வாராது நீ இருந்துவிட்டால்
வாடி வதங்கி நிற்பார்
வறட்சி என அரற்றிடுவார்
அடித்துப் பெய்தாலோ
இப்படியா ஒரேயடியா
பெய்து தொலைக்கணும்
எப்போது நிற்குமோ இந்த சனியன்
எள்ளளவும் இரக்கமின்றி
ஏடாகூடமாய்ப் பேசிடுவார்
அடிக்கடிப் பார்த்திடுவார் விண்ணை
விடாது நொந்துகொள்வார் உன்னை
புத்தி இவர்களுக்குக் கொஞ்சம் மொண்ணை !
-ஏகாந்தன்
(மேற்கண்ட கவிதை, 12-10-15-ஆம் தேதியிட்ட தினமணி இதழில் வெளிவந்தது. நன்றி: தினமணி)
மழை பெய்யாமலும் கெடுக்கும், பெய்தும் கெடுக்கும் , இரண்டையும் பொறுத்துக் கொண்டு, மழை அதிகம் பெய்யும் நாளில் சேமித்து, பெய்யாநாளில் அதை பயன்படுத்தினால் துன்பம் இல்லை.
வாழ்த்துவோம் மழையை.
உங்கள் கவிதை அருமை.
LikeLiked by 1 person
மழைபற்றிய கவிதை என்றாலேயே எனக்கு திரு ஜீவி அவர்கள் எங்கள் ப்லாகில் அது பற்றி ஒரு பின்னூட்டமாகவே எழுதிய கவிதை நினைவுக்கு வரும் உங்கள் இந்தப் பதிவு என்னை அப்பின்னூட்டத்தை மீண்டும் படி என்கிறதுமழை நமக்கு வேண்டிய இடத்தில் வேண்டிய அளவுமட்டும் பெய்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்
LikeLiked by 1 person
அருமை… அருமை ஐயா…
LikeLiked by 1 person
திருமிகு கோமதி அரசு, ஜிஎம்பி, தனபாலன் அவர்களே, வருகைக்கும் இதமான பின்னூட்டத்திற்கும் நன்றி.
LikeLike
வந்தாலும் திட்டு…. வராவிட்டாலும் திட்டு…. மழை பாவம்…..
இன்று தான் GMB ஐயா அவர்களின் பதிவில் உங்கள் சந்திப்பு பற்றி படித்தேன். இங்கேயும் வந்தேன். இனி தொடர்ந்து வருவேன்…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
LikeLiked by 1 person
வருகைக்கு நன்றி. உங்கள் பதிவையும் சற்றுமுன் பார்வையிட்டேன்.பளிச்சென்றிருந்தன படங்கள்.
LikeLike
ஆஹா! என் நண்பர்கள் எல்லோரும் இப்போது உங்கள் நண்பர்களும் ஆகிவிட்டார்கள்.
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
LikeLiked by 1 person
நன்றி. உண்மைதான். நண்பர்கள் குழாம் பெருகிவருகிறது. உங்களுக்கும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
LikeLike