நாயென்றும் பேயென்றும்
நாக்குக் கொழுப்பில் நாளெல்லாம்
ஏதேதோ சொல்லி ஏசுகிறீர்
பேய்களைப்பற்றிய உமது ஞானம்
எதுவரையோ யானறியேன்.
ஏதோ கொஞ்சம் எப்போதோ
தின்னக் கொடுத்துவிட்டீர்
என்பதற்காகத்தானே இப்படி
வாலை ஆட்டி நிற்கிறது
உமது அழகுத் திருமுகத்தை
உவகையோடு பார்க்கிறது.
அதனிடம் ஒளிவிடும்
மாசில்லா அன்பை
அளவில்லா விசுவாசத்தை
உமக்குள் காணமுடியவில்லையே
என்கிற ஆதங்கத்திலா
அந்த அப்பாவி ஜீவனின் பெயரையே
வசைமொழியாக்கி
இசைத்துப் பார்க்கிறீர் தினமும்?
**
ஏன் இப்படி ஒரு கோபம் 🙂
LikeLiked by 1 person