வயதான காரணத்தினால்
வாடிப்போயிருக்கிறாய்
வந்துபோகும் உன் குழந்தைகளை
சிந்தை இரங்கப் பார்க்கிறாய்
படபடப்பாக வருகிறது
படுத்தாலும் தூக்கம் வரவில்லை
என்கிறாயே அம்மா
உன் சின்ன வயசிலேயே கூட
நீ எப்போது தூங்கினாய்
எப்போது விழித்தாய் என்பதெல்லாம்
தெரியாத ஜடமாக இருந்தேனே
இது வேண்டும் அதுவேண்டும் என்றிருந்தேன்
எது வேண்டும் உனக்கு எனத் தெரிந்திருந்தேனா
வாய் திறந்து நீதான் ஏதும் கேட்டிருப்பாயா
உனக்கென்று சுகங்கள் ஏதும் இருந்தனவா
ஒருபோதும் அறிந்திருக்கவில்லையே –
உன்னோடு சேர்ந்து வாழ்ந்த பிள்ளைதானா நான்
இந்தக்கால வீடுகளின் சொகுசு சாதனங்கள்
எதனையும் எளிதாக்கும் எந்திரங்கள் இருந்ததா
சமயற்கட்டில் நீ கோலோச்சிய அந்தக்காலத்தில்
எல்லாவற்றையும் உன் கையே அல்லவா செய்தது
என்றும் பழுதுபடாத எப்போதும் இயங்கும்
உன்னத எந்திரமாக
எதனையும் தீர்க்கும் மந்திரமாக
நீயேயல்லவா இருந்திருக்கிறாய்
செயற்கரிய காரியங்கள் செய்துவிட்டு
செய்வதறியாது குழம்பி நிற்கிறாயே
பலமிழந்துவிட்ட உடம்பு
பதற்றத்தைத் தருகிறதா
முன்னெப்போதும் போல்
முனைந்து ஏதும் செய்ய முடியவில்லையே
என்கிற கவலை மனதைப்போட்டு அரிக்கிறதா
ஓரங்கட்டிவிட்டார்களோ என்கிற சந்தேகம்தான்
ஈரம் கசியவைக்கிறதா உன் கண்களில்
எதையாவது வாய்திறந்து சொல்வாயா
ஏக்கத்தோடு பார்த்துத்தான் நிற்பாயா ?
**
I can only weep….i lost her already….I am a sinner
LikeLike
அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அந்த வார்த்தையை உங்கள் அம்மாவே அங்கீகரிக்க மாட்டார்.
எல்லோருக்கும் அம்மாவைப்பற்றிய வாஞ்சையான நினைவுகள் ஆழத்தில் உண்டு. அம்மாவை நன்கு கவனித்துக்கொள்ளவேண்டும்; அம்மாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற சிந்தனை இருக்கிறது; இருந்திருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு, சூழ்நிலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும் இந்த உலகில். நானும் இத்தகைய இக்கட்டான சூழலில் இருப்பவன் தான். என்ன செய்வது? அம்மாவிடமிருந்து நிறையப் பெற்றிருக்கிறோம். அவரோ நம்மைப் பெற்றிருக்கிறார்.
LikeLiked by 1 person
Sooper
LikeLiked by 1 person
good poem.. mr. aekanthan keep it up…
LikeLiked by 1 person
அம்மா கவிதை மனதை நெகிழ வைத்துவிட்டது.
LikeLiked by 1 person