கண்காணா மரத்தினிலே
வாகாக அமர்ந்து கொண்டு
களிப்புடனே வாய்திறந்து
க்வீக்..க்வீக்..க்வீக் என்றெல்லாம்
ஏதேதோ நாத அலைகளை
எழுப்பும் சின்னஞ்சிறு குருவியே
என் சிந்தனையின் வழிமறித்து
என்னதான் சொல்ல வருகிறாய்?
எண்ணமெல்லாம் எண்ணியதால்
என்ன பெரிதாக நடந்துவிட்டது
இந்தப்பேருலகில் என்கிறாயா?
எந்திரமாய் மாறி எங்கெங்கோ
எகிறிவிட்டிருக்கும் வாழ்வை
இடைமறித்து வழிதிருப்பி
எப்போதோ தொலைந்துபோன
இயற்கையின் பாதையைக் காண்பிக்கிறாயா?
**
Namaskaram.
Please give your present contact number.
Ramanujam
LikeLike
எப்போதோ தொலைந்துபோன
இயற்கையின் பாதையைக் காண்பிக்கிறாயா?//
ஆம், உண்மை அதைதான் சொல்லுது குருவி.
LikeLike