சொத்துபத்து செல்வ போகம்
தீராது கொண்டிருப்பார் மோகம்
பற்றிக்கொள்ளும் பேராசை
பழக்கப்பட்ட பழங்காலத்து ஓசை
ஓட்டுகிறார் இப்படியே காலத்தை
கேட்டிலார் விதியின் ஓலத்தை
விடாது தொடரும் வினை நித்தம்
முற்றிப்போய்விடும் பித்தம்
ஓய்ந்துவிடும் ஒருநாள் சத்தம்
எல்லாம் அப்பனே, உன் சித்தம்
**