செவிக்கு உணவில்லாதபோது சிறிது
வயிற்றுக்கும் தரலாம் என்றான் அவன்
ரொம்பச் சரி
நாக்கின் பசி பற்றி ஏதேனும் நவின்றானா ?
வயிறு ஒன்றும் அடிக்கடிப் பசிப்பதில்லை
எப்போதும் பசி தணியாமல்
ஒரு போதும் அசறாது எதற்காவது
அலைந்துகொண்டே இருக்கும் நாக்கை
எப்படி மடக்குவது
எதைத்தந்து அடக்குவது
நாக்குப் பசிக்குத் தரும் அனைத்தும்
யானைப்பசிக்குச் சோளப்பொறியாகி விட்டதே!
**
ithanai naal indha kavignan engirundhan, kallukkul theraiyaga! super
LikeLike
க்யூபாவில் இருக்கும்போது (2008) எழுதிய கவிதை. கண்டெடுத்து வலைப்பூவில் இட்டேன்.
LikeLike
பசியடங்கா நாவின் தீவிரம் குறித்த கவிதை சிந்திக்கவைக்கிறது. பாராட்டுகள்.
LikeLike