நாளைக்குப் பார்க்கலாம் என்றாய்
சரி என்று நானும்
தலையாட்டிவைத்தேன்
நாளையும் வந்தது
உன்னைத்தான் காணவில்லை
வெட்டவெளியே துணையாக
வெறுமனே நின்றுகொண்டிருக்கிறேன்
பார்ப்பதற்கு ஏதுமில்லை
பகிர்ந்துகொள்ள யாருமில்லை
**
மேற்கண்ட கவிதை காங்கோவிலிருந்து வெளிவரும் ‘தமிழ்ச்சாரல்’ மின்னிதழின் டிசம்பர் 2014 இதழில் வெளியாகியுள்ளது.
நன்றி: தமிழ்ச்சாரல், கின்ஷாசா, காங்கோ.
பகிர்ந்து கொள்ள துணை வேண்டும்.
LikeLike