உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர்நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்..!
இப்படி ஆரம்பிக்கும் பாடல் ஒன்று வருகிறது தெனாலிராமன் படத்தில். மொகலாய மன்னன் பாபரின் கவனத்தை ஈர்க்க அவன் வரும் வழியில் தென்னங்கன்றுகளை நட்டுக்கொண்டே தெனாலிராமன் பாடும் பாட்டு இது !
உல்லாசம் தேடுவோரும், உல்லாசத்தை விடுத்து வேறொன்றை நாடுவோரும், ஒன்றுமே தெரியாமல் உழலுவோரும் ஒரு நாள் போய்த்தான் சேருவார்கள். எங்கிருந்து வந்தோமோ அங்கே திரும்பாமல் வேறென்ன செய்துவிடுவான் மனிதன் இவ்வுலகில்? சாதனைகள் பல புரிவான். நானே அனைத்தும் என்று சூளுரைப்பான். சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் கூட சர்வ சாதாரணமாகப் போய்வருவான். ஆனால், ’அங்கிருந்து’ அழைப்பு வந்தபின் வரமாட்டேன் என்று சொல்லிவிடுவானா அவன்? அப்படிச் சொன்னால்தான் தப்பித்துவிடமுடியுமா? ”இரவல் தந்தவன் கேட்கின்றான்..அதை ’இல்லை’ என்றால் அவன் விடுவானா?” (கண்ணதாசன்).
வாழ்நாள் சாதனையாளனோ, ஊழ்நாள் போதனையாளனோ, இல்லை, வெறுமனே முழுநேர வேதனையாளனோ, எவனும் முடிவில் கடையை மூடத்தான் வேண்டும்; அங்கே போய்த்தான் தீரவேண்டும். முனகிப் பிரயோஜனமில்லை. முடிவின்றி வேறில்லை. அந்த ஆரம்பமே கூட தன் முன்னுரையில் முடிவைத்தான் கருவாகக் கொண்டிருந்தது. இதெல்லாம் சிலசமயம் கண்கூடாகத் தெரிந்தாலும், வாழ்க்கை எனும் ஆசிரியன் அவ்வப்போது அவனுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுத்தாலும், மனிதனுக்கு ஏதேனும் புரிகிறதா என்றால் பெரும்பாலும் ‘இல்லை’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தான் என்னவோ இந்த பூமியில் சாசுவதம் போன்று, தன்னை அழிக்க எந்த சக்தியும் இல்லை என்பதுபோல என்னென்ன நோட்டம் விடுகிறான்.. எப்படி எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறான்.. எத்தகைய கூட்டமெல்லாம் சேர்க்கிறான். பின் தொடரும் முடிவின் நிழல், சில சமயங்களில் முன் விழுந்தும்கூட அவனை எச்சரிக்கிறது. புரிந்து கொண்டால்தானே ? அதற்கெல்லாம் ஏது நேரம் இந்தப் பாவி மனிதனுக்கு? எப்போதும் எதற்காவது பரபரத்துக்கொண்டிருப்பவனுக்கு, ஆழத்தில் குறுகுறுக்கும் உண்மை புரியவா போகிறது?
* *
purigiradhu, purind than odi kondu irukkirom!
LikeLike
வாழ்க்கை எனும் ஆசிரியன் அவ்வப்போது அவனுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுத்தாலும், மனிதனுக்கு ஏதேனும் புரிகிறதா என்றால் பெரும்பாலும் ‘இல்லை’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.//
உண்மைதான் தெரிந்தாலும் மனிதமனம் மயக்கத்தில் இருக்கே!
LikeLike