எதற்கெடுத்தாலும் கடவுளை வேண்டிக்கொள்வாயா? உன் புலம்பலைக் கேட்பதைத்தவிர அவருக்கு வேறு வேலை இல்லையா, என்ன? என்றான் அவன்.
வேண்டினால் என்ன? எனக்கு அப்படித் தோன்றுகிறது. வேண்டுகிறேன். அவர் கேட்கட்டுமே? கடவுள் மனித அம்மா அல்ல. ‘போய்த்தொலை சனியனே! எப்பப்பாத்தாலும் தொண தொணன்னுகிட்டு’ என்று அடித்துவிரட்ட. அவர் தெய்வம். எல்லாவற்றையும் அக்கறையோடு, பொறுமையோடு கேட்பார்- இவன் சொன்னான்.
கேட்கிறாரா? கேட்டு என்ன செய்கிறார்? ஏதாவது நடந்திருக்கிறதா அதனால்?
கேட்கவில்லை; அவர் ஒன்றும் செய்யவில்லை என்பது உனக்கு எப்படித் தெரியும்? அவரது செய்கைகள், சிந்தனைகள் சூட்சுமமாக அல்லவா இருக்கும்? உனக்குப் பக்கத்திலிருப்பவன் என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான், செய்தான் என்பதே உனக்குத் தெரியமாட்டேன்கிறதே! கடவுளுடைய சிந்தனை, செய்கைபற்றி நீ எப்படித் தெரிந்துகொள்வாய்?
அது சரி! என்றான் அலுப்புடன் அவன்.
**
#உனக்குப் பக்கத்திலிருப்பவன் என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான், செய்தான் என்பதே உனக்குத் தெரியமாட்டேன்கிறதே! #
அவன் நமக்கு நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் தெரிகிறதே ,கடவுள் என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?
LikeLike