சின்னதாக ஒரு கேள்வி

காட்டிக்கொள்ளத்தான் எப்போதும் முயற்சி
பலவற்றை உலகத்திற்காகவும்
சிலவற்றை நமக்கு நாமேகூட
காட்டிக்கொள்ளத்தான்
எதையாவது எப்படியாவது நிறுவத்தான்
எப்போதும் இந்த மெனக்கெடுதல்
இப்படி யார்யாரிடமோ எதெதையோ
காண்பிக்க முயற்சித்துக்கொண்டிராமல்
உள்ளதை உள்ளபடியே ஏற்று
வெறுமனே இருக்கமுடியுமா
அலட்டிக்கொள்ளாமல்
சும்மா கிடக்கமுடியுமா
கிடந்துகொண்டே மானுட வாழ்வைக்
கடக்கமுடியுமா

**

One thought on “சின்னதாக ஒரு கேள்வி

Leave a comment