எட்டிப்பறி
தட்டிப்பறி
இழுத்துப் பறி
அடித்துப் பறி
எப்படியோ பறி
வாயில் போட்டுக்கொள்
தின்று களி
இப்படித்தான் எப்போதும்
வாழவேண்டுமா
பழத்தைத்தான் பறிக்கிறேன் என்று
மரத்தையே துவம்சம் செய்யாமல்
சற்றுத் தூர நின்று
பழுத்துக் குலுங்கும் மரத்தை
ஆசையாகப் பார்க்கலாம்
அதனழகில் ஒன்றி
அதுவாகவேகூட ஆகிவிடலாம்
பசி தீர்ந்துவிடுமா என்று படபடக்கிறாய்
தீர்க்கவேண்டிய அவசியமில்லாது
பசியற்ற ருசியற்ற
பவித்ரமான நிலை ஒன்றுக்கு
அழைத்துச் செல்லக்கூடும் அது
அறிந்தே மாறிட அவகாசம்
அதற்கேற்ற உத்வேகம்
இருக்கிறதா உன்னிடம்?
**
அருமை ஐயா !
இந்த கவிதை சொல்லாமல் நிறைய சொல்கிறது…………………….
Great
அன்புடன் Chidhu Dover Cosmetics Ltd.,
Kinshasa, D.R.Congo
+243999938871,+243819938871,+243858938871
LikeLike
super viji anna
LikeLike
நன்றி உஷா. உன்னைப்போன்ற ஒரு சிலர் இக்கவிதையின் ஆன்மாவை உள்வாங்கியிருப்பது தெரிகிறது.
LikeLike
சித்து சார் !
நன்றிகள் பல.
LikeLike