஸ், இவ்வளவு நீங்கள் உழைத்தும் மேட்ச் ரிசல்ட் டெல்லிக்கு இப்படி ஆகிவிட்டதே..“ என்று அங்கலாய்க்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர். “அதனாலென்ன, சூரியன் நாளை மீண்டும் எழும்! புதிய நாளொன்றும் பிறக்கும்!“ என்று பதில் சொல்கிறார் க்றிஸ் மாரிஸ். உயர்விலும் அடக்கம். அதிர்ச்சியிலும் அமைதி. தென்னாப்பிரிக்காவின் க்றிஸ் மாரிஸ்.
**
மோரிஸ் மறுபடி இதே வேகத்தை, திறமையை இன்னொரு ஆட்டத்தில் வெளிப்படுத்துவாரா ன்பது சந்தேகமே… அந்த நாளின் நிகழ்வுகள்! ஹாக்கி கோல் கீப்பராய் இருந்து உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் முன்பு தூள் கிளப்பிய ஹட்டனை நினைவிருக்கிறதா? ஐ பி எல் பார்ப்பதில்லை என்றாலும் நீங்கள் சொல்லி இருப்பதிலிருந்து எவ்வளவு சுவாரஸ்யமாய் இருந்திருக்கும் என்று தெரிகிறது.
LikeLiked by 1 person
20 ஓவர் கிரிக்கட்டில் எதுவுமே சொல்ல முடியாதுஒரு நல்ல ஓவரோ சில அதிரடி ஆட்டமோ போதும் விளைவை மாற்ற / யார் எப்படி என்னும் யூகத்துக்கே இடமிருக்காது. அன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடினால் வெற்றி வாய்ப்பு அதிகம்
LikeLiked by 1 person
ஏனோ தெரியவில்லை பின்னூட்டம் சரியாகப் போகவில்லை
LikeLike
நண்பர் ஸ்ரீராம், ஜிஎம்பி-சார் வருகைக்கு நன்றி.
முக்கியமான தருணத்தில் ஒரு அதிரடி ஆட்டம், அல்லது ஓரிரு முக்கிய விக்கெட்டுகள் – டி-20 மேட்ச்சின் கதை மாறிவிடும் என்பது தெரிந்ததுதான். கட்டுரையில் நான் எழுதியது மேட்ச்சின் முடிவு பற்றி அல்ல. மாரிஸ் புகுந்து விளையாடிய விதம் பற்றி! He arrived at an impossible time for DD. And almost achieved the impossible! கிரிக்கெட்டில் ஏதும் சொல்வதற்கில்லை. அதனால்தான் இது வெறும் விளையாட்டல்ல. அற்புதம்.
ஸ்ரீராம், நீங்கள் சொல்வதைப்போல் திரும்பவும் இப்படி மாரிஸ் விளையாடமுடியாது போகலாம்தான். இருக்கட்டுமே! அதனாலென்ன!
LikeLike
மாரிஸால் பாட் செய்ய முடியாது என்னும் எண்ணமே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்
LikeLiked by 1 person