பள்ளிக்கூடம் விட்டாயிற்று
திடீரென வெடித்த சந்தோஷத்தில்
புதுவெள்ளம்போல் வெளியே பாயும்
சிறுவர் சிறுமியர் கூட்டம்
முதுகில் அசையும் சுமையும்
வாயில் அரட்டைமணமுமாய்
வீடு நோக்கிச் சீராக
விரையும் பெண்பிள்ளைகள்
கொத்துக்கொத்தாக நின்றுகொண்டு
சைக்கிளின் முதுகில் ஒட்டிக்கொண்டு
வண்டுகளாய் அங்கங்கே வட்டமடித்துக்
கதைத்துக்கொண்டிருக்கும் பசங்களின்
வீடு திரும்பும் படலம்
இரவு வந்து விரட்டுமுன்
ஒருவழியாக ஆரம்பமாகிவிடுமா?
**
பள்ளிக்கூடம் விட்டாயிற்று
திடீரென வெடித்த சந்தோஷத்தில்
புதுவெள்ளம்போல் வெளியே பாயும்
சிறுவர் சிறுமியர் கூட்டம்//
கவிதை நன்றாக இருக்கிறது. பள்ளி முடிந்தவுடன் வகுப்பறையிலிருந்து சந்தோஷ துள்ளலுடன் ஓடி வந்த காலம் நினைவுக்கு வருகிறது.
LikeLike
that is the reason why we remember the names of our primary school teachers mr eekanthan
LikeLike