சாதாரணமாகத் தமிழ்நாட்டில் எளிதில் கண்ணிலே தென்படாத மழை, இந்த வருடம் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் மாமழையாக வந்திறங்கி, பின்னர் பேய்மழையாகி சென்னை, கடலூரிலும் சுற்றுப்புறங்களிலும் மனிதவாழ்வை நிர்மூலமாக்கிவிட்டது. இயற்கைப் பேரிடருக்கு முன்னால் மனிதன் எவ்வளவுதான் முயற்சித்தாலும், இடர் இடர்தான். சிதைந்துபோவது ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருந்த ஏழைகளின் வாழ்வுதான். 2015 தாங்கவொண்ணா மறைவுகள், அழிவுகளைத் தந்துள்ளது. போவதற்குமுன்னால் தமிழ்நாட்டையும் ஒரு போடு போட்டுவிட்டுப் போகிறது போலிருக்கிறது. இன்னும் என்னென்ன விளைவுகள் நேர இருக்கின்றனவோ?
இந்தக் கவலையின் பின்னணியில் ஒரு சிறுகவிதை கீழே. தினமணி இதழில் நேற்று(30-11-2015) வெளிவந்தது. நன்றி:தினமணி.
பேயெனப் பெய்யும் மழை
வறண்டுபோன பூமிகண்டு கலங்கி
வாடி வதங்கிப்போயிருந்த ஏழை
வயிற்றைத் தடவிக்கொண்டு
வானத்தைப் பார்த்தது உண்மைதான்
ஏகத்துக்கும் துன்பப்பட்டவன்
மேகத்தைப் பார்த்து வேண்டி
வேகமாக வரச்சொன்னதும் நிஜந்தான்
விரைவாக வந்த நீ
காரியம் முடித்துக்
கடந்துசெல்வாய் என்றுதான்
எப்போதும்போல் எதிர்பார்த்திருந்தான்
வந்து இறங்கியதே
வளைத்துத் தாக்கத்தான் என்கிற
வானுலகத் திட்டத்தை இந்த
பூலோக அப்பாவி அறிந்தானில்லையே
— ஏகாந்தன்
வாழ்த்துக்கள்.
மழை என்பது பிரச்சினை இல்லை ஏகாந்தரே.
அதன் ஊடாக வரும் மழைத் தண்ணீரும், அதில் கலந்திருக்கும் மலமும் சிறுநீரும் கலந்த வீரியமான தண்ணீர் உண்டாக்கும் பிரச்சினைகள்தான் பெரும் தொல்லை.
LikeLike
Welcome Pandian Ji, welcome. அதை நினைத்துத்தான் இன்னும் என்னென்ன விளைவுகள் நேர இருக்கின்றனவோ என எழுதினேன் முன்னுரையில். வியாதிகள் பெருகிவிடாமல், உடனே கட்டுக்குள் நிலைமையைக் கொண்டுவரவேண்டும். இங்கே பொதுமக்கள் துன்பத்தில் அமிழ்ந்திருக்கையில், கட்சிகளும், அவற்றைச் சுற்றிப் பறக்கும் பட்சிகளும், ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலேயே குறியாக இருப்பார்கள்.
LikeLike
super. innum mazhai kottugiradhu. kottum.
LikeLiked by 1 person
கவிதை நன்று. பத்தினிப் பெண்டிர் பெய் என்றால் பெய்யுமாம் மழை ஒரு வேளை அவர்கள் பேயெனப் பெய் என்றார்களோ என்னவோ
LikeLiked by 1 person
super kavidhai
LikeLiked by 1 person