முன்ன மாதிரியா இருக்கு காலம்
அலுத்துக்கொண்டாள் அன்று பாட்டி
காலங்கெட்டுப்போய்க் கெடக்குடி
எப்போதும் எச்சரித்தாள் அம்மா
நாசமாப்போன காலத்துல
எவன நம்பறது
என்னதான் செய்யறது
கவலை விரித்தது வலை அப்பாவுக்கு
காலங்காலமாய்க் கடுப்படிக்கும்
காலந்தான் சரியாகிவிடுமா
சதிசெய்தே உடன் வருமா
**
நாசமாப் போச்சா காலம்…? அப்போ சரி தான்…
LikeLiked by 1 person
நாசமாகச் சிலருக்கும், பாசமாகச் சிலருக்கும் போய்க்கொண்டிருக்குது, காலம்! வருகைக்கு நன்றி!
LikeLike
உங்கள் பதிவுக்கு எளிதில் பின்னூட்ட மிட முடியாதோ என் மின் அஞ்சல் முகவரி கேட்கிறதே சாக்ரடீஸ் காலத்திலிருந்தே இந்த சலிப்பும் அலுப்பும் தொடர்கிறது வாழ்த்துக்கள் நான் இப்போது உபயோகிப்பது கூகிள் முகவரியே
LikeLike
வருகைக்கு நன்றி. நானும், சில வலைப்பக்கங்களில் பின்னூட்டமிட முயற்சிக்கையில் இந்தச் சிக்கல்களைச் சந்திக்கிறேன். wordpress Blogger-களிடையே இந்தச் சிக்கலா எனத்தெரியவில்லை. இந்நிலையில் Google மூலம் பின்னூட்டிவிடவேண்டியதுதான்!
LikeLike