என்னென்னவோ

என்னென்னவோ சொல்கிறான் மனிதன்
என்னென்னவோ செய்கிறான்
என்னென்னவோ செய்துவிட்டதாகவும்
எண்ணிக்கொள்கிறான்
இன்னும் என்னென்னவோ
செய்தும் விடுவானாம்
எல்லையே இல்லையாம்
அவனுடைய செயல்திறனுக்கு

மாலையில் மெதுவாகக் கீழிறங்கும்
செவ்வாரஞ்சுப் பந்தை
சற்று நேரத்திற்குத்
தன் தலையில் தாங்கி நிற்கிறது
தூரத்துப் பனைமரம்

**

5 thoughts on “என்னென்னவோ

 1. let us admit that MANITHAN has done many useful…good things… our younger generation would do more… let us not lose hope mr.AEKANTHAN.

  Like

 2. துளசி: ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சார்..

  கீதா: வாவ்….செம….சிம்ப்ளி சூப்பர்..எப்படி இப்படி எல்லாம் அசத்தறீங்க….ரசித்தேன்…உங்களின் இந்தக் கவிதை வரிகளை உங்கள் அனுமதியுடன் நான் பாதி எழுதி வைத்திருக்கும் ஒரு கதைக்கு எடுத்துக்கலாமா சகோ…

  Liked by 1 person

 3. @ துளசிதரன், கீதா :

  @துளசி, @ கீதா: பழையதைப்போய்ப்பார்த்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி.
  நான் form -ல் இருக்கும்போது இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன்! இதன் கரு காங்கோவின் கின்ஷாசா நகரம். அங்கே எங்கள் வீட்டிலிருந்து மாலையில் மறையும் கதிரவன் துல்லியமாய்த் தெரியும் ஆரஞ்சுப்பந்தாய். தூரத்து பனைமீது சிறிது உட்கார்ந்துவிட்டுப் படுக்கப்போகும்! அதனை ரசித்ததின் போதையே மேலே கண்ட கவிதை.

  @ கீதா:
  இதென்ன கேள்வி? உங்களுக்கில்லாததா! தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். பாராட்டிக்குளிர்வித்ததற்கு நன்றி.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s