டி-20 கிரிக்கெட் : இந்தியாவின் அசுர வெற்றி

விசாகப்பட்டினம், காதலர் தினம் 2016. டி-20 கிரிக்கெட் மேளாவில் இந்தியா, ஸ்ரீலங்காவை சிதைத்துக் கடாசியது. தொடரை அலட்சியமாக வென்று, இந்திய கிரிக்கெட் காதலர்களின் கையில் தந்தது பூங்கொத்து !

என்ன மாதிரியான விளையாட்டு இது! நினைத்தாலே இனிக்கும் இந்தியர்களுக்கு. விசாகப்பட்டினத்தில், ராஞ்சியைப்போலவே எந்த ஒரு அணியும் ரன் எளிதாகக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிட்ச் அப்படித்தான் என்பது வல்லுனர்களின் கணிப்பு. ஆனால் நடந்தது என்ன? என்ன?

டாஸ் வென்ற இந்தியா, ஸ்ரீலங்காவை முதல் பேட்டிங் செய்யச் சொன்னது. ஸ்ரீலங்கா ஆடியதா? இல்லை, ஆடிப்போனது ! எதிர்பார்த்ததைப்போல் புதிய பந்தின் முதல் ஓவர் – ஆட்டத்தின் முதல் ஓவரை அஷ்வினுக்குத் தந்தார் தோனி. என்ன செய்தார் ஸ்பின் சிங்கம்? நான்கு ஓவர்கள். எட்டே ரன்கள். 4 விக்கெட்டுகள். ஸ்ரீலங்காவின் பேட்டிங் அரண்கள் எனக் கருதப்படும் தில்ஷன், கேப்டன் சண்டிமால் ஆகியவர்களோடு குணரத்ன, டிக்வெல்லாவும்(Niroshan Dickwella) சூறாவளிச் சுழலில் தூக்கி எறியப்பட்டனர். அவர்களோடு ஸ்ரீலங்காவின் சோகக் கதையும் அங்கேயே முடிந்தது எனலாம். அஷ்வின் ஸ்ரீலங்காவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அல்லது ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களுக்கு அவருடைய பெயரே வயிற்றில் புளியைக் கரைத்திருக்கவேண்டும். அவருடைய அசுரத்தனமான சுழல்வீச்சு நேற்று அதைத்தான் சொன்னது. ஸ்ரீலங்கர்களின் சித்தம் கலங்கிவிட்டது. மற்ற இந்திய பௌலர்களான ரெய்னா, ஜடேஜா, நேஹ்ரா, பும்ரா ஆகியோர் ஸ்ரீலங்கா நிமிரமுடியாமல் பார்த்துக்கொண்டனர். ஸ்ரீலங்காவின் முதல் 5 பேட்ஸ்மன்களின் ஸ்கோர் இவ்வாறு: 1, 1, 8, 4, 4. ஷனகா 19 ரன்கள் எடுத்தார். 18 ஓவர்களில் 82 ரன்களில் ஆல்-அவுட். டி-20 போட்டிகளில் ஸ்ரீலங்காவின் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர்.

83 எடுத்தால் மேட்ச் மற்றும் தொடர் வெற்றி. சிக்ஸர், பௌண்டரி என ஆரம்பித்த ரோஹித் ஷர்மா 13 ரன்களில் விழுந்தார். ஷிகர் தவணும், அஜின்க்யா ரஹானேயும் தங்கள் பொறுப்பினை உணர்ந்தனர். நல்ல காலம், குறைந்த இலக்குதானே என்று அடாவடி ஷாட் அடித்து விக்கெட்டுகளை இழக்கவில்லை. தவண் 46, ரஹானே 22 என அவுட்டாகமல் இருந்தனர். 9 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்ரீலங்காவைத் துவைத்துத் தொங்கப்போட்டது இந்தியா. தொடர் கைக்கு வந்தது. கூடவே, ஐசிசி டி-20 தரவரிசையின் முதல் இடத்தையும் தக்கவைத்துக்கொண்டது.

கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தத் தொடரில் தன் பௌலர்களைச் சிறப்பாகக் கையாண்டார். அவரது விக்கெட்-கீப்பிங் நன்றாக இருந்தது. ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை அஷ்வின் வென்றார். இந்தத் தொடரின் ஒரே இந்திய ஹீரோ அவர்தான். சந்தேகமில்லை. ஷிகர் தவண் தன் பேட்டிங் திறமையில் தேர்ந்திருப்பது தெரியவந்தது. ரோஹித் ஷர்மாவிடம் எதிர்பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது.

இந்தத் தொடரில் யுவராஜ் சிங் என்று ஒருவர் இந்தியாவுக்காக ஆடியதாக ஸ்கோர்-போர்டு சொல்கிறது. அவர் மைதானத்தில் என்னதான் செய்தார்?

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to டி-20 கிரிக்கெட் : இந்தியாவின் அசுர வெற்றி

  1. இதே தலைப்பில் இதற்கு சில மணிநேரம் முன்பு எழுதியதைப் படித்தேன் அதிலிருந்து ஏதாவது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா? அண்டர் 19 கோப்பையை வெல்லத் தவறியது நெருடுகிறது

    Liked by 1 person

  2. Aekaanthan says:

    சில வார்த்தைகளை எடிட் செய்து திரும்பவும் பதிந்தேன். மற்றபடி அதேதான்.

    . Under-19 உலகக்கோப்பையை நானும் கவனித்தேன். வெஸ்ட் இண்டீஸ் நல்ல ஃபார்மில் இருந்தது. சரியான சமயத்தில் நமது டாப் ஆர்டர் ஃப்ளாப் ஆகி காலைவாரிவிட்டது. சர்ஃபராஸ் கான் மட்டுமே சிறப்பாக ஆடினார். கோப்பையை வெல்ல இது போதவில்லை. All said and done, young West Indies deserve the Cup.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s