எதையும் அடித்துச் செல்லும் காலம்
எழுதிச் செல்கிறது தலையில் நரை
கண்களில் விழுகிறது மெல்லிய திரை
இளமையின் சுகந்தமோ அமர கீதமாய்
இழைந்தாடுகிறது எப்போதும் மனவெளியில்
இருப்பினும் விடாது நிரடுகிறது நிதர்சனம்
வாழ்வின் அந்தரங்க சோகங்களின் கலகம்
தவறாது சொல்லிவருகிறது தினமும்
இருப்பதற்கு லாயக்கில்லை இவ்வுலகம்
**
nice viji anna
LikeLike
who said old is gold. not really…
LikeLike