சரியான இடம் போக
சரியான நேரத்தில்
சரியான பஸ் பிடித்து
சரியாக சில்லரை கொடுத்து
சரியான டிக்கெட் வாங்கி
சரியான இடம் தேடி உட்கார்ந்தேன்
சரியாகத்தான் இருந்தது பயணம்
சரியான இடம் வருமுன்
தவறான இடத்தில் இறங்கிவிட்டேன்
சரி போகட்டும்
சரியாக நமக்கு எதுதான் நடந்திருக்கிறது ?
**