பெருமை பொங்கி வழியும் இப்பேருலகில்
தான் ஒன்றுமே இல்லையோ
என்கிற கலக்கம் கொஞ்ச நாளாய்
அதுவாக இதுவாக எதுவாகவோ எல்லாம்
இருப்பதாகக் காட்ட முயன்றான்
முகநூலுக்குள் நுழைந்தான்
அவசரமாக அகத்தைத் தேடும்
அயராத முயற்சியில்
நிலைத்தகவல்கள் இத்யாதிகள்
அலை ஏதும் கிளப்பவில்லை
ட்விட்டருக்குள் புகுந்து
லைட்டரை ஆன் செய்தான்
பத்தியது கொஞ்சம்
புகையும் வந்ததுபோல் இருந்தது
புகைவளையத்திற்குள்
துழாவினான் தன் முகப்பரப்பை
தேடினான் இல்லாத ஒளிவட்டத்தை
புகைமண்டலம் கலைய ஆரம்பித்தது
வெற்று வெளிதான்
விஷமமாய்ச் சிரித்தது
**
நல்ல காலம். முகப்புத்தகத்திற்குள்ளோ, டிவிட்டருக்குள்ளோ சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டான் 🙂
LikeLike
தப்பித்தவன் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறான்! எங்கு போய்ச்சேருவானோ இவன்!
LikeLike