இரவின் ஆதிக்கம் பரவிய பின்னும்
தூக்கம் வராமல் போர்வைக்குள்
கிளுகிளுத்து மகிழ்ந்தாடும் குழந்தைகள் போல்
இருண்ட கருங்காற்றோடு ரகசிய உறவாடும்
பச்சை மரங்கள் பரவிக்கிடக்கும் வனாந்திரம்
மாசிலா நிலவும்
மாயாஜால நட்சத்திரங்களும்
ஜொலிஜொலித்து ஒளிசிந்தும்
இரவு வானத்தின் யவனப் பேரழகில்
மயங்கிக் கிறங்கி
சயனித்திருக்கும் பூமி…
————————-
காங்கோவிலிருந்து வெளியாகும் ‘தமிழ்ச்சாரல்’ மின்னிதழ்(டிசம்பர் 14)-இதழில் வெளிவந்துள்ளது. நன்றி:தமிழ்ச்சாரல், கின்ஷாசா.
**
இயற்கையை ரசிக்கும் கவிதை அருமை.
LikeLike
அழகான கற்பனை! வாழ்த்துக்கள்!
LikeLike
Yes very good. bot mother earth can get angryalso at the appropriate time.
LikeLike