அரைவயிறு குறைவயிறாக
அலைந்து திரியும் தெருநாய்களை
மனதினில் எப்போதாவது நிறுத்திச்
சிந்தித்ததுண்டா புத்திசாலி மனிதரே
அவனியில் அவதரித்த
அந்தப் புண்ய தினத்திலிருந்து
அடி உதை வசவுகளைத் தவிர
வேறெதையும் சரியாக உண்டதில்லை
உமது வசவுகளின் கீழ்மையை
ஒருபோதும் அவை அறிந்ததில்லை
ஆறாவது அறிவையோ
அதற்கும் மேலேயோகூட
நீர் கொண்டிருந்தாலும்
அந்த அப்பாவி ஜீவன்களும்
அவ்வப்போது உம்மைத் திருப்பித் திட்டுவதை
நீரும்தான் அறிந்திருக்கமாட்டீர்
**
அருமை
Sent from my iPhone
>
LikeLike
சரி தான்…!
LikeLike
உண்மை கவிதை அருமை..வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.
LikeLike
அழைப்பிற்கு மனமார்ந்த நன்றி. வருகிறேன். அனைவரையும் சந்திக்க விருப்பம்.
LikeLike