பச்சைக்கிளி பாடுது..

டெல்லியின் டிசம்பர்க் குளிரின்
நடுநடுங்கும் காலைப்பொழுதினில்
ஒரு நாளும் இல்லாத திருநாளாக
எங்கள் வீட்டுப் பக்கத்துப் பார்க்கில்
கிளிகள் வந்தமர்ந்தன பாடின
காக்கைகளையும் புறாக்களையும்
பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டதே
எங்கே போயின கிளிகளெல்லாம் என்கிற
எண்ணம் சில நாட்கள் முன்புதான் வந்தது
ஆண்டுதோறும் ஆண்டாளின் இளந்தோளில்
அமர்ந்து மகிழ்ந்திருக்கும் பச்சைக்கிளியே
மார்கழித் திங்கள் பிறக்க
மாதவனைப் பாடி மகிழ
இன்னும் இரண்டே நாள்தான்
எனத் தெரிவிக்கத்தானா
இந்தக் காலைக் கூப்பாடு ?

**

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in கவிதை. Bookmark the permalink.

6 Responses to பச்சைக்கிளி பாடுது..

 1. கிளிகள் மாதங்களில் நான் மார்கழி என்ற மாதவனின் புகழ்பாட கட்டியம் கூறியதா?
  அருமை.

  Like

 2. ranjani135 says:

  என்ன ஒரு அழகான கற்பனை!
  மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்!

  Like

 3. chidhu says:

  அருமை > பொருத்தமான தருணத்தில், நல்லதொரு கற்பனை . இன்று மார்கழி பிறந்துவிட்டது . திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் , நமது கோவிலில் தொடங்கி விட்டோம். இந்த கவிதையை சுட்டுக்கொள்கிறேன் ஐயா நமது தமிழ் ச்சாரல் மூலம், தூரல் போட வைக்க…..

  Like

  • aekaanthan says:

   சித்து சார், சுட்டுக்கொள்ளுங்கள். மார்கழி முழுதும் பக்திச்சாரலாயிருக்கட்டும். உங்களின் பின்னூட்டம் காங்கோவை நோக்கி என் மனதைத் திருப்புகிறது.

   திருமதி ரஞ்சனி & ‘மாதவனின்’: பாராட்டுக்கு நன்றி.

   Like

 4. hi sir..this poem has become my favorite…every time i visit yr blog..i make sure that i start with this poem…marvelous…simple yet beautiful..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s