காலையில் காதல்

காதலியின் நினைவில், இரவில் தூக்கம் பிடிக்கவில்லை ! மனதெல்லாம் நிரம்பியிருக்கும் மங்கையின் தரிசனத்திற்காக ஏங்கி, காலையில் அவள் வீட்டு வாசலில்போய் நிற்கிறான். அவளோ இன்னும் எழுந்து வந்தபாடில்லை. என்னதான் செய்வான் இவன் – கவிதை பாடுவதைத் தவிர :

காலையில் காதல்

`எல்லே இளங்கிளியே
இன்னமும் உறங்குதியோ !`
ஆண்டாளைப்போலே உனை
அழைத்துப் பாடிவிடலாம்தான்
காலை நேரத்து என் அழைப்பு
காதில் விழுந்தால் உன் அம்மா
கரண்டி தாங்கி பாயக்கூடும்
கவலை மிகக்கொண்டு
கலங்கி நிற்கிறேன் உன் வாசலில்
கண்ணனைத் தவிக்கவிடாது
கருணை புரிவாய்
காட்சி தருவாய் !

**

One thought on “காலையில் காதல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s